இன்று (09) 05 புதிய கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, இதுவரை பதிவாகியுள்ள கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672232 ஆகும்.
Author: admin
போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளைஞரே யாழ்ப்பாணம் நகரில் வைத்து செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை நேற்றிரவு 8 மணியளவில் வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளை இளைஞர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். பளை பகுதியில் வைத்து கடந்த வாரம் ஒருவர் 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டார். அவருக்கும் யாழ்ப்பாணம் நகரில் கைது செய்யப்பட்டவருக்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பாதுக்கை, வட்டரெக்க பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் கட்டிட பணியாளர் ஒருவருடன் வசித்து வந்த காதல் மனைவி எனக் குறிப்பிடப்படும் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் இன்று கைது செய்ப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண் சந்தேக நபர் குறித்த கட்டிட பணியாளரின் முன்னாள் மனைவி என்றும் மற்றயவர் அவரின் தம்பி என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண் சந்தேகநபர் கட்டிட பணியாளரை விவாகரத்து செய்து சுமார் மூன்று வருடங்கள் ஆவதாகவும் அதனால் தான் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாகவும் கட்டிட பணியாளர் வழங்கிய சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (09) காலை குறித்த கட்டிட பணியாளர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சந்தேக நபர்களான முன்னாள் மனைவியும் அவரது தம்பியும், வீட்டிற்கு சென்று கொலையுண்ட பெண்ணிடம் பேசி, வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து கூரான கத்தியால்…
சந்தையில் சீனியின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறு வர்த்தக முதலீட்டு கொள்கை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். டொலரின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சீனியின் விலை உயரும் சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் ´அஸ்வெசும´ (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் ´அஸ்வெசும´ திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும் வழங்கப்பட இருப்பதோடு பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8,500 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினமும்(09. 05.2023) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 325.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 311.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 391.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து, ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க பயங்கரவாதத்திற்கான பொருட்கோடலை பயன்படுத்துவது, உண்மைத்தன்மை மற்றும் சட்டபூர்வத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் எதேச்சையான முறையில் சுதந்திரம் பறிக்கப்படுவதை தடுத்தல் மற்றும் தடை செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 விடயங்கள் குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சித்திரவதைகள் மற்றும் காணாமலாக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்தல், நீதியான வழக்கு விசாரணையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புனர்வாழ்வு சட்டமூலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு முழுமையாக பொருந்தவில்லை எனவும் ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது என திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்னாயக்கவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையின் நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின்போது, இந்தியாவால் வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர உதவியின் ஒரு பகுதியான, கடன் எல்லை வசதி கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த கடன் எல்லை வசதியில் சுமார் 350 மில்லியன் மீதமுள்ளன என்றும் அவை தேவைக்கேற்ப பயன்படுத்தப்படலாம்” என்று அவர் கூறியுள்ளார். எனினும், சந்தையில் அந்நிய செலாவணியின் கிடைப்பனவு அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டை விட தேவை அதிகமாக இல்லையென்றும் அவர் தெரிவித்தார். இதுவரை முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட வசதியை நீடிக்க இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கடந்த மார்சில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில்,…
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளின் முதல் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இணைய வழியில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் இந்தியா மற்றும் பிரான்ஸுடன் இணைந்து இந்த கூட்டத்தை ஒருங்கிணைக்கும் ஜப்பான், சீனா உட்பட அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதில் சீனா கலந்துகொள்ளுமா என்பது நிச்சயமற்றது என்று ஜப்பானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இருதரப்புக் கடனாளிகளுக்கு 7.1 பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டுமென அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன. அதில் 3 பில்லியன் சீனாவிற்கும், 2.4 பில்லியன் டொலர் பாரிஸ் கிளப்பிற்கும், 1.6 பில்லியன் டொலர் இந்தியாவிற்கும் வழங்கப்பட வேண்டும். இலங்கை தனது உள்நாட்டு கடனில் ஒரு பகுதியை மறுசீரமைப்பு செய்வதற்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. மே மாதத்திற்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரூ. 25,000 இற்கும் குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் பணி அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு தொடங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசிய திட்டத்திற்கு சேர்க்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் முதலில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கும் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒரு வீட்டிற்காக 2.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கைகளின்படி, 2015 2019 ஆம் ஆண்டில், பல்வேறு காரணங்களால் கட்டுமானத்தைத் தொடங்கி நிறுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 69000 ஆகும். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25000 வீடுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அந்த…