ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (23) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார். சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி, சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். மே மாதம் 24 முதல் 27 வரை ஜனாதிபதியின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் (Fumio Kishida) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய அணுகுமுறையின் ஊடாக வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெறவுள்ளது. அத்துடன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொசிமாசா ஹயாசி (Yoshimasa Hayashi) நிதியமைச்சர் சுனிவ் சுசுகி (Shunichi Suzuki) மற்றும் டிஜிடல் மயமாக்கல் தொடர்பான அமைச்சர் டரோ கொனோ (Taro Kono) ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து…
Author: admin
பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல் எனும் தலைப்பில் மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரால் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். நாட்டில் அண்மை காலமாக சிறுவர் கடத்தல் அதிகரித்துள்ளது. எனவே, பாடசாலை மாணவர்களை அவதானமாக செயற்படுமாறு அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை, திங்கட்கிழமை (22) பொலிஸாரினால் விநியோகிக்கப்பட்டுள்ளது. பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில் நிற்காமல் வீட்டுக்கு உடனடியாக செல்ல பணிப்புரை வழங்கல், இனம் தெரியாதோர் உண்பதற்கு ஏதாவது கொடுத்தால் வாங்க வேண்டாம் எனவும். இனம் தெரியாதோர் வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளுக்கு விடுகின்றோம் என்றால் வாகனங்களில் ஏற வேண்டாம் எனவும் மாணவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் இது தொடர்பாக பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புக்கு அல்லது 065- 2224356, 065 2224422 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, உள்ளூர் பெரியவர்களுக்கு 200 ரூபாவும், சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணமாக 30 ரூபாவும், வசூலிக்கப்படுகிறது. முன்பு பெரியவர்களுக்கு 100 ரூபாவும், சிறுவர்களுக்கு 20 ரூபாவும் கட்டணம் விதிக்கப்பட்டது. தாவரவியல் பூங்காவிற்கு வெளிநாட்டு பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 3,000 ரூபாவாகவும் வெளிநாட்டு சிறுவர்களுக்கு 1,500 ரூபாவாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்பு வெளிநாட்டு பெரியவர்களுக்கு 2,000 ரூபாவும், சிறுவர்களுக்கு 1,000 ரூபாவும் வசூலிக்கப்பட்டது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
தற்போது 10,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூடையின் விலை அடுத்த மாதத்திற்குள் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. யூரியா உரம் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், விலை குறையும் வரை விவசாயிகள் தேவையான யூரியா உரத்தை தாமதமின்றி பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இன்ற (22) முதல் வழங்கப்படும் உர மானியச் சீட்டுக்கள் மூலம் பண்டி உரத்தை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு, விவசாயிகளிடம் பாடத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சைனோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் மூலம் இயங்கி வரும் 150 எரிபொருள் நிலையங்களையும், 50 புதிய எரிபொருள் நிலையங்களையும் இயக்க 20 ஆண்டுகளுக்கு சைனோபெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அத்துடன் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ஏதேனும் வைரஸ் நோய் பரவுகின்றதா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பரிசோதகர்களுக்கு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதனையடுத்து இன்று வைத்தியசாலைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அங்கு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளின் விரிவுரையாளர்கள் அனைவரும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் நாளை (23ம் திகதி) ஈடுபடவுள்ளனர். நிறைவேற்று தர சேவையான இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாடுகளை நீக்கி அரச ரீதியிலான சேவைகளுக்கு மாத்திரம் பொருந்தக்கூடிய தடங்கலற்ற பதவி உயர்வு முறையை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பித்தல். ஆசிரியர் சேவையின் சம்பள அதிகரிப்பு மூலம் ஏற்பட்ட சம்பள முரண்பாடுகளை நீக்குமாறும் அதுவரை ஆசிரியர் கல்வியியலார் சேவையினருக்கு முப்பதாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழகத்தை விரைவில் ஆரம்பித்தல், சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்தல், கல்லூரிகளில் இருக்க வேண்டிய கல்வி சுதந்திரம் மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் 3/2023 என்ற சுற்றறிக்கையை ரத்து செய்தல் முதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இரண்டு வாரங்களுக்குள் இந்த கோரிக்கைகளுக்கு அமைச்சு…
கொழும்பு, ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது துணைவேந்தர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சந்திப்புக்களின் போது, பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், மற்றும் திருட்டு சம்பவங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஜூன் 03 ஆம் திகதி சில்லறை விற்பனைக்கு மது விற்பனை செய்வதற்கான அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், ராஜ்ய பொசன் பண்டிகையை முன்னிட்டு, மே மாதம் 31 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை, அநுராதபுரம் பூஜா நகரை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள பொசன் வாரத்தில், அநுராதபுரத்தில் உள்ள அனைத்து கலால் உரிமம் பெற்ற இடங்கள் அல்லது மதுபான கூடங்களை மூட கலால் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.