தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், காரில் வந்த இருவர் தங்கச் சங்கிலி பறிக்க முற்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் குறித்த யுவதி நடைப் பயிற்சி செய்துகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் டாக்ஸி ஓட்டுனர் சக்திவேலைக் கைது செய்த பொலிஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில் அவருடன் காரில் சென்று தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஸ்விக்கி ஊழியரான அபிசேக் என்பவரையும் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் கொள்ளை முயற்சி குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிய இருவரும் வழுக்கி விழுந்ததால் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல், அபிசேக் ஆகிய இருவரையும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிசிடிவி காட்சி இல்லையென்றால் இந்த வழக்கில் துப்பு துலக்கி…
Author: admin
2024 ஆம் ஆண்டிலிருந்து தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரு புதிய பாடங்களை இலங்கை பாடத்திட்டத்தில் அறிமுகப் படுத்தவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 6 முதல் 13 வரை குறித்த பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளன. சர்வதேச தரத்திற்கு இணையாக இந்நாட்டின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார். இவ்வருடம் ஜூன் மாதம் இதற்கான முன்னோடி நிகழ்வுகள் தெரிவு செய்யப்பட்ட 20 பாடசாலைகளில் நடைபெறும் எனவும் மாணவ சமுதாயத்திற்குள் ஆங்கில மொழிப்பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். ‘STEAM’ கல்வி முறையைச் செயல்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வுகளுக்கு பதிலாக தொகுதி அடிப்படையிலான முறையைப் பின்பற்ற முடியும். அதன்மூலம் அவர்கள் சிறந்த…
கர்ப்பிணியொருவர் வெயிலின் தாக்கத்தினால் உயிரிழந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான கர்ப்பிணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 9 மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர் வீட்டில் இருந்து கோடை வெயிலில் 7 கிலோமீற்றர் தூரம் நடந்து வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். இதன்போது போது அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து அவரை குடும்பத்தினர் அம்புலன்ஸ் மூலம் காசா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வயிற்றில் இருந்த 9 மாத குழந்தையும் உயிரிழந்தது. விசாரணையில் 7 கி.மீ. வெயிலில் நடந்து சென்றுள்ளமையே அவரது மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டிருந்த மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதான வீதி தற்போது போக்குவரத்துக்கு வழமைக்கு திரும்பியுள்ளது. பரடுவ – கண்டாவளை பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்த வீதியின் போக்குவரத்து தடைபட்டிருந்தது. எவ்வாறாயினும், அக்குரஸ்ஸ – மாலிம்பட, அத்துரலிய பிரதேசங்களின் தாழ்நிலங்களில் இன்னும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் போது ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் பரீட்சை பரீட்சார்த்திகள் பாதிக்கப்படாத வகையில் தேவையான பின்னணியை தயார்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து இது தொடர்பான பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மே 29ம் திகதி முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த காலப்பகுதியில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் வகையில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எந்தவொரு பிரதேசத்திலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டாலும் பரீட்சையை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12…
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மே 14 ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் நாடு திரும்பியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார். இவ்வாறு இருக்க, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்பவுள்ளதாக ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அங்கு அவர் முன்னர் பயன்படுத்திய அத்தியாவசிய தொழில் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாகவும், ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவதாகவும் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெரோம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ போதகர் ஆற்றிய பிரசங்கம் சமூக ஊடகங்களில் பரவியது, அந்த அறிக்கைகளில், சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் புத்தர் மற்றும் பிற மத நம்பிக்கைகளை அவமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து போதகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்தனர். அத்துடன், போதகரின் வாக்குமூலங்கள் தொடர்பில் குற்றப்…
பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு முன்மொழிந்த பிரதிநிதிகளுக்கு ஆளுநர் பதவி கிடைத்ததை அடுத்து அவர் இலங்கை திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பசில் ராஜபக்ஷ நாளை மறுதினம் (19) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது. பசில் ராஜபக்ஷ கடந்த வாரம் டுபாய் சென்று ஏப்ரல் 22ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து ஆளுநர்கள் நியமனம் தொடர்பில் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் பசில் ராஜபக்ஷ அவர்களால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா செல்ல முயற்சித்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஒன்பது ஆண்களையும் இரண்டு பெண்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் 36 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவராவார். கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 31, 36, 33, 34 மற்றும் 22 வயதுடையவர்களாவர். இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் 1 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் இன்று (17) காலை கைது செய்யப்பட்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே இமானுவேல் ஆனோல்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலை யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட்…
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கான வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கான உத்தரவு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.