*‘தலசீமியாநோயை தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளது – களனிப் பல்கலைக்கழகத்தின் சிறுவர் மருத்துவப் பிரிவின் ஆலோசகர்* தலசீமியா நோயைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதுடன், தலசீமியா நோயாளர்களில் மூன்று வீதமானவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் சிறுவர் மருத்துவப் பிரிவின் ஆலோசகர் சிறுவர் வைத்திய நிபுணர் சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தலசீமியா நோய் பரவும் நாடுகளில் இலங்கை முன்னணியில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். உலகில் தலசீமியா அதிகமாக உள்ள மற்ற நாடுகள் தங்கள் மக்களிடையே இந்நோய் ஏற்படுவதைத் தடுக்க முடிந்துள்ளது, ஆனால் இலங்கையால் அவ்வாறான சாதகமான நிலையை அடைய முடியவில்லை. இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலசீமியா பற்றிய கட்டுக்கதைகளால், பெரும்பாலான மக்கள் திருமணத்தின் போது தங்களுக்கு தலசீமியா இருப்பதை மறைக்கின்றார்கள் என்று அவர் கூறினார். இந்த தலசீமியா நோயைத் தடுப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள அனைத்து பொறுப்பாளர்களும் பொதுமக்களும்…
Author: admin
சில கிடங்குகளில் இருந்து சுங்க சரக்குகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. வார்ஃப் எழுத்தர்கள் பணிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையால் இவ்வாறு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் விபத்தை ஏற்படுத்திய பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபராதுவ நகரில் ஜீப் வண்டியை செலுத்தி கார் மற்றும் மற்றுமொரு ஜீப் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரித்தானிய பிரஜை மதுபோதையில் காலி நோக்கி சென்ற வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஹபராதுவ நகரில், பிரித்தானியர் ஜீப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர் ஓட்டிச் சென்ற வாகனம் மாத்தறை நோக்கிச் சென்ற கார் மற்றும் ஜீப் மீது மோதியுள்ளது. வெளிநாட்டு பிரஜை மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்தை தவிர்க்க தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
அமைச்சரவையை மாற்றியமைக்கும் தீர்மானத்தை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அமைச்சரவை மாற்ற விவகாரத்தினால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்பட்டுவருவதால் அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொண்டதாக தெரியவருகிறது. இதற்கிடையில் புதிய ஆளுநர்கள் நியமன விடயமும் இழுபறி நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
24CT : Rs 176,000 22CT : Rs 161,300 21CT : Rs 154,000 18CT : Rs 132,000
கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐக்கி நாடுகள் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கி நாடுகள் சபை குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள் சுகாதார கூட்டமைப்பு (பிஎம்என்சிஎச்) ஆகியவை இணைந்து ‘குறை பிரசவ குழந்தைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தின. அதில் கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9 சதவீதம் குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. இது 2010-ம் ஆண்டில் 9.8 சதவீதம் ஆக இருந்தது. 2020-இல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1.34 கோடி ஆகும். இதில் சுமார் 10 இலட்சம் குழந்தைகள் இறந்துவிட்டன. கடந்த 2020 ஆம் ஆண்டில் பங்களாதேஷில் குறை பிரசவம் அதிகபட்ச…
தம்புள்ளை பன்னம்பிட்டிய பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7000 கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் தெரிவித்துள்ளது. ஒரு தொகுதி கழிவுத் தேயிலையை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பின்னர் இவை மீட்கப்பட்டன.
களுத்துறை பிரதேசத்தில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறிய தனியார் வகுப்பு கணித ஆசிரியர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வாக்குமூலம் வழங்குவதற்காக களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுக்கப்பட்ட 16 வீடியோ பதிவுகள் தெரியவந்துள்ளதாகவும், அவர்களை அவதானித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. களுத்துறை வடக்கு கல்லுப்பாறையில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகத்திற்குரிய ஆசிரியர் வேறு இடங்களில் சிறு குழுக்களாக வகுப்புகளை நடத்தி அங்கும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேஸ்புக் சமூக ஊடகத்தில் சிறுமிகளின் புகைப்படங்களை பதிவிட்ட நபர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யடவர வத்தேகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் “நிலு நிலு” என்ற போலி கணக்கை உருவாக்கி அதில் சிறுமிகளின் படங்களை பதிவிட்டுள்ளார். 40 வயதுடைய சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் கணக்கு எழுத்தராக பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் இரண்டு முறை திருமணம் செய்து தற்போது விவாகரத்து பெற்றவர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எந்த வகையான உள்நாட்டு கடன் மேம்படுத்துதலிலும் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொது வைப்புகளின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்து பாதுகாக்கும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.