“கோட்டா கோ கம” 50வது நாளை முன்னிட்டு சனிக்கிழமை நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற உத்தரவை ஏற்றுள்ளனர். பொலிஸ் அறிக்கையின்படி, கோட்டை பகுதியில் உள்ள பல வீதிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Author: admin
டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது-5) என்ற சிறுமியே உயிரிழந்தார். சிறுமிக்கு கடந்த 23ஆம் திகதி மாலை காய்ச்சல் இருந்துள்ளது. பனடோல் மாத்திரை வழங்கப்பட்டதனால் ஒரளவு சுகம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அண்றைய தினம் இரவு சிறுமிக்கு காய்ச்சலும் வாந்தியும் அதிகரித்ததால் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலையைக் கருத்திற்கோண்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறுமி சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். இதேவேளை, யாழ்ப்பாணத்தில்…
கடற்படையினரால் சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நாற்பத்தைந்து (45) நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 45 நபர்களுடன் சந்தேகத்திற்கிடமான 02 உள்ளூர் மீன்பிடி இழுவை படகுகளை கைப்பற்றியுள்ளனர். அதன்படி, தெற்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த SLNS கஜபாஹு, 26 பேருடன் சந்தேகத்திற்கிடமான வகையில் தெற்கு கரையோரத்தில் பலநாள் மீன்பிடி இழுவைப்படகு ஒன்றை வைத்திருந்தது. இதேபோன்று, 04வது ஃபாஸ்ட் அட்டாக் புளோட்டிலாவின் ஃபாஸ்ட் அட்டாக் கிராஃப்ட் பி 481, இன்று (மே 27, 2022) மேற்கு கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான 19 நபர்களை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவைப்படகு ஒன்றை இடைமறித்துள்ளது. இரண்டு பல்நாள் மீன்பிடி இழுவை படகுகள் கடற்பகுதியில் செல்ல முடியாத நிலையில் காணப்பட்டதையடுத்து கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் கல்பிட்டி, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை…
அட்டலுகம பிரதேசத்தில் 9 வயது குழந்தையொன்று காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை காணாமல் போன குழந்தை தொடர்பில் குழந்தையின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். குழந்தை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வரவில்லை என தாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். கடையை விட்டு வெளியே சென்ற குழந்தை வீடு திரும்பாதது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் 104 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாவை அச்சிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில், கடந்த மே 11ஆம் திகதிக்கும் மே 24ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய வங்கி இந்தத் தொகையை அச்சிட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரதமர், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கம் 40% ஐ தாண்டும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். அரசாங்கம் வரிகளை அதிகரிக்காவிட்டால் அரசாங்க செலவினங்களுக்கு பணத்தை அச்சிட வேண்டியிருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க முன்னர் தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களில் அதிகபட்சமாக மே 20ஆம் திகதி தான் பணம் அச்சிடப்பட்டுள்ளது. கலாநிதி வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் ஒரே நாளில் அச்சிடப்பட்ட மிகப் பெரிய தொகை…
எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கையை ரஷ்ய தரப்பு பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உதவி வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தற்போது பரிசீலித்து வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் விநியோகங்களைப் பெறுவதன் மூலம் எரிசக்தி நெருக்கடி மற்றும் எரிசக்தி வளங்களின் கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க கூடியதாக இருக்கும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த தினம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிலியந்தலை, சுவாரபொல பிரதேசத்தில் உள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 31 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் பிலியந்தலை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் இருந்து 180 லீற்றர் டீசல், 7 லீற்றர் பெற்றோல் மற்றும் எரிபொருளை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர் டீசல் ஒரு போத்தல் 600 ரூபாவுக்கும், பெற்றோல் ஒரு போத்தல் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என அதன் “தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர்” தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான பரிந்துரைகளை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஜனாதிபதி செயலணியானது, 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கான சில வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நிலவரம் தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல யோசனை குறித்து கலந்துரையாடுவதற்காக, கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது முன்வைக்கப்படும் யோசனைகளைக் கருத்திற்கொண்டு உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர், அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ரூ.500 அபராதம் செலுத்துமாறும் கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இன்று மே 27 அன்று குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து 100,000 இந்த வழக்கின் தீர்ப்பு முன்பு தாமதமாகியதாக கூறப்படுகிறது.