ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று (13) மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தவர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார். இவ்வாறு கைதான நபர் கல்முனை 11 பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 1 கிராம் 850 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
Author: admin
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலம் தாழிறங்கல், கற்பாறை சரிதல், மண்மேடு சரிதல், நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல் உள்ளிட்டவை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பல வருடங்களாக வருமான உரிமத்தைப் புதுப்பிக்காத சுமார் 2.3 மில்லியன் வாகனங்களைக் கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களின் தரவுத்தளத்தை சரிபார்த்து அவ்வாறான வாகனங்களின் விபரங்களை வழங்குமாறு திணைக்களம் ஒன்பது மாகாணங்களின் பிரதம செயலாளர்களிடம் வினவியுள்ளதாக ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த தகவலின் அடிப்படையில், இதுபோன்ற வாகனங்களை கண்காணித்து அவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரிவிக்க மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் விபரங்களை வழங்குவதற்கு தலைமைச் செயலாளர்கள் ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 6 மில்லியன் வாகனங்கள் மட்டுமே க்யு.ஆர் குறியீட்டு எரிபொருள் அமைப்பிற்கு பதிவு செய்துள்ளதாக திணைக்களம் கண்டறிந்ததையடுக்கு வாகனங்களைக் கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வருவாய் உரிமம் பெறாத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்…
பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண் மாணவியரை பாதுகாத்துக் கொள்வது குறித்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த, கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த ஆண்டு சுமார் 436 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 68 சிறுவர் துஷ்பிரயோகம் செய்தவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளம் பெண்களை தெரியாத நபர்களுடன் சுற்றுலா மற்றும் புனித யாத்திரைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டிய பெற்றோர்களின் கவனக்குறைவால் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக பல ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இப்பாறான துஷ்பிரயோகம் தொடர்பாக கிட்டத்தட்ட 2,809 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் பதிவாகியுள்ளன.
அரசாங்கம் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சில தொழிற்சங்க குற்றச்சாட்டுகளை தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார். “தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்கள் தவறானவை. நாங்கள் பொது ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளோம், அதன் பிறகு நாங்கள் ஒரு முன்மொழிவை உருவாக்க வேண்டும்,” என்று அமைச்சர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். முன்னதாக, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் கூட்டுத் தொழிற்சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் கூறுகையில், வாரத்தில் 4 நாள் வேலை என்று 3 நாட்கள் வார விடுமுறையுடன் அறிமுகப்படுத்தி 8 மணி நேர ஷிப்டுக்குப் பதிலாக 12 மணி நேர வேலை மாற்றத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய நடவடிக்கையால் தொழிலாளர்கள் தற்போது அனுபவித்து வரும் சலுகைகளை இழக்க நேரிடும். இந்த மாற்றத்தைத் தடுக்க அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைய வேண்டும்,” என்று அவர்…
இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் நோக்கத்தில் கிராம சேவகர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கோவிட் நோயின் நிலைமை மற்றும் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடு வீடாகச் சென்று தகவல் சேகரிப்பதை நிறுத்த கிராம சேவகர்கள் முடிவு செய்திருந்தனர். எனினும் இம்முறை கிராம சேவகர்கள் வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிராம சேவகர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் வீட்டில் இல்லை என்றால், உடனடியாக கிராம சேவகர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு மக்களுக்குத் தெரிவிக்கிறது. அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக இம்முறை வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பெயர் இடம்பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அக்டோபர் 31 ஆம் திகதிக்குள் வாக்காளர் பதிவுப் பணியை முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலையானது மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவையான அளவு மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்காமையினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறிருப்பினும் மரக்கறிகளின் விலையானது மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் மரக்கறி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த எப்ரல் மாதம் அதிகளவிலான மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றமையினால் விலையானது குறைவடைந்து காணப்பட்டது. இம்மாதம் மரக்கறிகளின் உற்பத்தி பாரியளவில் குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேசங்களில் உள்ள நில்வலா ஆற்றைச் சுற்றியுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இந்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஆறுகளின் நீர்மட்டப் பகுப்பாய்வின்படி, அடுத்த 03 முதல் 24 மணித்தியாலங்களுக்கு மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட பால் மாவின் விலை முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு மற்ற மாகாணங்களுக்கும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 200 ரூபாவால் குறைக்கப்பட்ட விலைகள் அடங்கிய லேபிள்கள் இன்று (14) பால் மா பொதியில் எழுதப்படும் என சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார். வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து நாளை (15) முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படும் என தெரிவித்தார். எவ்வாறாயினும், ஆர்டர் செய்யப்பட்ட பால் மா கப்பலின் தாமதம் காரணமாக, புதிய விலையில் நுகர்வோருக்கு பால் மாவை வழங்குவதில் தாமதம் ஏற்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.
பூமியில் வெப்பத்தை அதிகரிக்கும் எல் நினோ விளைவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த நிலைமை வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கிழக்கு பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டி எல் நினோ உருவாகி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது இயல்பை விட வலுவாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது. இது அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் அடுத்த ஆண்டிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உலக சராசரி வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.