Author: admin

பொல்ஹாவெல மற்றும் பொத்துஹேர ஆகிய ரயில் நிலைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் மரமொன்று விழுந்தமையால் பயணித்துக்கொண்டிருந்த ரயில்பஸ் இன்று (15) தடம்புரண்டது. இதனால் வடக்குக்கான ரயில் சேவைகள் கோட்டையில் இருந்து பொத்துஹேர மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என ரயில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

இந்நாட்களில், கண் நோய்களின் எண்ணிக்கையும், கண் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவற்றில், கண்கள் தொடர்பான நோய்கள், கண் அரிப்பு, எரிதல் போன்றவை ஏராளமாக பதிவாகி உள்ளன. இந்திய ஊட்டச்சத்து நிபுணரான அஞ்சலி முகர்ஜி, கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க விட்டமின் ஏ கொண்ட உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மாம்பழம், பப்பாளி மற்றும் பால் போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது உடலுக்கு விட்டமின் ஏ சேர்க்கும் வழிகள் ஆகும். கண்கள் உடலின் மிகவும் உணர்திறன் வாய்ந்த பாகங்களில் ஒன்றாகும் மற்றும் கண்கள் அரிப்பு, சிவப்பு கண்கள் போன்ற நிலைமைகளை ஏற்படுத்தும். நச்சு விதைகளின் வெளிப்பாடு, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம், மேலும் இதுபோன்ற பல நிலைமைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Read More

எதிர்காலத்தில் பாடசாலைகளில் தொழுநோய் பரிசோதனைகளை நடத்துவதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது பாடசாலை மாணவர்களின் மனநலம் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு 500 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2022 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எனவும் பிரசாத் ரணவீர தெரிவித்தார். சம்பந்தப்பட்ட தொழுநோய் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும், பாடசாலைகளுக்குள் அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொள்ளமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார். ஒரு குழந்தை அடையாளம் காணப்பட்டால், அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார், எனவே நோயாளர்களை அடையாளம் காண மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். 80 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு தொற்றாத தொழுநோய் இருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். இந்த நோயை சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் ஆறு மாதங்களுக்குள் குணப்படுத்த முடியும் என பிரசாத் ரணவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

மலையக பகுதிகளில் உள்ள டைப் 3 ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்காக 1000 மெட்ரிக் தொன் அரிசி தாய்வான் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இந்திய தூதரக பணிப்பாளர் நாயகம் ஊடாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்றைய தினம் (15) உத்தியோகபூர்வமாக பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது. அரச சார்பற்ற நிறுவனமான ´Good Neighbors International’ இத்திட்டத்துக்கான பங்களிப்பை வழங்கியுள்ளது. இன்று வழங்கப்பட்டுள்ள அரிசி, மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட டைப் 3 ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளது. புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இத்திட்டம்…

Read More

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது அலகின் செயற்பாடு, இடைநிறுத்தப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் திட்டமிடப்பட்ட பாரிய பராமரிப்பு பணிகளுக்காக, எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு குறித்த அலகு இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளது. எவ்வாறாயினும் ஏனைய மின் நிலையங்களைப் பயன்படுத்தி மின்வெட்டு இன்றி மின் உற்பத்தி முகாமை செய்யப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்ளை தடுப்பதற்கு எதிராக போராட வேண்டிய அவசரத்தை வலியுறுத்தி ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். களுத்துறையில் 16 வயது சிறுமியின் மரணம் மற்றும் ஆசிரியர் ஒருவரால் 16 மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு ஆளானமை உள்ளிட்ட அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

களுத்துறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மேற்படி நபர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விடுதியின் உரிமையாளரின் மனைவியை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க களுத்துறை நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்தார். சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தோழி, தோழியின் காதலன் மற்றும் பிரதான சந்தேக நபரின் வாகனத்தைச் செலுத்தி சென்ற நபர் ஆகியோரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் இதன்போது உத்தரவு பிறப்பித்தார். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாத நிலையில், அவருக்கு முன்னதாகவே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

மூன்று மாகாணங்களின் ஆளுநர்களை இன்று (15) அமுலாகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்கள் புதன்கிழமை (17) நியமிக்கப்படவுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Read More

அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொது உதவிகள் குறைக்கப்படாமல் தொடர்ந்தும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, குறிப்பிட்ட சிலருக்கு அரசினால் வழங்கப்படும் சிறுநீரக உதவி, முதியோர் உதவி உள்ளிட்ட பொது உதவிகள் குறைக்கப்படாமல் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். நட்டஈட்டுப் பலன்களை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் இரண்டாவது உப ஆவணத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

தொலைபேசிகளை எப்போதும் சார்ஜ் செய்து தொடர்பு கொள்ளக் கூடியவாறு தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மோசமான காலநிலையின் காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசிகளை சார்ஜ் செய்து வைத்துக்கொள்வதுடன், இயங்கக்கூடிய ஓர் தொலைபேசி தொடர்பு இருந்தால் அனர்த்த நிலைமைகளின் போது உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் ஏழு மாவட்டங்களில் 19 பிரதேச செயலகங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதன்த ரணசிங்க தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அனர்த்த நிலைமைகளின் போது உடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இணைப்பு அவசியம் எனவும், அதனை சார்ஜ் செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Read More