வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்தத் தீர்ப்பை வழங்கினார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை பராமரிக்க முடியாது என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர். அடிப்படை ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Author: admin
2023 இல் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஐ தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று காலை நிலவரப்படி டெங்கு பாதிப்பு 35075 ஆக உள்ளது. மொத்த நோய்த்தொற்றுகளில் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறையில் முறையே 7904, 7348 மற்றும் 2086 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேல் மாகாணத்தின் மொத்த வழக்குகள் 17338 ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக, புத்தளம் மாவட்டமும் கணிசமான எண்ணிக்கையில் 2483 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, மாவட்டங்களின் அடிப்படையில் மூன்றாவது மிக உயர்ந்ததாகும். மே மாதத்தில், இதுவரை மொத்தம் 5,406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தொற்றுகள் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 22 உயிர்களைக் கொன்றுள்ளன. இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொடுக்கும் 09 தரகர்கள் இன்று காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பரிசீலிப்பதற்காக 25,000 ரூபா பணம் அறவீடு செய்து வரிசையில் நிற்காமல் முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாக இந்தக் கடவுச்சீட்டுகள் பெற்றுக் கொள்ளும் நடைமுறை குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், அதனை உடனடியாக மேற்கொள்ளுமாறும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி இன்று காலை இவர்களிடம் பணம் பெற்ற 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கைகள் தொடரும் என்றும், மோசடியாளர்களுடன் இணைந்து செயல்படும் அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார்.
உமா ஓயா நீர் மின் நிலையத்தின் அலகு 1 இன் மின் உற்பத்தி நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், எதிர்வரும் செப்டம்பர் மாதம் அலகு 2 இன் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனூடாக,120 மெகாவோட் நீர் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இராணுவ வீரர்கள் தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 3,348 இதர நிலைகளும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதேவேளை, இலங்கை கடற்படையின் 1,731 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
குருநாகல் – யந்தம்பலாவ நகரில் 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த சிறுவன் காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு தனது மைத்துனரை பார்ப்பதற்காக வந்துள்ளார். மீண்டும் வீட்டிற்கு செல்ல முற்பட்ட வேளையில் அறியாமை காரணமாக தவறான பேருந்தில் ஏறியுள்ளது. இதனையடுத்து, அவர் குருநாகல் நகருக்கு செல்லும் வழியை அறிவதற்காக அருகில் உள்ள நிதி நிறுவனமொன்றுக்கு சென்றபோது, அங்கு பணிபுரிந்த மூன்று ஊழியர்களால் அவர் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பின்னர் சம்பவத்தையறிந்த அப்பகுதி இளைஞர்கள் குத்தகை நிறுவனத்தை சுற்றி வளைத்ததுடன், சம்பவம் குறித்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். எனினும், குறித்த மூன்று சந்தேக நபர்களும் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தனர். இந்தநிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (11) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன. இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுள்ளன. எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகள் தவிர பாராளுமன்றம் கூடும் ஏனைய நாட்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரத்தை ஒதுக்க முடிவுசெய்யப்பட்டது. பாராளுமன்றம் மே 23ஆம் திகதி மு.ப 9.30 மணிக்குக் கூடவிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2312/67 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2312/68 67 ஆம்…
கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காயமடைந்த நபரின் சகோதரர், சகோதரரின் மகன் மற்றும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் காணி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றிரவு தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் நின்று கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் அந்த இடத்திற்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், குறித்த நபரின் மனைவியையும் துப்பாக்கியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (19) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற முன்னாள் தவிசாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வசந்த முதலிகே உள்ளிட்ட 7 பேரை இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியது, பணிக்கு இடையூறு விளைவித்தது, கலவரத்தில் ஈடுபட்டமாய் ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். பல கோரிக்கைகளை முன்வைத்து களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.