# தேவையானோர் பயணடைய பகிர்ந்து கொள்ளுங்கள் கிழக்கு மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட கல்விக் கல்லூரி நியமனம் பெறவுள்ள ஆசிரிய பயிலுனர்கள் தங்கள் தகவல்களை மிக அவசரமாக கீழுள்ள கூகுல் படிவத்தில் பூரணப்படுத்துமாறு கேட்டும் கொள்ளப்படுகின்றீர்கள். விசேடமாக கிழக்கு மாகாணத்தை வசிப்பிடமாக கொண்டு வெளிமாகாணங்களில் நியமனம் வழங்கப்படுவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களை கிழக்கு மாகாணத்திலேயே ஆசிரியர்களாக நியமிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தகவல் திரட்டப்படுகின்றது. • இலங்கை ஆசிரியர் சங்கம் கல்முனை கிளை https://docs.google.com/forms/d/e/1FAIpQLSda9pnAOCn19x3FC4QZhs_4uEVot8M87lbiNhcZ8z-F3ylPww/viewform?usp=sf_link
Author: admin
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. கொள்கை அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் வசதியுடன் தொடர்புடையது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை குறித்து கவலையடைவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa தெரிவித்துள்ளார்.
நிர்மாணத்துறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை குறைப்பு தொடர்பில் நாளை (30) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிர்மாணத்துறையின் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அது தொடர்பான பல வாழ்வாதாரங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளது. பொருட்களின் விலை திருத்தம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தக மற்றும் பொருளாதார முதலீட்டுக் கொள்கை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையிலான நெருக்கடி நிலை மேலும் மோசமடைந்துள்ளது. கடந்த காலங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல், ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானித்தமையினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பல தடவைகள் தலைவருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர் இது தொடர்பில் பொருட்படுத்தவில்லை என அதன் உறுப்பினர்கள் தெரிவித்தனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பல தடவைகள் தெரிவித்ததாக தலைவர் பல்வேறு வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட போதிலும், ஏனைய உறுப்பினர்களிடமிருந்து எவ்வித தொடர்புகளும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
லங்கன் பிரீமியர் லீக் அறிமுக வீரர் ஏலம் ஜூன் 14ம் திகதி அன்று நடைபெற உள்ளது. இந்த ஏலம் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் முதன்மையான உள்நாட்டு T20 போட்டியில் முதன்முறையாக வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது, இதற்காக ஐந்து அணிகளுக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது. அதன்படி, ஒரு அணிக்கான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலத்தில் 500,000 அமெரிக்க டாலர்கள் தொகைக்கு உரிமை உண்டு. சிலோன் பிரிமியர் லீக் தொடரின் 4வது பதிப்பு இவ்வருடம் நடைபெறவுள்ளதாகவும், இந்த போட்டிகள் 2023 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் (IDH வைத்தியசாலை) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இதன்படி, இந்த பரீட்சைக்கு தோற்றும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் பரீட்சை எழுதுவதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் தினேஷ் கொக்கலகே தெரிவித்துள்ளார். IDH வைத்தியசாலையில் தற்போது 96 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தீப்பிடித்த ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’கப்பலில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணெய் கசிவு குறித்து மீனவர்கள் தேவையான அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தகவல் அளித்துள்ளதாகவும், கசிவு மேலும் தீவிரமடைந்தால், அது பெரிய கடல் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடும் என்றும் மீனவர்கள் கூறுகின்றனர். கப்பல் அழிக்கப்பட்டபோது, அதில் ஏறக்குறைய 1,500 இரசாயன கொள்கலன்கள் மற்றும் ஒரு மெட்ரிக் தொன் எரிபொருள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் அழிவு இலங்கையின் கடல் சுற்றுச்சூழலுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய நிலையில், நட்டஈடு கோரி தொடரப்பட்ட வழக்கு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் இந்த வருட இறுதிக்குள் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று பல்கலைக்கழகத்திற்கான கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட அவர், இவ்வருடம் உயர்தர விஞ்ஞானப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் முதன்முறையாக 50 புதிய மருத்துவ மாணவர்களை பீடத்திற்கு இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 200 மில்லியன் ரூபா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆய்வகங்கள் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்புகளில் நடைமுறை பயிற்சிகளை அபிவிருத்தி செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ பீடத்தின் அடிப்படைத் திட்டங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் பதுளை மாகாண வைத்தியசாலை மருத்துவ மாணவர்களின்…
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையை தொடர்ந்து அதற்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் உரிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை ஆராய்ந்து பாரக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவிசாவளை தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவும் அந்நிய செலாவணியை (சர்வதேச நாணய கையிருப்பு) சீராக பேணுவதற்காகவும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. விவசாயம், கடற்றொழில் மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தற்போது சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொருளாதாரம் முன்னேற்றப்பாதையை நோக்கி நகர்வதால் அந்நிய செலாவணி கையிருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும் சில இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அவதானம் செலுத்தப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிம்பலாபிட்டிய…
மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் கருத்தை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இதுவரை இலங்கைக்கு வரவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதேநேரம் அவரைக் கைது செய்ய இன்டர்போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார் ஜெரோம் பெர்னாண்டோவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இன்டர்போலின் (சர்வதேச பொலிஸ்) ஆதரவைக் கோருவது தொடர்பில் இதுவரை சட்ட ஆலோசனைகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சம்பந்தப்பட்ட போதகருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.