இலங்கையில் சட்டரீதியாகக் கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் முதலீட்டாளர் ஒருவரதும், முதலீட்டுச் சபையினதும் பங்களிப்புடன், பரீட்சார்த்தமாக கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Author: admin
யாழ்ப்பாணத்தை சேர்ந்த, ஒரே குடும்பத்தின் மூவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். படகு மூலம் தலைமன்னார் வழியாக தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையை இவர்கள் சென்றடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தஞ்சமடைந்துள்ள மூவரும் மண்டபம் முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், தமிழக கரையோர பாதுகாப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து இதுவரை 253 பேர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5வது இடத்தை பெற்றதற்காக இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதி இலண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை 604 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலையொன்றின் ஒழுக்காற்று ஆசிரியரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புத்தளத்திலுள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில் கடந்த 23ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் 4 பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்குரிய மாணவர்கள் அனைவரும் இன்று (26) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டனர். இதன்போது, ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையும் மற்றும் சாதாரண தர பரீட்சை முடிந்தவுடன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. மேலும், எந்த காரணத்திற்காகவோ முறைப்பாட்டாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், பிணை ரத்து செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூன் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இலங்கையில் 110 மெகாவாட் சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையில் ஈடுபட ரஷ்யா தயார் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரஷ்ய தூதுவர் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உட்பட பல உயர் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்தார். அரசாங்கம் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான நிதி அல்லது தொழில்நுட்ப ஆதரவை இலங்கைக்கு வழங்க ரஷ்ய தயாராக உள்ளது” என்று தூதுவர் லெவன் எஸ். டிஜகார்யன் மேலும் கூறினார்.
இலங்கை மத்திய வங்கி இன்று (26-05-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபா 62 சதம் – விற்பனை பெறுமதி 308 ரூபா 54 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 43 சதம் – விற்பனை பெறுமதி 381 ரூபா 80 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 48 சதம் – விற்பனை பெறுமதி 332 ரூபா 98 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 63 சதம் – விற்பனை பெறுமதி 343 ரூபா 48 சதம். கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 29 சதம் – விற்பனை பெறுமதி 227 ரூபா 54 சதம். அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபா 86 சதம் – விற்பனை பெறுமதி…
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களம் தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரதிவாதிகள் தன்னை சட்டவிரோதமாக கைது செய்ய தயாராகி வருவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், அவர்களைக் கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிரதிவாதிகளுக்கு வழங்குமாறும் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதி பிரதமர் ட்ரான் லூ குவாங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜப்பானில் இடம்பெற்ற சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் கலாசார தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் சுகாதார கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும், 15-18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்த நிகழ்ச்சித் தொடரை ஆரம்பிக்க முடியும் எனவும், இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற கல்வித் திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், பிள்ளைகளுக்கான பாலியல் சுகாதாரக் கல்வி குறித்த குறைந்தபட்ச அறிவை வளர்ப்பதில் சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறைகள் தலையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இலங்கையின் சுகாதார சேவைகளுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க உலக வங்கியின் விசேட…