உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் சடலத்தை மீட்பதற்குத் தேவையான பணிகளை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்வார்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, சடலம் எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்படும் என தெரிவித்தார். இதன்படி, தினேஷ் ஷாப்டரின் சடலம் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் பொரளை பொலிஸார் விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நீதவான், ஏனைய நிபுணர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் பங்களிப்புடன் சடலம் மீட்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Author: admin
விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டதுடன் இணைந்து செயற்படும் ஜனாதிபதி செயலகம், விவசாய அமைச்சு உட்பட ஏனைய அமைச்சுக்களின் மேலதிகச் செயலாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான தரங்களில் இருக்கின்ற அதிகாரிகளை மேற்படி அலுவலகத்திற்காக பெயரிடுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவுறுத்தியதுடன் இந்த வேலைத்திட்டத்திற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தற்போது ரோஜா சாகுபடிக்கு அதிக கிராக்கி உள்ளதாக மலர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வெலிமடை, ஊவா பரணகம, கெப்பிட்டிபொல, பொரலந்த, தியத்தலாவ, பண்டாரவளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கோவிட் பாதிப்பு காரணமாக மலர் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். இருப்பினும், ரோஜா சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் விலை குறைந்தால், அது தங்களின் பொருளாதார நிலையில் சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொரளை காதர் நானாவத்த பகுதியில் இன்று (21) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கூரிய ஆயுதங்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் காதர் நானா வத்தே மல்லிய என்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 8 வாள்கள், கத்திகள், போதைப்பொருட்கள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது சாதனையை இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் அமைச்சராக தான் சில பணிகளை நிறைவுசெய்ததாகவும், இந்தச் சாதனையை தற்போது தன்னைவிட இளம் வயதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்து, இளம் அமைச்சருக்கான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன், இளம் தலைமுறையினர் இவ்வாறான சாதனையை செய்ய முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சுமார் 169,000 மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கேகாலை, அரநாயக்க நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் 3,847 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு, நெதர்லாந்து அரசாங்கத்தின் 18,650 மில்லியன் ரூபா கடனுதவியின் கீழ்,…
பண்டாரவளை நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 10 வயதுடைய மாணவியை வேனில் கடத்திச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ள தாகவும் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பண்டாரவளை பொலிஸார் இன்று (21) தெரிவித்தனர். பண்டாரவளை துஹுல்கொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியையே கடத்திச் செல்ல வேனில் குழுவொன்று தயாரானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு செல்வதற்கு பஸ்ஸுக்காக குறித்த மாணவி தனியாக நடந்து சென்றபோது, தொலைவில் வெள்ளை நிற வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. பின்னர் கறுப்புத் துணியால் முகத்தை மூடியிருந்த இளைஞர் ஒருவர், வேனில் இருந்து இறங்கி மாணவியின் அருகில் வந்து, ‘உனது தாயார் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சொக்லேட்டை உனது தாயார் உன்னிடம் கொடுத்து தன்னுடன் வேனில் வரச் சொன்னதாகவும்’ அந்த மாணவியிடம் கூறியதாகவும் பொலிஸார்…
தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமியில் விழுந்த சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று, கிளிநொச்சி தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை இலக்குவைத்து கிபீர் விமானத்தால் கீழே வீசப்பட்ட வெடிக்காத குண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேசவாசியினால் தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த சக்திவாய்ந்த குண்டு கண்டறியப்பட்டள்ளது. 3 அடி நீளமும், 3 அடி சுற்றுவட்டமும் கொண்ட இந்த குண்டு, இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் பூமியை நோக்கி வீசப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் அக்குண்டு பதிந்தமையால், இரும்புக்கரல் பிடித்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதில் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி அறிவித்துள்ள போதிலும், அவருக்கு ஆதரவை வழங்குமாறு இதுவரையில் தம்மிடம் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் நகரில் பிரசித்தி பெற்ற புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கம் போல் உணவகத்தில் சமையல் வேலை செய்வதற்கு எரிவாயு அடுப்பை மூட்டிய போது அடுப்பில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்படுள்ளதாகவும் , இதையடுத்து ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்களும் , ஏனைய வர்த்தக நிலைய ஊழியர்களும் ஒன்றிணைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் சம்பவத்தில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை எனவும் காயமடைந்த 42 , 44 , 63 வயதுடைய மூவர் என ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஆளாவதைத் தடுப்பதற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் விழிப்புணர்வை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்கும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. கல்வி அமைச்சர் பிரேமஜயந்த பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. பாடசாலை முறையின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவான கலந்துரையாடல் நேற்று கல்வியமைச்சில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றிருந்தது.