வீதியில் சென்று கொண்டிருந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் தூக்கி செல்ல முயற்சித்த இளைஞர்கள். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இன்று காலை 7 மணியளவில் கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய சிறுமி தனியார் வகுப்பிற்காக தாயாரினால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் சிறுமியினை அழைத்து கையினை பிடித்துக்கொண்டு முகத்தினை துணியால் பொத்திப்பிடித்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். வீதியால் சென்ற மக்கள் இதனை அவதானித்து சத்தமிட்ட போது இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளார்கள். சிறிது நேரத்தின் பின்னர் கண்விழித்துக்கொண்ட சிறுமியின் தகவலின் படி குறித்த பகுதியினை சேர்ந்த இளைஞனின் பெயரினை சிறுமி கூறியதற்கு இணங்க கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இளைஞனை அழைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். சத்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 23 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளதுடன்…
Author: admin
மாணவர் ஒருவரை, பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக, வாக்காளர் பெயர்ப்பட்டியலில், பெயரை உள்ளீர்ப்பதற்கு, 70 ஆயிரம் ரூபாவை கையூட்டலாகப்பெற்ற, குப்பியாவத்தை – மேற்கு கிராம சேவகர், கையூட்டல் ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளர் மற்றும் அவரின் மனைவியின், 2022ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்ள பெயர்களை, 2023ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்ளீர்ப்பதற்காக, தலா 10 ஆயிரம் ரூபாவை, குறித்த கிராமசேவகர் கையூட்டலாக பெற்றுள்ளார். அத்துடன், அந்தப் பெயர்களை கணினிமயப்படுத்தி, அதன் உறுதிப்படுத்தலை வழங்குவதற்காக, 50 ஆயிரம் ரூபாவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும், இதற்காக குறித்த பெற்றோரிடம் அவர், 80 ஆயிரம் ரூபாவை கையூட்டலாக கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்தநிலையில், 70 ஆயிரம் ரூபாவை கையூட்டலாகப் பெற்றுக்கொண்டபோது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களிலும் GPS கருவிகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள, மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் மூன்றில் ஒரு வீத பஸ்களில் GPS கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம், மாகாணங்களுக்கிடையிலான சேவையில் ஈடுபடும் GPS கருவிகள் பொருத்தப்பட்ட பஸ்களைக் கண்காணிக்க முடியும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார். தனியார் பஸ்களில் மாத்திரமன்றி இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களிலும் GPS கருவிகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பஸ் தரிப்பிடங்களில் அதிக நேரம் பஸ்களைத் தரித்து நிற்கச்செய்ய முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த 540 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சியின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை சிறைச்சாலை வீதியில் பி.டி.ஐ. கட்சி அலுவலகத்திலும் பொலிஸார் சோதனை நடத்தினர், மேலும் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட வேண்டிய கட்சி உறுப்பினர்களின் பட்டியலும் பல பொலிஸ் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் பிணை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று காலை லாகூரில் உள்ள சமன்பார்க்கில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார்.
மலையக ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹட்டனுக்கும் நானு ஓயாவிற்கும் இடையிலான ரயில் பாதையில் கிரேட் வெஸ்டன் மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக நேற்று (12) பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. ரயில் பாதையை சீர்செய்யும் நடவடிக்கையில் ரயில்வே திணைக்களம் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது மலையகத்திற்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தங்காலை – ஹம்பாந்தோட்டை வீதியின் கொடிகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. லொறி ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஐவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா – மன்னார் வீதியின் 6 ஆவது ஒழுங்கைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நாயுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீப்பே – இங்கிரிய வீதியின் பிட்டும்பே பகுதியில் அம்பியூலன்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதில் 32 வயதான நபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பியூலன்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நிவித்திகல – கலவான வீதியில் பஸ் ஒன்றில் மோதி 73 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் போஅத்த பகுதியில்…
கொழும்பில் பல இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.நேற்று (12) இரவு முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சில குழுக்கள் அரசாங்கத்தின் மீது சில செல்வாக்கு செலுத்த தயாராக இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கொழும்பு பல்கலைக்கழகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கலகத்தனமாக நடந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் மேற்கொண்ட முயற்சி இதுவரை தோல்வியடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 750 பேர் கொண்ட குழுவொன்று கலகத்தனமான முறையில் நடந்து கொள்வதாக புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய, கொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினர் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலகத்தனமான முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும்…
தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான கடிதம் அண்மையில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டது. 2022 வருடாந்த மற்றும் பத்தாண்டு இடமாற்றத்தின் கீழ் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி, இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களது சேவைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கடமைகளுக்கு சமூகமளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இது சட்டவிரோதமான செயலாகும். அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அவர்களது பாடசாலைகளில் இருந்து உடனடியாக விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் கடமைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு கடமைகளை வழங்குவதற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி ஏற்பாடுகளைச் செய்த பின்னர், மூன்று நாட்களுக்குள் அனைத்து அதிபர்களும் விவரங்களைத் தம்மிடம் தெரிவிக்குமாறும் செயலாளர் கேட்டுக் கொண்டார்.
அரச ஊழியர்கள் திங்கட்கிழமை (15) முதல் அலுவலகங்களுக்குள் பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் கைவிரல் அடையாள இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் தொற்று உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் காரணமாக, அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கும் விடயங்களில் விசேட சுற்றறிக்கைகள் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டிருந்த போதிலும், தற்போது நிலவும் சுமூகமான சூழ்நிலையில் அதற்கான தேவைகள் இல்லாத காரணத்தினால் இப்புதிய சுற்றுரிருபம் திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படவிருப்பதாக அமைச்சின் செயலாளர் கே. டி. என்.ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார். அதன்படி, அமைச்சினால் வெளியிடப்பட்ட 01.10.2021 திகதியிட்ட சுற்றறிக்கையின் விதிகள் 15.05.2023 முதல் இரத்துச் செய்யப்படுவதாகவும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் புதிய சுற்றுநிருப விதிகளின்படி செயற்படுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிகம – பெலென பகுதியிலுள்ள தொடருந்து கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (3) பிற்பகல் வெலிகம – பெலன உரக் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள கடவையில், மாத்தறையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்துதடன் குறித்த முச்சக்கரவண்டி மோதியுள்ளது. முச்சக்கரவண்டியில் தாயுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளும் மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளனர். இராணுவத்தில் கடமையாற்றி விடுமுறையில் வந்திருந்த 32 வயதுடைய அவர்களின் உறவினர் ஒருவர், முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன் ஒருவரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்“. ஏனைய இரண்டு பிள்ளைகளும், தாயும் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிகம – பெலியான, மோதரவத்தை பிரதேசத்தைச்…