வெசாக் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ விஜேராம இல்லத்திற்கு வெளியில் கடலை தன்சல் ஒன்றை நேற்று (05) நடத்தினார். இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் முரண்பட்டு, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவங்சவின் மனைவி சஷி , தன்சலில் பங்கேற்றிருந்தார்.
Author: admin
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்வதற்கு முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 6 பேர் இந்தியா செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மன்னார், எருக்குழும்பிட்டி கடற்பகுதியில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 06 பேருடன் டிங்கி படகு ஒன்றை கைப்பற்றினர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் வெசாக் பௌர்ணமி தினத்தையிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 14 ஆண் கைதிகள் நேற்று (05) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் பௌர்ணமி தினத்தில் வருடாவருடம் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுவரும் நிலையில், இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 988 கைதிகளை விடுதலை செய்யும் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகள் 14 பேரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பிய பின்னர், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய ஆளுநர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, ஆளுநர்களின் தரப்புகளும் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளன. வட மாகாண ஆளுநராக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட உள்ளதாக, கடந்த நாட்களில் தகவல்கள் வெளியாகின. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், ஆளுநர் பதவிகளைக் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாகாண சபைகள் கலைக்கப்பட்டதன் பின்னர், அவற்றின் நிர்வாகம் ஆளுநர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு, ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர், தம்மை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்ததாக, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தின் பின்னர், ஆளுநர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதால், தம்மை பதவி விலகுமாறு, ஜனாதிபதி செயலகத்தின்…
ஹப்புத்தளை பத்கொட பகுதியில் இன்று அதிகாலை எரிபொருள் ஏற்றி சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் பௌசர் வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, காயமடைந்த குறித்த வாகனத்தின் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்தினால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டிலுள்ளவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ் விபத்தால் டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்கள் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளனர். அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த தொகுதியில் இல்லாமல் வேறு தொகுதியில் பணியாற்ற முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்ப இராஜாங்க அமைச்சரின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து சகல கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாகவும், அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கொவிட் -19 இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், கொவிட் -19 தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், கடந்த சில மாதங்களில், கொவிட் வைரஸை எதிர்கொள்வதற்கான குறிப்பிடத்தக்க நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களிடையே உருவாகியுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 03 ஆண்டுகளில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், உலக சுகாதார நிறுவனம் கொவிட் தொற்றுநோய் நிலைமையை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், கொவிட் -19 இன் தற்போதைய பரவலைப் பற்றிய விரிவான ஆய்வுக்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் குழு, இது இனி உலகளாவிய…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 2,249 குடும்பங்களைச் சேர்ந்த 9,276 நபர்கள் வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, பதுளை, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் குருணாகல் போன்ற மாவட்டங்களே சீரற்ற கால நிலையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் அனர்த்தம் காரணமாக 3 வீடுகள் முற்றாகவும் 82 வீடுகள் பகுதிளவிலும் சேதமடைந்துள்ளன. 71 குடும்பங்களைச் சேர்ந்த 242 நபர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டும் உள்ளனர்.
ஜூன் மாதம் முதல் எரிபொருள் விற்பனைக்கான விலை வரம்பை அறிவிக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்குக் காரணம், மே மாத இறுதியில் இருந்து, சீன சினோபேக் மற்றும் அமெரிக்க ஷெல் நிறுவனங்கள் இந்த நாட்டில் எரிபொருளை விநியோகிக்கத் தொடங்கின. அந்த நிறுவனங்கள் சந்தைக்குள் நுழைந்ததன் மூலம் இலங்கையில் எரிபொருள் விநியோகம் நான்கு நிறுவனங்களின் கீழ் நடைபெறுகிறது. அந்த நிறுவனங்கள் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சிலோன் இந்தியன் ஆயில் கம்பெனி, சினோஃபாக் மற்றும் ஷெல். இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் முதலில் அறிவித்திருந்த போதிலும், தற்போது அந்த நிறுவனம் தயக்கம் காட்டி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நான்கு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைக் குறைப்பதற்காக எரிபொருளின் விற்பனை விலை வரம்பை அறிவிக்குமாறு ஷெல் நிறுவனம் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனை மையமாக வைத்து டீசல், பெற்றோல்,…