எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் அங்கீகாரமளிக்கப்பட்ட எந்தவொரு வங்கி ஊடாகவும் இந்த நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. சமுர்த்தி நிவாரணத்தை பெறுவதற்கு தகுதியானவர்களை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் கடந்த 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது பிரதேச செயலாளர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சமுர்த்தி நிவாரணம் ‘ஏழ்மையானவர்கள்’ மற்றும் ‘மிகவும் ஏழ்மையானவர்கள்’ என்ற இரு பிரிவுகளில் வழங்கப்படவுள்ளது. மிகவும் ஏழ்மையானவர்களுக்கு 15,000 ரூபா கொடுப்பனவும் ஏழ்மையானவர்களுக்கு 8,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது. அண்மைய பொருளாதார வீழ்ச்சியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நடுத்தர அளவில் பாதிப்பிற்குள்ளானவர்கள் என இரு பிரிவுகளின் கீழ் சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாவும் நடுத்தர அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.
Author: admin
துறைமுக வளாகத்தில் இருந்து சுங்க பரிசோதனை நிலையம் வரை கொள்கலன் வாகனங்களை சோதனை செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மிக நீண்ட வரிசைகள் தோன்றியுள்ளதாக ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 600 முதல் 800 கொள்கலன்கள் பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும், வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திலிருந்து சுங்கச் சோதனைச் சாவடி வரையிலும் இந்த நீண்ட வரிசைகள் காணப்படுவதால், அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சுங்கப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இந்த காலதாமதங்களை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு வாரத்திற்கு 03 விமானங்களை இயக்குவதற்கு எயார் சைனா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மாதங்களில் விமான சேவைகள் அதிகரிக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காணிச் சட்டங்களே இன்றும் நடைமுறையில் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காணி பயன்பாடுகள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்றதாக காணப்படுகிறது என்றும் தெரித்தார். அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் காணப்படுகின்ற சிக்கல்களை நீக்கி புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இங்கு தீர்க்கமாக ஆராயப்பட்டது. அதற்காக காணி ஆணைக்குழுவின் ஊடாக மாகாண சபை காணிகள் தொடர்பிலான…
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அந்த மனு இன்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் கருத்துத் தெரிவிக்கையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தமது பிரதிவாதிகள் இதுவரை நிர்ணயிக்கவில்லை எனத் தெரிவித்தார். திறைசேரியில் தேர்தலுக்கு பணம் விடுக்கப்பட்டாலோ அல்லது தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலோ அல்லது அதற்கு முன்னதாக தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.…
பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கு அமைய களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸாரின் விசாரணைகளின் போது, உயிரிழந்த மாணவிக்கு ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் கல்லீரல் பாதிப்பை தடுப்பதற்கு பெற்றோர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலிலிருந்து மீண்ட சிறுவர், சிறுமிகள் மீண்டும் கடுமையான வேலையில் ஈடுபடுத்தினால், கல்லீரலில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். “டெங்கு குணமானதும் ஓரிரு வாரங்களுக்கு, சிறுவர், சிறுமிகளுக்கு அதிக உடல் உழைப்பை கொடுக்காதீர்கள். கல்லீரல் பாதிக்கப்பட்டால், மூளையை பாதிக்கும். எனவே, டெங்குவை இலகுவாக எடுத்துக்கொள்ளாதீர்கள். டெங்கு வந்தால் சிக்கல்கள் வரலாம்.” டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 40 சிறுவர்கள் தற்போது லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அறிகுறிகள் இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் இரத்த பரிசோதனை செய்யுங்கள்.குறைபாடு இருந்தால். வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள், இரத்த தட்டுக்கள் சுமார் 150 ஆக குறைந்துள்ளது.…
கைது செய்யப்பட்ட கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல ஆகியோரை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பியத் நிகேஷலாவை தாக்கிய சம்பவம் தொடர்பில் கடுவெல பிரதி மேயர் சந்திக அபேரத்ன நேற்று கைது செய்யப்பட்டார். அத்துடன், கைது செய்யப்பட்ட பிரதி மேயர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பியத் நிகேஷலாவையும் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
மன்னார் தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமம் பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று, சிறுவர்கள் இருவருக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்த மேற்கொண்ட முயற்சி பொது மக்களின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று மதியமளவில் வாகனத்தில் வியாபார பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த சாரதி அவ் வீதி வழியாக பயணித்த இரு சிறுமிகளுக்கு இனிப்பு பொருட்களை வழங்கியுள்ளார். இதனையடுத்து வாகனத்தில் கடத்த முற்பட்ட சமயம் இரு பிள்ளைகளும் தப்பி சென்று கிராமத்தவர்களுக்கு தெரிவித்த நிலையில் கிராம மக்கள் இணைந்து குறித்த வாகனத்தையும் வாகன சாரதி மற்றும் உதவியாளர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த சிறுமிகள் தப்பியோடி ஒழிந்த நிலையில் அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் துரத்திக் கொண்டு வந்ததாகவும் வாகனத்தினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வாகனத்தை சோதித்த நிலையில் வெளிநாட்டவர் இருக்கவில்லை என்பதுடன் வாகனத்தில் இருந்த இரு…