சாதாரண தரப் பரீட்சையின் போது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கண்காணிப்பாளர் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 25ஆம் திகதி அனுராதபுரம், ஹிடோகம பிரதேசத்தில் உள்ள தொலைதூரப் பாடசாலையொன்றில் கடமையாற்றும் வேளையில், சிறுமிக்கு உதவி செய்கின்றோம் என்ற போர்வையில் குறித்த சிறுமியை கண்காணிப்பாளர் அணுகியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது தாயும் சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேர்வுத் தலைவர் எல்.எம்.டி. தர்மசேன, கண்காணிப்பாளரை இடைநிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்தை மறைத்ததற்காக, சம்பந்தப்பட்ட பரீட்சை மண்டபத்தின் பொறுப்பதிகாரி மீது விசாரணை ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Author: admin
வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா, சற்று முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, துமிந்த சில்வாவைவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்திய உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்யுமாறு நேற்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அத்துடன், நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உதவுமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.இதனை தவிர உயர் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கியும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
புத்தசாசன அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றால் மட்டுமே அல்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்யலாம். புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் சிபாரிசு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமா அதிபர் திணைக்களம், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டத்தின் பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் கூடாரங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதனையடுத்து, நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்ததுடன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டு, தீயிடப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திய குற்றவியல் விசாரணை…
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடமைகளை நிறைவுசெய்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நிவாரண சேவை அதிகாரி ஒருவர், இரத்தினபுரி-குருவிட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஒருவரே இதன்போது உயிரிழந்தார். மேலும் சீரற்ற காலநிலையினால் 6 மாவட்டங்களில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்குள் இறக்குமதி செய்ய மட்டுப்படுத்தப்பட்டிருந்த 369 வகையான அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செல்லுப்படியாகும் உரிமம் இல்லாவிடின், அத்தியாவசியமற்ற 369 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தி கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த 369 அத்தியாவசிய பொருட்களை செல்லுப்படியாகும் உரிமம் இன்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போது நிலவும் வரிகள் உட்பட பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை காரணமாக, பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெட் மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட வரிகளை அரசாங்கம் நேற்று முதல் அதிகரித்தது இதன்படி, வெட் எனப்படும் பெறுமதி சேர் வரி எட்டு வீதத்திலிருந்து 12 வீதம் வரை அதிகரிக்கப்பட்டது அத்துடன், தொலைத் தொடர்பு வரி 11.25 வீதத்திலிருந்து 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது இதற்கமைய, தற்போதைய பொருளாதார நிலையில், வரி அதிகரிப்பானது மக்களுக்கு மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும், மக்களின் பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டே வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இலங்கை, குறைந்த வரி விதிப்பு முறைமையை அறிமுகப்படுத்தியது. இதன் ஊடாக வருடமொன்றுக்கு 600 பில்லியன் ரூபாய் முதல் 800 பில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்பதிவு செய்யப்படும் இருக்கைகளுக்கான ரயில் கட்டணம் இன்று (1) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. புகையிரதங்களுக்கான முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் 30 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புகையிரத திணைக்களத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொது திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியதே தனது வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான மற்றும் வேதனையான முடிவு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசத்தை நினைத்து தான் இவ்வாறான தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இது தமது முழுமையான ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்றக் குழுவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின் போது நீதியமைச்சர் பேராசிரியர் விஜேதாச ராஜபக்ஷ, அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் குறித்து குழுவிற்கு விளக்கமளித்தார்.