இலங்கை குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இலங்கை வனவிலங்கு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கம், வணக்கத்திற்குரிய மாத்தறை ஆனந்த சாகர தேரர், ஒட்டாரா குணவர்தன மற்றும் ருக்ஷான் ஜயவர்தன உள்ளிட்ட 27 பேரினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Author: admin
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள டராஸ் தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் நேற்று (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி சேகரிப்பு பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான ரெமிஸ் (RAMIS) தொடர்பில் 1993 ஆம் ஆண்டில் தாம் பிரதமராக பதவி வகித்தபோது ஆராயப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் 2023 இலும் அதனை பற்றி பேசிக்கொண்டிருப்பது கவலைக்குரியதெனவும் நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை ஒருபோதும் தாமதப்படுத்தக்கூடாது என்பதோடு, அதனை துரிதப்படுத்துவதற்கு நிகரான பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்போது டிஜிட்டல் பெயர் பலகைக்கு ஒளியூட்டி, டராஸ் தலைமையகத்தை உத்தியோகபூர்வமாக திறத்துவைத்த ஜனாதிபதி,…
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயினால் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு துறைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்களிடம் இருந்து 06 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நட்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வன அரன அறக்கட்டளை உள்ளிட்ட 04 தரப்பினர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர். தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்ளூர் பிரதிநிதி நிறுவனமான C Consortium Lanka நிறுவனம் உட்பட 8 நிறுவனங்கள், கப்பலின் உரிமையாளர்கள், காப்புறுதியாளர்கள் மற்றும் நடத்துநர்கள் இதன் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை தகுதியற்ற சுமார் 70 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் பொறுப்புக்கூற வேண்டிய தகுதிவாய்ந்த அதிகாரிகள் உள்ளூராட்சிமன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும். தகுதி இருந்தாலும் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வினைத்திறன்மிக்கவர்கள் தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தகுதியற்ற பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் மாநகர ஆணையாளர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமது பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால் பெற்றோர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்புளுவென்சா வைரஸ் தொற்று கொரோனா தொற்றை போன்றது, அது மக்களிடையே விரைவாக பரவக்கூடியது எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு ஒன்லைன் வர்த்தக தளத்தில் ஒரு தயாரிப்பை விளம்பரப்படுத்தும் போது எந்த பிரதிநிதித்துவத்தையும் மறுப்புகளையும் செய்யக்கூடாது. குறித்த வர்த்தமானி அறிவிப்பில், ஒரு பொருளின் உண்மையான கொள்முதல் விலையானது, ஒன்லைன் வர்த்தக தளத்தில் காட்டப்படும் விலைக்கு சமமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஆர்டர் உறுதிப்படுத்தல், போக்குவரத்து ஏற்பாடுகள், ஆர்டர்களை ரத்து செய்வதற்கான உரிமை ஆகியவையும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
மஹவஸ்கடுவ பகுதியில் நேற்று பெண் ஒருவரிடம் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பதுரலிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்க பொது மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சீமெந்து மூட்டையின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தேசிய கட்டுமான சங்கம் (NCASL) கவலை வெளியிட்டுள்ளது. இந்த விலை குறைப்பு போதுமானதாக அமையாது என்று சுட்டிக்காட்டியுள்ள NCASL, அரசாங்கம் சீமெந்து மூட்டையின் விலையினை 1800 ரூபாவாகக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள NCASL இன் தலைவர் சுசந்த லியனாராச்சி, டொலரின் பெறுமதி ஓரளவுக்குக் குறைந்துள்ள வேளையில் மக்களின் நலனுக்காகக் குறிப்பாக நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான தொழிலாளர்களின் நலனுக்காக அரசாங்கம் சீமெந்து மூட்டையின் விலையைக் குறைக்க வேண்டும். தற்போது சந்தையில் சீமெந்து விலை அதிகரிப்பினை தாங்க முடியாததால் 55 சதவீத அரசு மற்றும் தனியார் துறை கட்டுமானங்கள் முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், எனவே இந்த தொகையை விட குறைந்த பட்சம் 1800 ரூபா அல்லது அதற்கும் குறைவான விலைக்கு சீமெந்து மூடையை விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
டெங்கு ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து உள்ளூராட்சி அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார். இதன்படி, மாகாண ஆளுநர்கள், மாகாண ஆணையாளர்கள், மாநகர சபை ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களை அழைத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்களின் தீவிர ஆதரவை கோருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.
நேற்றைய (19) தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபர அறிக்கை இதனை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, நேற்று 299.21 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 300.65 ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று 312.17 ரூபாவாக காணப்பட்ட டொலரின் விற்பனை பெறுமதியும் இன்று 314.08 ரூபாவாக அதிகரித்துள்ளது.