கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் கண்காணிக்கக்கூடிய கடப்பாடுகளில் 25 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், முக்கியமான கடமைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக வெரிடே (Verite) தமது ஆய்வில் தெரிவித்துள்ளது. முதலாவதாக, குறிப்பிடத்தக்க தகவல் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக, மார்ச் மாத இறுதி வரை, மதிப்பீட்டிற்கு போதுமான தகவல்கள் கிடைக்காததால் அடையாளம் காணப்பட்ட 10 சதவீத உறுதிப்பாடுகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டது. அத்துடன் கடந்த ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டு உறுதிமொழிகளை இலங்கை தவறிவிட்டது. இவற்றில் முதலாவது பந்தயம் (Betting) குறித்த வரிகளின் அதிகரிப்பு தொடர்பானது. வரிகளை அதிகரிப்பதற்கான திருத்தம் 2023 ஏப்ரல் 04 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்தத் திருத்தம் இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. இரண்டாவது, மத்திய வங்கி சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் பெறுவது தொடர்பானது. பந்தயம் திருத்த யோசனையை போன்றே இந்த யோசனையும் 2023 மார்ச் 07 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டது. எனினும், இன்னும்…
Author: admin
அனுராதபுரம் நகரில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து நடவடிக்கையினை முன்னெடுக்கும் பஸ் மற்றும் வேன்கள் குறித்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 106 பாடசாலை சேவை பஸ்கள் சோதனையிடப்பட்ட நிலையில், அவற்றில் 65 பஸ்கள் போக்குவரத்து நடவடிக்கைக்குத் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, சில பஸ்களில் இயங்குவதற்கும், பாதுகாப்பிற்கும் இடையூறாக உள்ள மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றவும், மேலதிக குழாய்களை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டதுடன், இயக்க தகுதியற்ற தொழில்நுட்ப குறைபாடுள்ள பஸ்கள் சேவையிலிருந்து அகற்றப்பட்டன. ஏனைய பஸ்களின் குறைபாடுகளை சரிசெய்து 14 நாட்களுக்குள் மீண்டும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
டபிள்யு.டி.ஐ. வகை மசகெண்ணெய் பீப்பாய் ஒன்று 1.42 டொலர்கள் வீழ்ச்சியடைந்து 72.92 டொலர்களாக பதிவாகியுள்ளது. ப்ரெண்ட் ரக மசகெண்ணெய் 1.39 டொலர்கள் வீழ்ச்சியடைந்து 76.97 டொலர்களாக பதிவாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டுவர முற்பட்ட வேளையில் நேற்று (24) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார். 3 1/2 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட் போன்களை இலங்கைக்கு கொண்டு வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்ட அவர் 7.5 மில்லியன் ரூபா அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமைகளை தவறாக பயன்படுத்தியுள்ளதாக சபாநாயகரிடம் கடிதம் சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் ஆறு வயது பாடசாலை மாணவி மதிய நேரம் பாடசாலை விட்டு வந்த போது அவரை காட்டுக்குள் கடத்தி சென்று பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய நெடுங்கேணி இராணுவ முகாமின் இராணுவக் கோப்ரலுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (25) வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 14.05.2013 அன்று பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை ஆட்கடத்தல் புரிந்த குற்றச்சாட்டும், சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய இரண்டாவது குற்றச்சாட்டு என சட்டமா அதிபரினால் இரு குற்றச்சாட்டுகள் நிரம்பிய குற்றப் பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. வவுனியாவில் ஆறு வயது பாடசாலை மாணவி மதிய நேரம் பாடசாலை விட்டு வந்த போது அவரை காட்டுக்குள் கடத்தி சென்று பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய நெடுங்கேணி இராணுவ முகாமின் இராணுவக் கோப்ரலுக்கு…
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவரை களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பேலியகொடை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பாலத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சோதனையிடச் சென்ற போது மற்றுமொரு பெண் அந்த இடத்திற்கு வந்து பொலிஸ் உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் சந்தேக நபர்கள் இன்று (25) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
வெயாங்கொடை – வத்துரவ தொடருந்து நிலையத்துக்கு அருகில், கைபேசியில் பேசிக்கொண்டு தொடருந்து வீதியில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு இளைஞர்களின் வீடுகளும் தொடருந்து மார்க்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், அவர்கள் இன்று காலை சுற்றுலா செல்வதற்கு தயாராகி வத்துரவ தொடருந்து நிலையத்தை நோக்கி சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும் இருவரும் கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டே நடந்துசென்றபோது, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. வெயாங்கொடை – வத்துரவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்தின் பின்னர், உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் வெயங்கொட தொடருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகள் இன்று உயர்நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் கனிஸ்கா டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் மாத்திரம் இது தொடர்பில் 1,150 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் காமினி சேனாரத்யபா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மிகமோசமாக சீர்குலைந்த நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட இலங்கை உலகில் மிகமோசமாக சீர்குலைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹங்க் உலகின் 157 நாடுகளை உள்ளடக்கி வௌியிட்டுள்ள குறித்த பட்டியலில் இலங்கையானது 11வது இடத்தில் உள்ளது. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், வர்த்தக நாணய மாற்று வீதம், வருடாந்த தனிநபர் உற்பத்தி வீதம்போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகின்றது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் சிம்பாப்வே உள்ளது. இலங்கை 11வது இடத்தில் உள்ளது. சிம்பாப்வே, வெனிசியூலா, சிரியா, லெபனான், சூடான், ஆர்ஜண்டினா, யெமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டொங்கா, கானா ஆகிய நாடுகளே உலகின் மிக மோசமாக சீர்குலைந்த 15 நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளாகும்.