கட்டுநாயக்காவில் இருந்து இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் துப்பாக்கியால் தாமதமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்காவில் இருந்து நேற்று பிற்பகல் இந்தியாவில் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர், தோட்டாக்களால் நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்தை வந்துள்ளார். இதன் போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பில் அவர் எடுக்கப்பட்டமையினால் விமானம் புறப்பட 4 மணித்தியாலங்கள் தாமதமடைந்துள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. விமானம், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு விமானத்திலும் இதுபோன்ற பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் பாதுகாப்பு அதிகாரி தனது துப்பாக்கியை விமானத்திலிருந்து வெளியே எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரி விமானத்தை விட்டு வெளியேற விரும்பினால் அவர் துப்பாக்கியை விமானத்தின் தலைமை விமானியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தியன் எயார்லைன்ஸின் AI-272 என்ற ஏர்லைன்ஸ் விமானத்தின் பாதுகாப்பு அதிகாரியே இவ்வாறு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு…
Author: admin
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழையுடன் ஈக்கள் போன்ற விலங்குகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளமையே இந்த நோய்களுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறு குழந்தைகளை இவ்வாறான நோய்களில் இருந்து பாதுகாக்க சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம் என அவர் தெரிவித்தார். இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் தொற்றுநோய்களின் பரவலும் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மேலும், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நேற்று 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் புதிதாக 08 கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16வயது), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன் (16வயது) ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இவர்கள் வீட்டிலிருந்து சென்று குறித்த கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும் போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மரண விசாரணையை தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த இளைஞர்கள் மரணமான சம்பவம் மட்டக்களப்பில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான படகின் மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த தமிழர்கள் 10 பேரை, மண்டபம் மெரைன் பொலிஸார் மீட்டுள்ளன. . ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை அருகே 1ம் எண் மணல் தீடையில் சனிக்கிழமை (06) வந்திறங்கிய இலங்கையைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 10 பேரை மெரைன் பொலிஸார் மீட்டனர். இதில், 75 வயது மூதாட்டி ஒருவரும் அடங்குகின்றார். இவர்களை, மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அங்கிருந்து இந்தியா வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்கள், இலங்கை முல்லைத் தீவிலிருந்து மே 5ம் திகதி சட்டவிரோதமான படகில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு அரிச்சல்முனை மணல் தீடையில் இறக்கிவிடப்பட்டதாகவும், இதற்காக ரூ.1 இலட்சத்துக்கு 50 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிடம், மத்திய, மாநில உளவுப்பிரிவு பொலிஸாரும் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்கள்…
கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இவர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் என தெரியவருகின்றது. கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட 10 நோயாளர்கள் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதில் ஓரளவு கண் பார்வை குறைவாக இருந்து சத்திரசிகிச்சை செய்த பின் முற்றாக பார்வை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட அனைவரும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தவிடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரட்னவிடம் வினவிய போது. இவ்விடயம் உண்மை ,தேசிய வைத்தியசாலையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி ப்ரெட்னிசோலோன் செய்தி கொப்பி மருந்தை பயன்படுத்தியமையால் ஏற்பட்ட சிக்கல் காரணமாகும் என நினைக்கின்றோம் என்றார். தற்போது…
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாட்டுக்கு இன்று (07) காலை சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே-649 விமானத்தின் ஊடாக அவர், டுபாயிலிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குப் பயணித்துள்ளார்.
களுத்துறை நகரில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடிகளை கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06) இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவியின் சடலம் பெற்றோரால் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி நேற்று மதியம் மற்றுமொரு இளம் ஜோடி மற்றும் இளைஞர் ஒருவருடன் தற்காலிக விடுதிக்கு வந்து மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. மாணவியுடன் வந்த மற்றைய ஜோடி, சிறுமியின் சடலம் கிடைப்பதற்கு சற்று முன்னர் விடுதியை விட்டு வெளியேறியதுடன், அவருடன் வந்த இளைஞனும் அறையை விட்டு வெளியேறியுள்ளார். சிறுமியின் உடலின் கீறல்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
பாணந்துறை, வாலான சந்தியில் இன்று (07) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற வெசாக் தோரணத்தை பார்வையிட வந்தவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்களை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டியின் சாரதி தூங்கியமையினால் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஜீப் வீதியில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த ஜீப்பில் கொழும்பில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த குழுவினர் பயணித்துள்ளதுடன் வீதியிலுள்ள மின் கம்பம் மற்றும் இரும்பு வேலி என்பனவும் விபத்தில் சேதமடைந்துள்ளன. ஜீப் வண்டி கவிழ்ந்ததில் காயமடைந்த 10 பேர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவர். விபத்தில் சிக்கியவர்கள் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் 85% சதவீதமானோர் கடனாளிகள் என இலங்கை மத்திய வங்கி அறிக்கை மூலம் தெரியந்துள்ளது. மேலும் நாட்டில் 68 % வீதமான மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 40 % வீதமானவர்கள் மருத்துவ செலவுகளை குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2022 ம் ஆண்டில் குழந்தை போஷாக்கின்மையில் இலங்கை தெற்காசியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் என இலங்கை மத்திய வங்கி அறிக்கை மூலம் தெரியந்துள்ளது.
கோதுமை மாவுக்காக வழங்கப்பட்டுவந்த இறக்குமதி தீர்வை சலுகை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. 15-16 ரூபாவாக இருந்த இந்த வரி கடந்த 2020 மார்ச் மாதத்துடன் 3 ரூபாவாக குறைக்கப்பட்டது. இந்த வரியை மீண்டும் பழைய மட்டத்திலேயே அமுலாக்குமாறு நிதியமைச்சு சுங்கத் திணைக்களத்தை அறிவுறுத்தியுள்ளது. இதனால் நாட்டில் கோதுமை விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் 2019 டிசம்பரில், முன்னைய அரசாங்கம் கோதுமைக்கான கூட்டு வரியை 36 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக குறைத்ததன் விளைவாக அரசுக்கு பல பில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.