Author: admin

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கடத்தி, தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் பலம் வாய்ந்த அரசியல் கட்சியின் அமைப்பாளர் என கூறப்படும் நபர் ஒருவர் பொரளை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடவத்த ரன்முத்துகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதியைக் கடத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜீப் ஒன்றும் சந்தேகநபருடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொரளையில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி, கடந்த மாதம் 13ஆம் திகதி கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களாகக் காட்டிக் கொண்டு வந்தவர்களால் , அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் கடவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவை மாவட்டத்தின் தொகுதி அமைப்பாளர் என பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Read More

சட்டவிரோதமான முறையில் மஸ்கெலியா பிரன்ஸ்வீக் தோட்டத்தில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மாணிக்ககல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 29, 32 மற்றும் 65 வயதுடைய மஸ்கெலியா பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 08ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டு பொலிஸ் பிணையில் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்ததுடன், தமது கட்சிக்காரர் தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சுட்டிக்காட்டினர். அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தற்போது வழக்குத் தொடர முடியாது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து, பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Read More

எதிர்வரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேசிய மின் உற்பத்திக்கு 2300 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மிசக்தி எரிசக்தி அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார். மேலும், அரச நிறுவனங்களால் அனுமதிக்கப்படும் திட்டங்களை விரைவுபடுத்தவும், அங்கீகாரம் பெற முடியாத திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக உரிமங்களை இரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (01) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை தடுக்கும் வகையில் இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

நாயொன்றை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தைப் ​புலியொன்று தாக்கியதில் கடும் காயங்களுக்கு உள்ளான தோட்டத் தொழிலாளி, டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், பொகவந்தலாவை- டின்சின் தோட்டத்தில் நேற்று (01) இடம்பெற்றுள்ளது. அந்த தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலைக்கு அண்மையில் தேயிலைத் தோட்டத்துக்கு இராசயன கலவையை ​தெளித்துக்கொண்டிருந்த தொழிலாளியின் மீதே, சிறுத்தைப்புலி இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவ தினமான இன்று (01) காலை 10 மணியளவில் அவருக்கு மிக அண்மையில் நாயொன்று அபாயக் குரல் எழுப்பியுள்ளது. அந்த திசையை நோக்கி தொழிலாளர் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய பிடியிலிருந்த நாயை விட்டுவிட்டு, தொழிலாளியை அந்த சிறுத்தை பாய்ந்து தாக்கியுள்ளது. அங்கு பணியிலிருந்த ஏனைய தொழிலாளர்கள் எழுப்பிய சத்ததால், அந்த சிறுத்தை தப்பியோடிவிட்டது. சம்பவத்தில் காயமடைந்த அவர், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்கைளுக்காக டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தோட்டத்தில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், கோழிகள்…

Read More

தென்னாப்பிரிகா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிவரும் தென்னாப்பிரிகா அணி, ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக மார்க்ரம் 115 ஓட்டங்களையும் டீன் எல்கர் 71 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுக்க பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். தென்னாப்பிரிகாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம், கிரீஸில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது என கிரீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நகரங்களுக்கு இடையேயான எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் வீரியத்தால், பயணிகள் ரயிலின் நான்கு முன் பெட்டிகள் தடம் புரண்டதாகவும், முதல் இரண்டு பெட்டிகள் தீயில் எரிந்து நாசமானதாகவும் ஆளுநர் கான்ஸ்டான்டினோஸ் தெரிவித்துள்ளார். சுமார் 250 பயணிகளை மீட்ட பின்னர், அவர்கள் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை ரயில் பயணிகள் நிலநடுக்கம் போல் உணர்ந்ததாக நிவாரணக் குழுவினரால் மீட்கப்பட்ட பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்

Read More

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இதன் நீளம்: 71.15 ஆகும், நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் தாக்கியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Read More

கடந்த ஆண்டு மே மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது, 180 வீடுகளும், 100 வாகனங்களும் சேதமாக்கப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. எனினும், இந்த போராட்டத்தின் போது எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னாள் பிரதமரின் இல்லத்துக்கு தீ வைப்பதற்காக எந்த சந்தர்ப்பத்திலும் எரிபொருள் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Read More