திக்வெல்ல கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயுள்ளார். இந்த விபத்து நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், படகு கவிழ்ந்த போது அவருடன் இருந்த மற்றுமொரு மீனவர் நீந்தி கரைக்கு வந்துள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரட்டுவ – பதீகம பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Author: admin
புத்தரையும் ஏனைய மதங்களையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜெரொம் பெர்னாண்டோ, நேற்று (21) நாட்டுக்கு வருவதாக முன்னர் அறிவித்திருந்த போதிலும், அவர் இன்னும் நாடு திரும்பவில்லை. எவ்வாறாயினும், சூம் தொழிநுட்பம் மூலம் இலங்கையில் நடைபெற்ற ஒரு பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்ட அவர், பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய பக்தர்களிடம் தனது கருத்தால் ஏற்பட்ட மன வருத்தத்திற்கு மன்னிப்பு கோருவதாகக் தெரிவித்தார். ஆனால் அன்றைய தினம் தான் கூறியது உண்மை என அவர் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். புத்தர் மற்றும் பிற மதத்தினரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ போதகர் ஜெரொம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பல தரப்பினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில், விசாரணையும் நடைபெற்று வருகிறது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றில்…
2023 மே 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த காலக் கட்டத்தில் பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினை எட்டியுள்ளது. அதன்படி, 2023 மே 19 வரையான காலப்பகுதியில் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் மதிப்பு 24.1% ஆகவும், ஸ்டெர்லிங் பவுண்டுடன் ஒப்பிடும்போது 15.4% ஆகவும், யூரோ நாணயத்துடன் ஒப்பிடும்போது 17.5% ஆகவும், இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது 18.7% ஆகவும் உயர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பெருமளவு சரிவடைந்துள்ளது. கடந்த 30 நாட்களில் தங்கம் ஒரு அவுண்சின் விலை 18.27 டொலர்களால் குறைவடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு அவுண்ஸ் தங்கம் 2050 டொலர்களை தாண்டியிருந்த போதும், தற்போது அது 1980 டொலர்களாக குறைவடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி ஏற்படும் என அய்வரி யூடியூப் செனலில் ஏற்ககவே எதிர்வு கூறியிருந்தோம். மே 5ஆம் திகதி வெளியான அந்த காணொளி கீழே தரப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சை தொடர்பான கற்பித்தல் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, யூக வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் பரீட்சை வினாக்களை விளம்பரப்படுத்துதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால் அல்லது மீறினால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான அபோசா பொதுத் தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் மே 29 முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் வாரத்திற்கு பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள 370 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாயம் அதிகம் உள்ள 39 பிரிவுகள் இனங்காணப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்தார். இந்த வருடத்தில் இதுவரை 22 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி வைத்தியசாலையில் அனுமதிப்பதன் மூலம் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீடுகளில் 0.4% டெங்கு நுளம்பு புழுக்கள் காணப்படுவதாகவும், அரச நிறுவனங்களில் 0.6% டெங்கு நுளம்புகள் காணப்படுவதாகவும் அந்த இடங்களை துப்பரவு செய்வது மிகுந்த அவதானத்துடன் செய்யப்பட வேண்டுமென சமூக வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி மேலும் தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
நாட்டின் சில பகுதிகளில் இன்று (21) இரவு வேளையில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேற்படி பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கில் 350 டிப்ளோமா போதனாசிரியர்களை ஆசிரிய சேவைக்கு இணைத்து கொள்ளவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ.உமா மகேஸ்வரன் கூறியுள்ளார். வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை வட மாகாண சபை இணையத்தளம் www.np.gov.ik மற்றும் வட மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் www.cfmin.mp.gov.lk எனும் முகவரியில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை தயாரிப்பதற்கு ஏதுவாக (27.05.2023) ஆம் திகதி சனிக்கிழமை வட மாகாண கல்வி அமைச்சில் ஆவணங்கள் சேகரிப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதனால் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேர ஒழுங்கிற்கமைவாக கீழ்வரும் ஆவணங்களுடன் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. இன்று (21) மதியம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் பாய்ந்தது. அதிஷ்டவசமாக இ.போ.ச.பேருந்து பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பேருந்தில் இ.போ.ச ஊழியர்கள் ஒரு சிலர் மாத்திரமே பயணித்திருந்தனர். இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பேருந்தை தூக்கி வீதிக்கு கொண்டு வந்தனர். குறித்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் பேருந்தின் படிகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.