சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நுவரெலியாவில் கேபிள் கார்(Cable Car) திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனை முன்னிட்டு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், உலகின் புகழ் பெற்ற இசைக் குழுக்களை இலங்கைக்கு வரவழைத்து, இரவு வேளையில் இசை நிகழ்ச்சிகளை நடத்த எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Author: admin
களுத்துறையில் மாலைநேர வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த ஆசிரியரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். களுத்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரண்டு பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று (09) மாலை வரை இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது எரிபொருளில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் நாளை (11) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக 300 பெற்றோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படவுள்ளதாக ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மழையுடனான வானிலையுடன் வீதிகளின் தன்மைகளை புரிந்துகொண்டு வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக அதிவேக வீதிகள் மற்றும் மலையக வீதிகளில் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. அதிவேக வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது, ப்ரேக்(Brake) தொகுதியின் செயற்பாடு குறித்து சாரதிகள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கற்பாறைகள் சரிந்து வீழ்தல் மற்றும் மண்சரிவு ஏற்படலாம் என்பதால் மலையக வீதிகளில் அவதானத்துடன் வாகங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
களுத்துறை விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று (10) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சம்பவ தினத்தன்று மாணவியின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் குறித்து காவல்துறையினர் அவதானம் செலுத்தியுள்ளனர். எனினும், அவரது தொலைபேசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மாணவி உயிரிழந்ததையடுத்து பிரதான சந்தேகநபர், முன்னதாக விடுதியிலிருந்து சென்ற தமது நண்பரையும், நண்பரின் காதலியையும் மீண்டும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து, மாணவியின் தொலைபேசியை தொடருந்து மார்க்கத்துக்கு அருகிலுள்ள கால்வாய் நோக்கி வீசியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல விடயங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். குறித்த மாணவி, விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் கூறியதாக விசாரணை முன்னெடுக்கும் சிரேஷ்ட காவல்துறை…
1990-ம் ஆண்டு துணிக்கடை ஒன்றில் பத்திரிகையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தாக்கல் செய்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் ஜீன் கரோல் என்பவர் ட்ரம்புக்கு எதிராக தொடுத்த சிவில் வழக்கில் நடுவர் மன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. துணிக்கடையின் டிரஸ்ஸிங் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன்படி, இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ட்ரம்பை குற்றவாளி என தீர்ப்பளித்த உரிய நடுவர் மன்றம், குறித்த ஊடகவியலாளருக்கு 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்குமாறும் டொனால்ட் ட்ரம்பிற்கு உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு கொக்குவில் மற்றும் மட்டு தலைமையக பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசத்தில் பூட்டியிருந்த 6 வீடுகளை உடைத்து அங்கிருந்து பணம் தங்க நகைகள், மடிகளணி மற்றும் மின் உபகரணங்களை திருடிவந்த 14 வயது உடைய சிறுவன் ஒருவனுடன் இருவரையும் திருட்டு பொருட்களை வாங்கி 4 பேர் உட்பட 6 பேரை திங்கட்கிழமை (08) கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை அந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக பூட்டியிருந்த 4 வீடுகளின் கூரை மற்றும் யன்னல் கதவுகளை உடைத்து அங்கிருந்த 4 மடி கனணி கையடக்க தொலைபேசிகள் தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான மின்சார உபகரணங்கள் திருட்டுபோயுள்ளது. இது தொடர்பாக கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. சசீந்திராவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து மாவட்ட…
முட்டை இறக்குமதி மற்றும் உள்ளுர் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்காக பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டை பண்ணை உரிமையாளர்கள் சங்கம், வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு, விவசாய அமைச்சு, கால்நடை இராஜாங்க அமைச்சு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் விவசாய கலந்துரையாடல் இடம்பெற்றது.
24CT : Rs 176,000 22CT : Rs 161,300 21CT : Rs 154,000 18CT : Rs 132,000