மாணவர்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் ஒன்று நடைபெறவுள்ளதாக மர்ம நபர்கள் எச்சரிக்கை செய்த விடயம் காரணமாக வவுனியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் மகளிர் பாடசாலைக்குச் சென்ற மர்ம நபர்கள் இருவர், அங்கிருந்த காவலாளியிடம் தங்களை பொலிசார் என்று இனம் காட்டியுள்ளனர். அதன் பின்னர் வவுனியா நகரப் பிரதேசத்தில் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று நடைபெறவுள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளனர். அத்துடன் அப்பிரதேசத்தில் இரண்டு தற்கொலைக்குண்டுத் தாக்குதலாளிகள் நடமாடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் காவலாளி உடனடியாக பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கவே, அவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார் இச்சம்பவம் வவுனியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாணந்துறை, திக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Author: admin
காலியில் சிறைக்காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு சிறைக் கைதியொருவர் தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் இந்தச் சம்பவம் இன்று காலை நடைபெற்றுள்ளது கராப்பிட்டிய மருத்துவமனையின் ஒன்பதாவது மாடியில் அமைந்துள்ள வார்ட் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கைதியொருவரே தப்பிச் சென்றுள்ளார் அவருக்குப் பாதுகாவலாக இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கடமையில் இருந்தபோதும் அவர்களை சூட்சுமமாக ஏமாற்றி விட்டு அவர் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
க.பொ.த சாதாரண தர 2022(2023) பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிபர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளார். எக்காரணம் கொண்டும் அதிபர்கள் உரிய பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளுக்கு வழங்காமல் தடுத்து வைக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டுகள் கிடைக்காத காரணத்தினால் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனால் அதற்கு அதிபரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பியதும் மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன. அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், தற்போது, ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர், மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட சீருடை துணி விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை உள்ளூர் விநியோகஸ்தர்களால் வழங்கப்பட்ட 3,831,000 மீட்டர் சீருடை துணியில் 3,561,000 மீட்டர் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27,000 மீட்டர் சீருடை துணி காலி, களுத்துறை மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் இறுதிக் கட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடசாலை சீருடைக்கான தேவை 12,694,000மீட்டர் எனவும், 4.2 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர் பிக்குகளுக்கு இது விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலுக்காக கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலகில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் கொழும்பு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. World of statistics இனால் இந்த நகரங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நைஜீரியாவின் லாகோஸ், மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கோஸ்டாரிகாவில் உள்ள சான் ஜோஸ் ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (மே 25) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கி ; நேற்று 296.58 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 295.85 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 312.53 ரூபாவிலிருந்து 311.76 ரூபாவாக குறைந்துள்ளது.
பாணந்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தவர் பாணந்துறை திக்கல பகுதியைச் சேர்ந்த நயனா ரோஷினி என்ற 52 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் குழுவொன்று இன்று இரவு குறித்த வீட்டை சுற்றிவளைத்துள்ளது. சந்தேகத்திற்கிடமான பெண் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் திடீரென சுகவீனமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி, குறித்த பெண்ணை அவரது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன தலைமையிலான பொலிஸ் குழு…
ரயில் ஆசன ஒதுக்கீட்டினை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ரயில்வே துறையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் அனைத்து மோசடிகளையும், ஊழலையும் தடுத்து நிறுத்த முடியும் என்று அமைச்சர் கூறினார். வாய்மொழிப் பதில்களை எதிர்பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பஸ் கட்டணத்தை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக ரயில் கட்டணத்தை பேணுவது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட்டு கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அதற்காக முடிவெடுப்பதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாகவும், ரயில்வே திணைக்களத்தை திறம்பட நடத்துவதற்கு திணைக்கள முறைக்கு அப்பாற்பட்டு அதிகார சபையாக மாற்றப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.