உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பரந்த சதி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை (PSC) நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இது தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். டி லிவேரா ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், 2021 மே 17 அன்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருப்பதாக அந்த நேர்காணலில் தப்புல டி லிவேரா தெரிவித்திருந்தார். அத்துடன் நௌபர் மௌலவி என்பவர், இந்த சதியில் முக்கியப் பங்காற்றியதாகவும், அவரே மூளையாக செயல்பட்டார் என்று உறுதியாகக் கூற முடியாது என லிவேரா கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். சஹ்ரான் ஹாஷிம் – தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்த முடிவு செய்திருந்தாலும் -…
Author: admin
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இம்முறை அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார். அன்றைய தினமே அவர், ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். முன்னதாக 2022 செப்டம்பர் 51/1 தீர்மானத்தின் கீழ், 2023 செப்டம்பர் 2023 இல் நடைபெறவுள்ள 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜூன் மாத அறிக்கை கடுமையானதாக இருக்காது என்று ஜெனீவா தரப்பு தெரிவித்துள்ளது. 2022இல் ஐக்கிய நாடுகளின் மனிதை உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51-1 தீர்மானத்தின்போது 20 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.20 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்த…
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ கடந்த வருடம் சிம்பாப்வே போதகர் உபேர்ட் ஏஞ்சலை வரவேற்பதற்காக கொழும்பு விமான நிலையத்தின் மிகவும் பாதுகாப்பான பகுதிக்குள் எவ்வாறு சென்றார் என கேள்விகள் எழுந்துள்ளன. ஜெரோம் பெர்ணாண்டோ தனது தனிப்பட்ட செல்வாக்கையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி பாதுகாப்பு ரீதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றுள்ளார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விமான நிலையத்தின் பாதுகாப்பு ரீதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் மிக முக்கிய இராஜதந்திரிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் விவிஐபி பேருந்தில் ஜெரோம் பெர்ணாண்டோ சிம்பாப்பே போதகருடன் காணப்படும் படம் கிடைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹெரத் அந்த படம் விமான நிலையத்தின் அதிஉயர் பாதுகாப்பு பகுதிக்குள் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளார். அந்த பகுதிக்குள் நுழைவதற்கான அனுமதியை ஜெரோம் பெர்ணாண்டோ எவ்வாறு பெற்றார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பொறியியலாளரை தவிர வேறு எவரும் அந்த பகுதிக்குள் நுழைய…
நாட்டில் நாளை ஆரம்பமாகவுள்ள சதாரணத் தரப் பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்றவுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் வடரக சிறைச்சாலையின் ஐந்து கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையின் ஐந்து கைதிகளும் அடங்குவதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார். இவர்கள் வடரக மற்றும் மெகசின் ஆகிய சிறைச்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் இருந்து இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக அவர் கூறினார். இந்த பத்து பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும் உள்ளதாக சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.
நாட்டில் வட்டிவீதங்களை குறைப்பது குறித்து இலங்கை மத்திய வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் முதலாம் திகதி மத்திய வங்கியின் நாணய சபை ஒன்று கூடி, இதுதொடாபான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது துணை நில் வைப்பு வட்டிவீதம் (வசதி) 15.50 சதவீதமாகவும், துணைநில் கடன் வசதி வீதம் 16.50 சதவீதமாகவும் உள்ளது. நாட்டில் பணவீக்கம் குறைந்து வருகின்ற நிலையில், வட்டிவீதங்கள் கடந்த ஏப்ரல் மாதமே குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் அப்போது வட்டிவீதம் குறைக்கப்படாமல் அவ்வாறே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை குறைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
நாட்டின் 90% பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். டெங்கு நோய்க்குள்ளாவோரில் 25 வீதமானோர் பாடசாலை சிறுவர்கள் என சுகாதார நிபுணர் திஸ்னக தசநாயக்க சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக பாடசாலைகளை அண்மித்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாக அவர் வலியுறுத்தினார்., எதிர்வரும் திங்கட்கிழமை (29) ஆரம்பமாகவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக, பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது., இதனிடையே, நாடளாவிய ரீதியில் 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. அறநெறி பாடசாலைகள் மற்றும் சமய ஸ்தலங்களை அண்மித்த பகுதிகளில் இன்றைய தினம் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்தார்.
எம்.எஸ்.எம். ஹனீபா அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார். சனிக்கிழமை (27) மாலை பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பிகொண்டிருந்த மாணவியிடமே குறித்த நபர், பாலியல் சேஷ்டை புரிய முயன்றுள்ளார். தாக்குதலுக்குள்ளான மாணவி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவியின் பெற்றோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். . இதேவேளை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் பெண் மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு, சில மாணவிகள் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளதாக…
அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த 7 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த மாதம் எரிபொருள் விலைத் திருத்தத்தின் போது 14 லீற்றராக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் எரிபொருள் ஒதுக்கீட்டு திருத்தமும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
கேகாலை, அரநாயக்கவில் அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட நீர் குழாய்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பில் 06 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நீர்த்திட்டம் திறந்து வைக்கப்பட்டதுடன் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த நீர் குழாய் தீப்பிடித்து எரிந்திருந்தது. இந்த தீ விபத்து நாசகார செயல் என தெரிவிக்கப்பட்டதையடுத்து அரநாயக்க பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்படி, நீர் குழாயில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் 06 பாடசாலை மாணவர்களிடம் அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததாக கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த 06 பாடசாலை மாணவர்களும் அப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வருவதாகவும், இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. விசாரணைக்கு பின், குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வகுருவெல பிரதேசத்தில் வயல்வெளியில் இருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தல பிரதேசத்தில் வசிக்கும் 31 மற்றும் 32 வயதுடைய இருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த இருவரும் மழை காரணமாக அருகில் உள்ள மரத்திற்கு அடியில் சென்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்ஆர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.