களுத்துறை தெற்கில் உள்ள தங்குமிடமொன்றுக்கு அருகாமையில் புகையிரத பாதையில் மர்மமான முறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், நாகொட பிரதேசத்தில் வசிப்பிடமாக கொண்ட 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் நேற்று முன்தினம் (06.05.2023) பிற்பகல் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்துள்ளமை சிசிடிவி காட்சி விசாரணைகளில் தெரியவந்துள்ளது.நேற்றுமுன் தினம் மாலை 6.30 மணியளவில் குறித்த இடத்திற்கு வந்த குழுவினர் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்தந்த ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக இருந்தமையினால் தனது நண்பியின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இரண்டு அறைகளை முன்பதிவு செய்து…
Author: admin
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரை பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த பெண் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களிடம் 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.பண மோசடியில் சிக்கிய இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவுக்கு அனுப்பிய முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் ருமேனியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் மாதாந்தம் ஒரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.நான்கு மாதங்களாக பணத்தை பெற்றுக்கொண்டு குறித்த பெண் தம்மை ஏமாற்றி வந்த நிலையில் பீரோவில் முறைப்பாடு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த இளைஞர்களின் கடவுச்சீட்டுகள் மற்றும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பெண் எடுத்துச் சென்றதாகவும், அவற்றை மறைத்துவைத்து ஏமாற்றி வருவதாகவும்…
இலங்கை போக்குவரத்து சபை எக்காரணம் கொண்டும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள டிப்போக்கள் சிலவற்றுக்கு புதிய பஸ்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை (07) தெரிவித்தார். பஸ் விநியோகம் தொடர்பில் அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றமும் இடம்பெற்றது. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில், இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, கொடகவெல, பலாங்கொட மற்றும் கலவான ஆகிய டிப்போக்களுக்கான புதிய லங்கம பஸ் விநியோகம் நேற்று இரத்தினபுரி புதிய நகரில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, விநியோகிக்கப்பட்டுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 23 ஆகும். இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் முறையை QR முறைக்கு…
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் களப்பணிகளில் இருந்து விலகி அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். தனது அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை புலனாய்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கோசல ரங்கநாத் தெரிவித்துள்ளார். நாரம்மல பிரதேசத்தில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளை தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் மூவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த தினம் இலண்டன் சென்றிருந்த நிலையில் இன்று காலை ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் மூன்று மாத கால சேவை நீடிப்பு பெற்ற பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் மேலும் ஒரு தவணை நீடிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட மூன்று மாத சேவை நீடிப்பு ஜூன் 26 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்தப் பதவிக்கு தகுதியுள்ள பல மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் தொடர்பான சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்படாததால் தற்போதைய பொலிஸ் மா அதிபரின் சேவை மீண்டும் ஒருமுறை நீடிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இதன்படி தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு அடுத்த வருடம் வரை சேவை நீடிப்பு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சீனி விலை கிலோவுக்கு 25 ரூபா படியும், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 ரூபா படியும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து…
தென்கிழக்கு வங்கக் கடலில் பயணிக்கும் பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் கடற்படை கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு நாளை (08) மாலை 3 மணி வரை அமலில் இருக்கும். தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை சுற்றி வளிமண்டலத்தில் தளம்பல் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் சூறாவளியாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, 5 – 10 வடக்கு அட்சரேகைகள், 90 – 100 கிழக்கு தீர்க்கரேகைகள் மற்றும் 1 – 4 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 85 – 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம் என மீனவ மற்றும் கடற்படை சமூகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை உடனடியாக நிலம் அல்லது பாதுகாப்பான…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (7) பிற்பகல் வெனிவெல்கொல பிரதேசத்தில் வேன் ஒன்று காருடன் மோதியதில் ஒரு சிறுமி உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். மருத்துவமனை. காயமடைந்தவர்களில் 08, 31, 39, 70 மற்றும் 72 வயதுடைய ஒரு ஆண், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வேனில் அத்தனகல்ல கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் வேனின் பின்பகுதியில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேன் மீது கார் மோதியதில், வேன் மூன்று முறை சுழன்று இடதுபுறம் இருந்த இரும்பு வேலியில் மோதி கவிழ்ந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். வேன் வேலியில் மோதியதில், 8 வயது சிறுமி ஜன்னலுக்கு வெளியே தூக்கி வீசப்பட்ட நிலையில். மேலும்…