Author: admin

(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை ஶ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ விழாவின் ஆறாம் நாளன்று பாண்டிருப்பு ஶ்ரீ சித்தி விநாயகர் ஶ்ரீ அரசடி அம்பாள் ஆலயத்தினதும் ஶ்ரீ வடபத்ரக்காளி அம்பாள் ஆலயத்தினதும், ஶ்ரீ வடபத்திரகாளி அம்பாள் ஆலயத்தினது நிருவாக சபையினதும் விஸ்வப்பிரம குல மக்களும் உபயம் ஏற்று ஆறாம் நாளன்று திருவிழாவை மிகச் சிறப்பாக நடாத்தி முடித்தனர்.

Read More

ஆபிரிக்காவிற்கு வெளியில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை உள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை தனது தனித்துவமான சுற்றுலா சலுகைகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக தொடர்ந்து பலரதும் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது. உலக நாடுகளில் சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும் மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஆசிய யானைகள், மயில்கள், நீர் எருமைகள், குரங்குகள் மற்றும் தேன் உண்ணி கரடிகளை அதிகம் கொண்ட தேசமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேனப் கோடில் இருந்து டொமினிக்கன் குடியரசு வரை திமிங்கலங்களை பார்க்கக்கூடியதாக இருந்தாலும், இலங்கையில் மாத்திரமே எளிதில் நீலத் திமிங்கலங்களை காண முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. தொலைக்காணொளி ஊடாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது. இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பான அனைத்து தரப்பினரிடமிருந்தும் தற்போது சாதகமான மற்றும் நம்பிக்கையான பதில்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் சீனப் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் இந்தக் கலந்துரையாடலை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு முகங்கொடுத்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசரமாகத் தேவையான 2 தொன் ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்க அமெரிக்கெயார்ஸ் [AmeriCares] ஏற்பாடு செய்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் குழந்தைகளின் பிறப்பு விளைவுகளை மேம்படுத்தவும் 16,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனையின் பிரகாரம் கர்ப்பிணிப்பெண்களுக்கான போசணைத்தேவையைப் பூர்த்திசெய்வதற்கு சுகாதார அமைச்சுக்குப் பல்வேறு முக்கிய போசணைப்பதார்த்தங்கள் தேவைப்பட்டன என்றும், எனவே சுகாதாரத்துறைசார் உதவி வழங்கலை இலக்காகக்கொண்டு செயற்பட்டுவரும் அமெரிக்க நிறுவனமான ‘அமெரிக்கெயார்ஸ்’, அமைப்பின் இவ்வுதவி பெரிதும் பயனளிப்பதாக அமையும் என்றும் வெளிவிவகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி, இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர். அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , கோப்பாய் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும் என நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் கணித்துள்ளார். ஈராக் புவியியலாளர் சலின் அமாதியும் இதனை உறுதி செய்துள்ளார். இது பூமியின் மேலோட்டத்தின் வலுவான இயக்கங்கள் காரணமாக உணரப்படும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நேற்று ரிக்டர் அளவுகோலில் 2.5 முதல் 5.4 வரையிலான 49 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சிறுவயது பிள்ளைகள் இணையத்தில் கல்வி கற்கும் போது ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் அவர்களின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கண் மற்றும் காது தொடர்பில் விசேட நிபுணர் டாக்டர் சந்திரா ஜயசூரிய தெரிவித்துள்ளார். குழந்தைகள் அடிக்கடி இயர்போன் பயன்படுத்துவதால், காதுக்குள் காது மெழுகு தள்ளப்படுவதாகவும், இதனால் காது அழுகல், பூஞ்சை, காது டிரம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவதாகவும் சந்திரா ஜயசூரிய தெரிவித்தார். இதுபோன்று காதில் பாதிப்பு ஏற்படுவதால், காது கேளாமை ஏற்படும் என்றும், எனவே கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். காதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது செவித்திறன் குறைபாடு ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுமாறு அவர் வலியுறுத்தினார்.

Read More

வவுனியா பெரியஉலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளாகி மாமியார்சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றைய தினம்காலை கணவனிற்கும் மனைவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அது முற்றியநிலையில் வீட்டில் இருந்த கோடாலி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவிமீது தாக்குதலை முன்னெடுத்துள்ளார். இதனைதடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பெரியஉலுக்குளம் பகுதியை சேர்ந்த டிபி அமராவதி (வயது60), என்ற பெண் பலியானதுடன் அவரது மகளான துலிகா ரத்தினசிறி (வயது37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை…

Read More

இலங்கையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எடை அதிகரிப்பால் பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன கூறுகிறார். உலக உடல் பருமன் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் “விழிப்புடன் இருப்போம், பருமனில் இருந்து விடுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சாந்தி குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். “2015 ஆம் ஆண்டில், ஆண்களில் 22.5% பேர் அதிக எடை மற்றும் பருமனானவர்களாக இருந்தனர். 2021 கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 30% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், 2015 இல், 34% பெண்கள் அதிக எடை மற்றும் பருமனான பிரிவில் இருந்தனர். 2021 கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை 48% ஆக அதிகரித்துள்ளது அதிகமாக உட்கொண்டால் அதிகப்படியான அளவு…

Read More