சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதுடன், கட்சிகளுக்குள்ளே உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான பின்னணியில், இன்று பிற்பகல் 3 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின்போது சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
Author: admin
நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் நாளையதினம் கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். குறித்த பயணமானது நாளை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் – பண்ணை முனியப்பர் கோவிலடியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டும் முகமாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணம் அமையவுள்ளதாக குறித்த இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர். தொல்புரத்தைச் சேர்ந்த குகநாதன் நிதுசன் (வயது 24) பாஸ்கரன் சுமித்தன் (22) ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு துவிச்சக்கர வண்டி பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கையில் அமைதியின்மை காரணமாக இலங்கைக்கான விடுமுறைகளை மேலும் ரத்து செய்வதாக ஜேர்மனை தளமாகக்கொண்ட சுற்றுலாத்துறை முன்னணி நிறுவனமான டியுஐ(TUI) அறிவித்துள்ளது. இச் செய்தியை இங்கிலாந்தின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பற்றாக்குறையுடன் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இதன்போது போராட்டக்காரர்கள் அரச கட்டிடங்களை முற்றுகையிட்டனர். இதனையடுத்த கடந்த மாதம் இலங்கை அரசாங்கம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக டியுஐ கடந்த மே மாதம் முதல் இலங்கை விடுமுறைகளை ரத்து செய்து வருகிறது. இதன்படி தற்போது ஆகஸ்ட் 22 வரையான பயணங்களை அந்த நிறுவனம் ரத்துச்செய்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற பயணங்களை தவிர்க்குமாறு வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. இதன் விளைவாகவே துரதிர்ஷ்டவசமாக 22 ஒகஸ்ட் இலங்கைக்கு புறப்படும் அனைத்து பயணங்களையும்…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலி மெகசின் சிறைச்சாலையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தானிஷ் அலி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலி சிறைச்சாலைகள் விதிமுறைகளை மீறி தொலைபேசி பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிறைச்சாலை நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார். தானிஷ் அலி தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமையை அடுத்து, அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 காவல்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு காவல்துறை பொது மக்களின் உதவியை கோரியுள்ளது. இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் ஏதும் தெரிந்திருப்பின் அவர்கள் குறித்த விடயங்களை என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மே மாதம் 10ஆம் திகதி குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் காயமடைந்திருந்தார். கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது. சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து, சிவில் உடையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, அங்கிருந்து அவர் ஓடி தப்ப முயன்றபோதிலும், குறித்த குழுவினர் பின் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளனர். எனினும், தாக்குதல் சம்பவத்திலிருந்து காவல்துறையினர் அவரை மீட்டு பாதுகாப்பாக,…
நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்கள் வேகமாக நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 20-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவ்வருடம் பதிவாகியுள்ள 476,677 டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள் 5 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை செல்பவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார். ஓகஸ்ட் மாதத்தின் மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களாவர். எனினும், நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வருவதால், 67 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போதைய மழைக்காலத்துடன் இந்த அபாய வலயங்கள் அதிகரிக்கலாம் எனவும் பணிப்பாளர் குறிப்பிடுகின்றார். டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களான அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வளாகங்கள், பாடசாலைச் சூழல்கள், கட்டிடங்கள் கட்டும் இடங்கள் போன்றவற்றை உடனடியாகச்…
அதிக மழைவீழ்ச்சியினால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக 3 ,194 குடும்பங்களை சேர்ந்த 12 ,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையினால் சப்ரகமுவ மாவட்டத்தின் இரத்தினபுரி மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது கடந்த சில நாட்களாக பலாங்கொடையில் பெய்து வரும் கனமழையினால் பலாங்கொடை – மாரதென்ன பகுதியில் தோட்டக்குடியிருப்பின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட மாரதென்ன முதலாம் பிரிவிலுள்ள தோட்டக்குடியிருப்பிலேயே இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது. அனர்த்தத்தில் நான்கு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 16 பேர் இடம்பெயர்ந்து தமது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா நகரினை அண்மித்த பகுதியில் மண்சரிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நுவரெலியா…
கோட்டா கோகம போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (05) போராட்டம் ஒன்றை மேற்கொள்ள போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். இதன்படி நுகேகொடயில் நாளை போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் வரும் இலங்கையர்களை மலேசியா குடிவரவுத்துறை கண்காணித்து வருகிறது. இந்தநிலையில் மலேசியா வாரம் ஒன்றுக்கு குறைந்தது 20 இலங்கையர்களுக்கு நாட்டுக்குள் செல்ல அனுமதி வழங்க மறுத்துள்ளது. சுற்றுலா விசாக்களை பணிபுரியும் விசாவாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் மலேசியாவிற்கு வருகை தரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதன் விளைவாக மலேசிய குடிவரவு அதிகாரிகள் வருகை விசா வைத்திருப்பவர்களை ஆய்வு செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 20 இலங்கையர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலையத்திலிருந்து நேரடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைவதற்கு ஒப்புதல் அளித்த பலர் தாங்கள் வேலை முகவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் ஊதியம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் இல்லாத கடுமையான மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள். இதன்காரணமாக அவர்கள் மனித கடத்தலுக்கு…