ட்விட்டர் அதன் பாதுகாப்பு பயன்முறை அம்சத்தை விரிவுபடுத்த உள்ளது, இது பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது தவறான ட்வீட்களை அனுப்பும் கணக்குகளைத் தற்காலிகமாகத் தடுக்க உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வெறுக்கத்தக்கக் கருத்துகளைப் பயன்படுத்தி கணக்குகளைக் கொடியிடும் அல்லது அழைக்கப்படாத கருத்துகளைக் கொண்டு மக்களைத் தாக்கும் கணக்குகளை ஏழு நாட்களுக்குத் தடுக்கும். பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள தளத்தின் பயனர்களில் பாதி பேர் இப்போது அணுகலை(அக்சஸ்) பெற்றுள்ளார்கள். மேலும் அவர்கள் இப்போது Proactive Safety Mode எனப்படும் துணை அம்சத்தையும் பயன்படுத்தலாம். இது தீங்கு விளைவிக்கக்கூடிய பதில்களை முன்கூட்டியே கண்டறிந்து, பாதுகாப்பு பயன்முறையை இயக்குவதைக் கருத்தில் கொள்ளும்படி மக்களைத் தூண்டும். ஆரம்ப சோதனையில் சில பயனர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த அம்சத்தை இணைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்கள் விரும்பத்தகாத தொடர்புகளை அடையாளம் காண இவ்வம்சம் உதவ வேண்டும். பாதுகாப்பு பயன்முறை அம்சத்தை அமைப்புகளில் இயக்கலாம்,…
Author: admin
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் பாடகர்கள் ‘தீ’ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரும் மேடையில் பரபரப்பான என்ஜாய் என்ஜாமி பாடலைப் பாடினர். அசல் பதிப்பைப் பாடிய அறிவு நிகழ்வில் சேர்க்கப்படவும் இல்லை அவரது ஆக்கத்துக்கான கௌரவம் அளிக்கப்படவுமில்லை. பாடலின் மியூசிக் வீடியோவின் படத்துடன் ஒரு நீண்ட Instagram இடுகையில், அறிவு: “இசையமைக்கவும், எழுதவும், பின்னர் பாடலை நிகழ்த்தவும் ஆறு மாதங்களுக்கு மேல் செலவிட்டதாக எழுதியுள்ளார். “இப்பாடல் அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல. என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறை ஒடுக்குமுறையின் வடு அடையாளத்துடன் இருக்கும். இது போல இந்த மண்ணில் 10000 நாட்டுப்புற பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, காதல், அவர்களின் எதிர்ப்பு…
இன்று (01) காலை 10.50 மணியளவில் அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது கடமையில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை முயற்சி செய்து கொண்டார். குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தற்கொலை முயற்சியில் பொலிஸ் பரிசோதகரின் மூளை துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அம்பாறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்த வரைவு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 21ஆவது திருத்தச் சட்டத்தின் மற்றுமொரு வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால், இதுவரை 21ஆவது திருத்தம் என்று குறிப்பிடப்பட்ட திருத்தம் உண்மையில் 22ஆவது திருத்தமாகவே இருக்கும். கடந்த 2022.06.20 அன்று அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கான ஆரம்ப வரைவுக்கு அமைச்சரவையின் கொள்கை அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் அதன்படி 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என சட்டமா அதிபரால் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முதலில் ஜூன் 06ஆம் திகதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தம், அது தொடர்பான விவாதம்…
ஆசிய பிராந்தியத்தில் நிலவும் இராஜதந்திர முரண்பாடுகளை தீர்க்கும் மையமாக இலங்கை மாற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவர் பி.திகாம்பரம் இன்று தெரிவித்துள்ளார். சீன உளவுக் கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டைக்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுடன் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பேசும் போதே “இலங்கையானது இந்தியா மற்றும் சீனா உட்பட அனைத்து நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும் மற்றும் இராஜதந்திர முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரு மையமாக மாற வேண்டும்.” என திரு. திகாம்பரம் தெரிவித்துள்ளார். அதேநேரம், இலங்கை இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும், அண்டை நாடான இந்தியாவுடனான அதன் உறவுகள் இதற் பாதகத்தால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். தற்போதைய நெருக்கடியான காலப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் முக்கியத்துவம் இலங்கைக்கு கிடைத்த இந்திய உதவியின் மூலம் போதுமான அளவு நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
இலங்கையின் யூடியூபர் ரதிது சுரம்யா என்ற ரட்டாவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரட்டா மற்றும் மேலும் இரெண்டு பேருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பயணத்தடை விதித்துள்ளது. கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய செயற்பாட்டாளராக ரட்டா அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜுன் மாதம் கோட்டை பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இலங்கையில் கொவிட் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன “குறிப்பாக பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து நோய் அறிகுறிகளுடன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்” என தெரிவித்தார். ஆனால் இலங்கையில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் தொற்றாளர்களை உறுதிப்படுத்தும் அன்டிஜென் பரிசோதனை கருவிகள் இல்லை எனவும் எனவே, நோயாளிகளை கண்டறிவதில் கடும் சிக்கல்கள் உருவாகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரு வாரங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்படாமை, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகளினால் இலங்கையில் அதிகளவான கொவிட் நோயாளிகள் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி, 29 ஜூலை, 2022 அன்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடிய வெளிவிவகார அமைச்சர் பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தி தெரிவித்தார். இரு வழி உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக மக்கள்-மக்கள் தொடர்புகளை வலுப்படுத்த அவர்கள் முடிவு செய்தனர். பல பிராந்திய மற்றும் சர்வதேச தளங்களில் கடினமான காலங்களில் பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய உறுதியான மற்றும் நிலையான ஆதரவை அமைச்சர் பாராட்டினார்.
காலி கோட்டையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்ட வேளையில் பாதுகாப்பு படையினர் தமக்கு இடையூறு விளைவித்தமைக்கு எதிராக காலியைச் சேர்ந்த 11 சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
நிமல் சிறிபில டி சில்வா இலஞ்சம் பெற்றமை தொடர்பான விசாரணை அறிக்கை ஜூலை 31ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. ஜப்பானிய நிறுவனமான Taisei-யிடம் சில்வா லஞ்சம் கேட்டதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த சில்வா, சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் வரை தனது இலாகாவிலிருந்து விலகினார்.