மோசமான காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டும் போது மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை வைத்திருக்குமாறு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவித்துள்ளது. அதேபோல், வாகனங்களுக்கு இடையே ஒரு இடைவெளியை வைத்து, இருட்டாக இருப்பதால், முன் மற்றும் பின் விளக்குகளை எரிய வைத்து தனது வாகனத்தை இலக்குக்குச் செல்லுமாறு மேலும் கூறப்பட்டது.
Author: admin
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர், இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர பெண் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் மேலும் பல பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அந்தந்தப் பாடசாலைக்கு பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
கம்பளை, பன்விலதென்ன பிரதேசத்தில் இன்று (21) காலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட வீடு ஒன்றை பொலிஸ் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவத்தில் இளைஞரின் வீட்டில் இருந்த நாயும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டரின் உடலை எதிர்வரும் 25 ஆம் திகதி தோண்டியெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஐவரடங்கிய விசேட வைத்திய குழாம் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, தினேஸ் ஷாப்டரின் உடலை தோண்டியெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சடலம் மீது இரண்டாவது தடவையாகவும் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. பொரளை பொது மயானத்தில் அவரது காரில் கழுத்து இறுகக்கட்டப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி தினேஸ் ஷாப்டர் கண்டுபிடிக்கப்பட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தினேஸ் ஷாப்டர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி கடந்த வாரத்தில் 189 பில்லியன் ரூபாய் (18,900 கோடி ரூபா) புதிய நாணயத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் மத்திய வங்கி மேலும் 180 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு கடனாக வழங்கியுள்ளது. அதற்கமைய, கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு வழங்கிய மொத்த கடன் தொகை 369 பில்லியன் ரூபாவாகும் (936,900 கோடிரூபா). சமகால மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டதன் பின்னர் இதுவரை 1061 பில்லியன் ரூபா பெறுமதியான புதிய நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. இது ஒரு ட்ரில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.
#சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மேல் மாகாணம் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (21) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காற்று அவ்வப்போது கி.மீ. 40 வரை பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (வளிமண்டலவியல் தினைக்களம்)
இலங்கையில், வட மாகாணம், மொனராகலை மாவட்டம், வடமேல் மாகாணம் உட்பட 11 மாவட்டங்களுக்கு கடுமையான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. வெப்ப பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர்கள் எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார்கள். திறந்தவெளிகளில் தொழில் செய்பவர்கள், தலைக்கு தொப்பி, தலைப்பாகை போன்ற அங்கிகளையும், நேரடி வெப்ப தாக்கத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்கான அங்கிகளையும் அணியுமாறு சுகாதார பிரிவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதே நேரம், கூடுதலானu நீரை அருந்துமாறும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை அச்சிட செலவிடப்பட்ட 20 கோடிக்கும் அதிகமான தொகை இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக அரசாங்க அச்சகத்தின் செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை அச்சிடுவதற்கு பங்களிப்பு செய்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பான மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை திறைசேரியால் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில், கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற ஏறாவூர் டிப்போவிற்குச் சொந்தமான பஸ், கல்முனையில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் ஏறாவூர் டிப்போவிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கிரான்குளம் விஸ்ணு கோயிலுக்கு முன்னால் தூங்கிக் கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 23 வயது இளைஞனை மோதிவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதுடன் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.