கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பல இடங்களுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Author: admin
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். கோதுமை மாவிற்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகை நீக்கப்பட்டமை மற்றும் வேறு சில செலவுகள் அதிகரிப்பு காரணமாக கோதுமை மா ஒரு கிலோவின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கையில் உள்ள இரு பிரதான கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். இதேவேளை கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்ட 3 ரூபா சுங்க வரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கோதுமை மாவின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய பாடசாலையின் நீண்டகாலமாக நிலவிவந்த கணினிப் பற்றாக் குறையின் ஒரு பகுதியினை, அதிபர் அவர்களின் கோரிக்கை க்குஅமைவாகவும், பாடசாலையின் SDEC ன் முயற்சியினாலும் தற்பொழுது கட்டார் நாட்டில் வசிக்கும் நலன்விரும்பி ஒருவர் இரண்டு மேசைக் கணினிகளையும் ஒரு மடிகணினியையும் அனபளிப்புச் செய்துள்ளார். இவற்றை இன்று (2023.05.08) பாடசாலை அதிபரிடம் கையளிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அத்தோடு இதற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாடசாலை சார்பாக அதிபர் அவர்கள் நன்றிகளையும்.பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குருநாகல் புத்தளம் வீதியில் வாரியபொல வெரபொல பிரதேசத்தில் இன்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருநாகலில் இருந்து சென்ற வேன் ஒன்றும் பாதெனிய பகுதியில் இருந்து சென்ற கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் வேனில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட ஆறு பேரும் காரில் பயணித்த தம்பதிகளுமாக 8 பேர் வாரியபொல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து அவர்கள் 8 பேரும் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வேனில் பயணித்தவர்கள் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், காரில் பயணித்தவர்கள் மஹவ பகுதியைச் சேர்ந்த தம்பதியர் எனவும் தெரிவித்துள்ள வாரியபொல போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கான திகதிகளை பாராளுமன்ற அலுவல்கள் குழு நிர்ணயித்தது. இதற்கமைய மே 11 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று பல இடங்களுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் அலரி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், இந்த உத்தரவை பிறப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மொரட்டுவை மற்றும் பாணந்துறை புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளமையால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதனால் கடலோர ரயில் சேவை இன்று (09) காலை முதல் தாமதமாக செயல்படுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
24CT : Rs 176,000 22CT : Rs 161,300 21CT : Rs 154,000 18CT : Rs 132,000
அரசு வைத்தியசாலைகளில் கட்டண செலுத்தும் சிகிச்சை அறை வசதியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டண செலுத்தும் சிகிச்சை அறைகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் மே முதல் வாரத்தில் 1,896 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்….. கடந்த மாதத்தின் இறுதி வாரத்துடன் ஒப்பிடுகையில், இம்மாதத்தின் முதல் வாரத்தில் கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா போன்ற அதிக நோயாளர்கள் பதிவாகும் மாவட்டங்களுக்கு நிதியளித்து விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் தமது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.