மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான் குளப்பகுதில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய நேற்று (25.05.2023) மாவட்ட புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து குறித்த பகுதியை முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளதுடன், உள்ளூர் தயாரிப்பு துப்பாகி ஒன்றும் செடிகளையும் 2 பெரல் கோடா என்பவற்றை மீட்டுள்ளர். மீட்கப்பட்ட 2 பெரல் கோடைவை அந்த பகுதியில் அழித்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Author: admin
களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை இன்று(26) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. களுத்துறை வடக்கு – காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது கணவரின் மடிக்கணினியை பரிசோதித்தபோது அதில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதாக சந்தேக நபரான ஆசிரியரின்…
பேலியகொட பிரதேசத்தில் 24 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இடைநிறுத்தம் செய்யப்பட்ட மற்ற இரண்டு அதிகாரிகளில் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் என்று பொலிஸார் தெரிவித்தனர். 24 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காரில் தப்பிச் செல்லும் போது கைது செய்ய முயற்சிக்காத காரணத்தினால் இவர்கள்பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய பிரதமர் ப்யுமியோ கிசிடாவிடம் தமது மன்னிப்பை கோரியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் முன்கொணரப்பட்ட இந்த திட்டம், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஒரு தலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்டது. இந்தநிலையில் டோக்கியோவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கும் இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இருதரப்பு பாரிய திட்டங்களை உடன்பாடு இன்றி நிறுத்தவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கை ஜனாதிபதி வலியுறுத்தினார். இதேவேளை டோக்கியோவில் நடைபெற்ற மற்றுமொரு சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய நிதியமைச்சரை சந்தித்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய…
எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவித்துள்ளார். இதனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள் வெற்றிகரமான பெறுபேறுகளை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகிறார். களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சமூக வலுவூட்டல் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் இராட்சத கொடிய சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. இந்த ஆய்வுகள் தொடர்பான விசேட அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. அந்த ஆய்வின் மூலம், அண்டார்டிகாவில் தண்ணீருக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவுகளால் பூமியின் வலப்பக்கத்தில் உள்ள கடலில் இராட்சத சுனாமி ஏற்படலாம் என மேலும் தெரிய வந்துள்ளது. அதன் அளவைப் பற்றி சரியான குறிப்பு இல்லை என்றாலும், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சுனாமி ஏற்பட்டது என்பதற்கான சான்றுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளின்படி, இந்த சுனாமி அலைகள் தென் அமெரிக்கா, நியூசிலாந்து முதல் தென்கிழக்கு ஆசியா வரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டுள்ளன. சுனாமி எச்சரிக்கைகளை அடையாளம் காணும் தொழிநுட்பம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மேலதிக எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கு தங்கம் மற்றும் கைப்பேசிகளை கடத்தி வந்தமைக்காக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு சுங்கத் திணைக்களம் அபராதம் விதித்திருந்தது. இதனை அடுத்து அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று கூடிய கட்சித் தலைவர்கள், அவரை பதவி நீக்குவதற்கான பிரேரணையை கொண்டுவர முடிவு செய்தனர். எனினும் இந்த பிரேரணை எப்போது, யாரால் கொண்டுவரப்படும் போன்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக எச்சரிக்கை மணி அடித்தாலும், அரசாங்கம் இவ்விடயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக இலங்கையின் முன்னணி மருத்துவ சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. அரச மருத்துவமனைகளில் சில மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார். “குறிப்பாக கிளினிக்குகளில், நோயாளிகள் வெளியில் இருந்து மருந்துகளை வாங்குவதற்கு வைத்தியர்கள் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள். மேலும், தனியார் மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மருந்துகளால் சில நோயாளிகள் சரியான அளவை எடுத்துக் கொள்வதில்லை. இது ஒரு பாரிய பிரச்சினை, இது விரைவில் தீர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பற்றாக்குறை நிலவுகிறது; எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த விடயத்தின் தீவிரத்தன்மையை சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது,’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நன்கொடையாளர்கள் அரசாங்கத்திற்கு மருந்துகளை வழங்கும் செயல்முறையும் பல தடைகள் காரணமாக தடைபட்டுள்ளது. இதேவேளை…
கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் ரோசி சேனாநாயக்கவுக்கு ஜனாதிபதி புதிய பதவியொன்றை வழங்கியுள்ளார். உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக ரோசி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையுடன், கட்டுப்பாடுகள் பலவற்றை மேலும் தளர்த்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய CBSL ஆளுநர் வீரசிங்க:- பணவீக்க அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவு நிலுவை நெருக்கடியை கட்டுப்படுத்த இலங்கை தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பணவீக்கம் எந்தவொரு பொருளாதாரத்திற்கும் முதல் எதிரியாகும் – இப்போது அது குறைகிறது. எந்தவொரு கூட்டுக் கொள்கை நடவடிக்கைகளும் வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு வேதனையானவை என்றாலும், உயரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையின் பேரழிவுத் தாக்கங்களைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியம். பணவீக்கத்தைக் குறைத்தல் மற்றும் கொடுப்பனவு நிலுவை நெருக்கடியைத் தீர்ப்பது போன்ற முக்கிய நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதன் பலனை நாடு தற்போது அறுவடை செய்கிறது. தொடர்ந்து, மக்களை பாதிக்கும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும், என்றார்.