ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தை (FUTA) சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட உள்ளார். ஜனாதிபதி மற்றும் FUTA பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இம்மாதம் 18 ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல மாதங்களாக உயர்தர விடைத்தாள் மதிப்பீடுப் பணியை புறக்கணித்த நிலையில், ஜனாதிபதியுடன் கலந்துரையாட விரும்பினர். விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஜனாதிபதி கேட்டால் மாத்திரம் ஆரம்பிக்கத் தயார் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை எதிர்கொண்டு, கடந்த திங்கட்கிழமை (8) முதல் விடைத்தாள் மதிப்பீட்டை ஆரம்பித்தனர்.
Author: admin
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி கானை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவர் காவலில் வைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் நடந்ததால் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரின் உதிரி பாகங்கள் எனக் கூறி ஜப்பானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட நான்கு மிட்சுபிஷி ஜீப் வண்டிகளும் சுபாரு ரக கார் ஒன்றும் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த 5 வாகனங்கள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புடையது எனவும் இதன் இறுதி மதிப்பீட்டை பெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த 5 கார்களும் இலங்கை சுங்கத்துக்கு வாகன உதிரிப்பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்படவை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஒரு வார காலத்திற்கு சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் ஒரு வாரகால வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார். ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாகவும் அது வெற்றியடைந்துள்ளதாகவும் சுமேதா சோமரத்ன தெரிவித்தார். தீர்வு கிடைக்கவில்லை என்றால் எந்தவொரு நேரத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நாம் தயாராக இருக்கிறோம். ” ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் ஒருவருக்கு எதிராக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தம் நேற்று (10) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
களுத்துறையில் விடுதியொன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த விடுதியின் உரிமையாளரினது மனைவி இன்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளார். உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியமைக்காகவும், சிறுமிக்கு தங்குமிடங்களை வழங்குவதற்கு முன்னர், அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களைச் சரிபார்க்கத் தவறியதற்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. மக்கள் வங்கி – நேற்றைய தினம் 308.98 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 305.09 ரூபாவாக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 326.62 ரூபாவிலிருந்து 322.51 ரூபாவாக குறைந்துள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (11.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் பங்கேற்புடனும் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சின் முயற்சியினால், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக தமது வாழ்வதாரத்தை இழந்த 15,000 கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் சார்ந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டிருந்த சுமார் 5,000 பேருக்கான நட்டஈடு இம்முறை வழங்கப்படவுள்ள நிலையில், இன்று 30 பேருக்கான காசோலைகள் வழங்கப்படவுள்ளன. ஏனையோருக்கு காசோலைகள், சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வைக்கப்படவுள்ளன.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘மொக்கா’ என்று பெயரிட்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக மாறுகிறது. வங்கக் கடலில் கடந்த 8-ம் திகதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது. தொடர்ந்து, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்தது. நேற்றுக் காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அந்தமானின் போர்ட் பிளேயரில் இருந்து 520 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு யெமன் நாடு பரிந்துரைத்த ‘மொக்கா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது படிப்படியாக தீவிரமாகி இன்று (மே 11) காலை தீவிரப் புயலாகவும், நள்ளிரவில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுவடைந்து, தென்கிழக்கு…
அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் இலங்கைக்கு மீண்டும் ஒரு போதும் GSP+ வரிச்சலுகை கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய இந்த வரிச்சலுகை தற்போது முடிவடைந்துள்ளதாகவும், அதன்படி இலங்கை உள்ளிட்ட ஆறு ஆசிய நாடுகள் மீண்டும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2033ஆம் ஆண்டு வரை நிவாரணம் வழங்கும் நாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மரபுகள் மீறப்படுவதாகத் தெரிவித்த அவர், இந்த வரிச் சலுகையை இழந்தால் நாட்டுக்கு சுமார் 650 மில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதானி குழுமத்திற்கு மாற்றியமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர். சங்க சந்திம அபேசிங்க மற்றும் பாண்டு ரங்க காரியவசம் ஆகியோரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சுற்றாடலை மாசுபடுத்தும் அதானி போன்ற நிறுவனத்திற்கு இலங்கையில் எரிசக்தி ஏகபோக உரிமையை வழங்குவது பொருளாதாரத்திற்கும் சிக்கலை ஏற்படுத்துவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.