கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவந்ததையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார். இக்கலந்துறையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் , விமானப் போக்குவரத்து பணிப்பாளர், சுற்றுலா பணியகம், விமானப்படை, Cinnamon Air,Fits Air மற்றும் ஏனைய தனியார் சேவையாளர்களும் கலந்துகொண்டனர். மேலும் cinnamon Air தனது விமான சேவையை ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிப்பதாக உறுதியளித்தது. அதை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை…
Author: admin
சர்வதேச சந்தையில் இருந்து இலங்கைக்கு கிடைத்த ஆடை கொள்வனவுகளின் அளவு 20 வீதத்தால் குறைந்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடை பிரதேசத்தில் இளம் ஜோடியொன்றை கடத்திச் சென்ற ஆறுபேரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வௌிவராத நிலையில், பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கல்கிஸ்ஸை ஹோட்டல் உரிமையாளரான இளைஞரைக் கொலை செய்த கொலையாளி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் ரத்மலானை பிரதேசத்தில் பதுங்கியிருந்த நிலையில் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 250 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற பலாப்பழத்தை 50ரூபா குறைத்து 200 ரூபா விலைக்கு கேட்டதற்காக கடந்த 22ம் திகதி குறித்த ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று முன்தினம் (25) இரவு மீண்டும் துபாய் நோக்கி விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் (25) இரவு 8:50 மணியளவில் துபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அலிசப்ரி ரஹீம் துபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளதை விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அலி சப்ரி ரஹீமுக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அவர் நாட்டை விட்டும் வௌியேறியுள்ளார். பெரும்பாலும் அவர் துபாயில் ஆரம்பித்துள்ள தனது நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வதிலேயே எதிர்காலத்தில் தனது கவனத்தை செலுத்தக் கூடும் என்று தெரிய வந்துள்ளது. அத்துடன் அலி சப்ரி ரஹீம் ஐரோப்பிய நாடொன்றுக்கு குடிபெயர்வது தொடர்பில் ஆலோசித்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரத்தினபுரியில் தோண்டியெடுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலமாணிக்கம் என அழைக்கப்பட்ட, மாணிக்கக்கல் முன்னர் கூறப்பட்டதைப் போன்று சந்தை மதிப்பை கொண்டதல்ல என்ற விடயம் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த மாணிக்கக்கல் 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியானது என்று கூறப்பட்டது. எனினும், அது 10,000 அமெரிக்க டொலர் மதிப்பை மாத்திரமே கொண்டது என்று நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணையின்போது தெரியவந்துள்ளது. அத்துடன், இது பழங்கால மதிப்புடையது என்றும், வெட்டி மெருகூட்ட முடியாது என்பதால், அதனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்க மட்டுமே முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த மாணிக்கக்கல் தொடர்பில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் மக்களை தவறாக வழிநடத்தியுள்ளதாக கோப் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
குரங்குகள் ஏற்றுமதிக்கு எதிரான மனு தொடர்பான உண்மைகளை முன்வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) சட்டமா அதிபருக்கு ஜூன் 26 வரை கால அவகாசம் வழங்கியது. இலங்கையின் 100,000 குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சுற்றாடல் அமைப்புகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதுடன், இந்த நடவடிக்கையின் மூலம் பாரிய மிருகவதைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணைக்காக சீனாவில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு ஒரு இலட்சம் இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக மனுதாரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
வெலிகமை, மதுராகொட பிரதேசத்தில் இன்றைய தினம் திருமணத்துக்காக காத்திருந்த இளம் பெண் ஒருவருக்கு ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இன்று அதிகாலை அவரின் வீட்டுக்குச் சென்ற நபரொருவர் மணப்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார். கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான பெண் தற்போது மாத்ததறை மருத்துவமனையின் அதிதீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிசைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிட் தாக்குதலுக்கு இலக்கான பெண் சிறிது காலத்துக்கு முன்னர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான இளைஞன் ஒருவரை காதலித்துள்ளார். எனினும் பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக இடைநடுவில் அவர் தன் காதலை கைவிட்டுள்ளார் இதன் காரணமாக சினமடைந்த முன்னாள் காதலனே குறித்த யுவதியின் மீது ஆசிட் தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் கொண்டுள்ள பொலிசார், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீர்த்தேவை அதிகரித்துள்ளதால், நீரை கவனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலைமையினால் நீர் விநியோகத்தின் அழுத்தம் குறைவடையலாம் அல்லது நீர் விநியோகம் தடைபடலாம் எனவே நீரை சேகரித்து பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவிக்கின்றது.
2023ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில், “2019 ஆம் ஆண்டில் 273 கொலைகள் பதிவாகியுள்ளன, 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 2023 இல் 146 நாட்களுக்குள் 239 கொலைகள் பதிவாகியுள்ளன. இது தினசரி 1.6% அதிகரிப்பாகும். இந்த நிலைமை இலங்கைக்கு ஏற்புடையதல்ல.” என்று குற்றப் பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார். சமூகத்திலும் குற்றவாளிகள் மத்தியிலும் ஆயுதங்கள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுப்பதற்கு வெற்றிகரமான வலுவான புலனாய்வு வலையமைப்பை இலங்கை பொலிஸார் விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.