முன்னதாக அறிவித்தது போன்று பால் மாவின் விலை இன்று திங்கட்கிழமை (15) குறைக்கப்பட மாட்டாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் பால் மா விலையை 200 ரூபாவால் குறைக்க இறக்குமதியாளர்கள் கடந்த வாரம் இணக்கம் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் விலை குறைக்கப்படாது என இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.
Author: admin
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 13 மாவட்டங்களில் 59 சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளை டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் கண்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, அதிக ஆபத்துள்ள வலயங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த வருடத்தில் இதுவரை 33,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதே வேளையில் 20 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் 3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதிக மழை வீழச்சியே டெங்கு பாதிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
இலங்கையின் ஆடைத் தொழிலாளர்கள் வேலை இழப்பை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர். பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் பல ஆடைத்தொழிற்சாலை ஒப்பந்தங்கள் பங்களாதேஷை நோக்கி நகர்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு இலட்சம் மயக்க மருந்து குப்பிகள் தரமற்ற நிலைமைகள் காரணமாக பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இந்த மருந்து இந்திய நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்தைப் பயன்படுத்துவதால் நோயாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த மருந்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே சுகாதார அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி மருந்தை வாங்கியவர்களிடம் இழப்பை வசூலிக்க வேண்டும் என்றும் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார். இந்த மருந்து இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மருந்து அல்ல என்பதை மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தற்போது உறுதி செய்துள்ளதாகவும், ஆனால் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டு நோயாளிகள் பயன்படுத்தும் வரை அதிகாரிகளுக்கு இது பற்றி தெரியாமல் இருப்பதுதான் பிரச்சினை என்றும் அவர் கூறினார். 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்ததில்…
பம்பலப்பிட்டி கடற்பரப்பில் முறையான அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்துடன், 5 மோட்டார் சைக்கிள்களும் அந்த பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. பம்பலப்பிட்டி கடல் மார்க்கத்தில் மோட்டார் சைக்கிள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று அதிகாலையில் டிக்டொக் மூலம் இளைஞர்கள் இதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. சமூக ஊடக தளமான TikTok இல் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை எவ்வாறு ஓட்டுவது என்பதைக் காட்டும் வீடியோவையும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர். வீதியில் செல்லும் வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் வீதியில் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் 17-23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
2022ஆம் ஆண்டில் இலங்கையின் கணினி கல்வியறிவு வீதம் 35.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தேசிய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவர திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. திணைக்கள தரவுகளுக்கு அமைய 2021 ஆம் ஆண்டு 35 சதவீதத்தமாக காணப்பட்ட கல்வியறிவு 0.7 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன், 2020 ஆம் ஆண்டு 32 சதவீதத்திலிருந்து 3.7 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டு இலங்கையில் நகர்ப்புற மக்களிடையே கணினி கல்வியறிவு வீதம் 49.1 சதவீதமாகவும் கிராமப்புற மக்களிடையே 34.2 சதவீதமாகவும் உள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேல்மாகாணத்தில் வசிப்பவர்களில் 47.1 சதவீதமானவர்கள் கணனி அறிவுள்ளவர்கள் என்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 34.6 சதவீதமானவர்களும் மத்திய மாகாணத்தில் 34.2 சதவீதமானோருக்கு கணினி கல்வியறிவு வீதம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவிக்கிறது.
அவசரநிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் முப்படையினரும் முன்பயிற்சிகளை வழங்குவதற்காக கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் முப்படையினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி முப்படையினரும் ஒத்திகையில் மாத்திரம் ஈடுபட்டுள்ளதாகவும், அன்றி எவ்வித கடமை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார். அவசர காலங்களில் பொலிஸாருக்கு கடமையாற்றும் வகையில் இராணுவத்தினர் இவ்வாறு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான பயிற்சிக்கான இறுதி திகதியை அறிவிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 12ஆம் திகதி முதல் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பொலிஸாரைத் தவிர முப்படையைச் சேர்ந்தவர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தம் இடம்பெற்று 23 மாதங்களுக்கு மேலான நிலையில், கொழும்பு கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிங்கப்பூர் உரிமையாளரது சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியுள்ளமை தொடர்பில் சட்டமா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதிவான் கெமிந்த பெரேரா முன்னிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த சட்டத்தரணியிடம் தமது ஆட்சேபனைகளை முன்வைத்தது. குறித்த கப்பல் நிறுவனம், தனது நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக சட்டத்தரணி ஒருவரை திடீரென அனுப்பியுள்ளமையானது, சம்பவம் தொடர்பான விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சி என்று சட்டமா அதிபர் தரப்பு மன்றில் தெரிவித்தது. கப்பலின் தலைவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில், கப்பல் உரிமையாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை உறுதிப்படுத்தும் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு மேலதிக நீதிவான், கப்பலின் உரிமையாளரின் நலன்களுக்காக முன்னிலையான சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, வழக்கு எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே…
இலங்கையில் உள்ள சுமார் 430 அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட அல்லது மறுசீரமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் 2 மாதங்களுக்குள் ஆரம்பித்து இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 430 அரச நிறுவனங்களை நட்டம் மற்றும் இலாபம் ஈட்டும் உத்தேச மறுசீரமைப்பு செயல்முறைக்காக இலங்கையின் நிதி அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், சில நிறுவனங்கள் விற்கப்படும் சில நிறுவனங்கள் மூடப்படும் அல்லது இணைக்கப்படும் அல்லது மறுகட்டமைக்கப்படும். மேலும் இந்த 430 நிறுவனங்களில் 39 கூட்டுத்தாபனங்கள், 218 கம்பனிகள் மற்றும் 173 சட்டப்பூர்வ சபைகள் உள்ளன. இந்த நிறுவனங்களில் 21 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களும் அடங்குகின்றன. மதிப்பீடுகளின்படி, கடந்தாண்டு, இலங்கை பெற்றோலிய நிறுவனம் 615 பில்லியன் ரூபாய்களையும், இலங்கை மின்சார சபை 272 பில்லியன் ரூபாய்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 70 பில்லியன் ரூபாய். மற்றும் சிலோன் ஷிப்பிங் கோர்ப்பரேஷன் லிமிடெட் 4 பில்லியன் ரூபாய்களையும்,…
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)