அரச நிறுவனங்களிலேயே அதிக நட்டத்தைச் செலுத்தும் இலங்கை விமான நிறுவனத்தின் (srilankan airline) அபிவிருத்திக்காக முதலீட்டாளர் (மறுசீரமைப்பு) வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிறுவனத்தின் மறுசீரமைப்புக்கான ஆலோசனைகளை வழங்க சர்வதேச ஆலோசனை நிறுவனமான லஸார்ட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களின் ஆலோசனை அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவிக்கின்றது. இது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் வினவிய போது, லஸார்ட் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் தரைவழிச் செயற்பாடுகள் ஒரு முதலீட்டாளருக்கு ஒன்றாக வழங்கப்படுமா அல்லது தனித்தனியாக வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை தெளிவான முடிவு எட்டப்படவில்லை எனவும், கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார். லஸார்ட் ஆலோசனை அறிக்கை கிடைத்த பின்னர் அது குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தி…
Author: admin
நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 01 வயது, 03 மாதங்கள், 10 மற்றும் 13 வயதுடைய நான்கு சிறுவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் நெலுவ பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் தற்காலிகமாக தொழில் செய்வதற்காக மியானதுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில் நேற்றிரவு முதல் பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் 119 இற்கு அறிவித்துள்ளது. காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
பெந்தோட்டை, சிங்கரூபாகம பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகள் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் பெந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் (12.05.2023) முறைப்பாடு செய்துள்ளார். சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் இளைஞருடன் தனது மகள் காதல் உறவில் இருந்ததாகவும் தாயார் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி கடந்த 10ஆம் திகதி இது குறித்து மகளை எச்சரித்ததாக அவரது தாயார் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி 2 நாட்களாக மகள் பாடசாலைக்கு செல்லவில்லை என தாயார் முறைப்பாட்டின் போது தெரிவித்துள்ளார். மற்ற இரு பிள்ளைகளை பாடசாலையில் இருந்து அழைத்து வருவதற்காக வீட்டில் இருந்து சென்று திரும்பிய போது மகள் வீட்டில் இல்லை. தான் இளைஞன் ஒருவருடன் பேருந்தில் ஏறி அத்துருவெல்ல பகுதியில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கியதாக தனது நண்பிக்கு அழைப்பேற்படுத்தி காணாமல் போனதாக கூறப்படும் மாணவி குறிப்பிட்டதாக…
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரை கலைப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவசரகால சூழ்நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த முன் பயிற்சிக்காக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நேற்று முதல் வரவழைக்கப்பட்டனர். பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினரும், தீயணைப்புப் பிரிவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து ´அத தெரண´ மேற்கொண்ட வினவலுக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. சில நாசவேலைகள் இடம்பெறுவதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் காரணமாக கொழும்பில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சில…
அண்மையில் (12) கித்துல் கைத்தொழில் குரங்குகளின் சேட்டையால் ஏற்பட்ட சேதத்தினால் நாட்டின் பல பாகங்களிலும் கித்துல் கைத்தொழில் முற்றாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 12வது நாளாக விவசாய அமைச்சர் எஹலியகொட மற்றும் இரத்தினபுரி ரத்கங்கை பிரதேசங்களில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று கித்துல் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்தார். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கித்துல் உற்பத்தியாளர்கள், கித்துல் தொழில்துறையில் குரங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமைச்சரிடம் உண்மைகளை முன்வைத்தனர். மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தேன் எடுப்பதற்காக பூக்களை வெட்டினாலும் ஒரு நொடியில் அவற்றினை அழித்துவிட்டு, செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த அழிவை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வருமாறு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். எஹெலியகொட கித்துல் உற்பத்தித் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் கித்துல் தேன், கித்துல் ஜக்குரு மற்றும் கித்துல் ரா என்பன தற்போது அமெரிக்கா, டுபாய், சுவிட்சர்லாந்து மற்றும் வடகொரியா உள்ளிட்ட…
களுத்துறை பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்தமை மற்றும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கான செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் 16 வயதான சிறுமி உயிரிழந்தமை, மற்றுமொரு பகுதியில் பாடசாலை மாணவர்கள் ஆசியரியரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கையை கோரியுள்ளது. இதற்கமைய குற்றச் செயலின் தன்மை, அது தொடர்பில் நீதிமன்றுக்கு முன்வைக்கப்பட்டுள்ள சமர்ப்பணங்கள், தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரங்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதற்கான காரணம் என்பன தொடர்பில் ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகளின் போது ஏதேனும் முறைக்கேடுகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் நீதிமன்றில் தங்களது தரப்பு சமர்ப்பணங்களை முன்வைக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர்…
தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அனுப்பி வைக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மஹியங்கனை மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்கள் போலியான 5,000 ரூபாவை கண்டுபிடித்ததை அடுத்து, 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குக்கு 21,000 அபராதம் செலுத்தப்பட்டது. அதில் 5,000 போலி நாணயத்தால் இருப்பது கண்டறியப்பட்டது. அபராதமாக செலுத்தப்பட்ட பணத்தில் போலி நாணயத்தாள் இருப்பது குறித்து நீதிமன்ற ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, 39 வயதான சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (12) மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Royal Australian Air Force க்கு சொந்தமான KA350 King Air விமானத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையின் இறையாண்மையான வான் மற்றும் கடற்படை கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்குவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது. பாடசாலை விடுமுறை நாட்களில், பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதற்கு பெற்றோர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாதுக்க பிரதேசத்தில் நேற்று(13.05.2023) நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதனால் டெங்கு அபாயத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.