ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையுடன் இணைந்து மாலியில் பணியாற்றிய நான்கு இலங்கை அமைதி காக்கும் படையினர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றின் காரணமாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மாலியின் கிடால் பகுதியில் உள்ள அவர்களது முகாமில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் மற்றுமொரு வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்கி கவச வாகனத்தில் பயணித்த போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Author: admin
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்துமாறு கோரி இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்க தலைமையகத்திற்கு முன்பாக இன்று (23) பிற்பகல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அங்கிருந்து மாணவர்கள் கண்டி நகரம் வரை முன்னெடுக்க தீர்மானித்திருந்த போது பேரணியை கலைக்க பேராதனை வைத்தியசாலை அருகில் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டு பேரணியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார். இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச கட்டண திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பதில் ஜூன் 1ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17ஆவது பிரிவின்படி, கட்டண திருத்தம் தொடர்பில், கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மற்றொரு ஆசிரியர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை பகுதியில் நடைபெறும் மாலை வகுப்பு ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரால் கடந்த ஜனவரி மாதம் முதல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் 6 சிறுமிகளின் பெற்றோர் இது தொடர்பில் பொலன்னறுவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை, தமது பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய சில பெற்றோர்கள் அஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை சிரமமின்றி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் மக்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகளை சிரமமின்றி நிறைவேற்றுவதற்கு தேவையான சூழலை தயாரிப்பதற்கு ஜனாதிபதி தொடர்ந்து ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்ப இந்த வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 50 பிரதேச செயலக அலுவலகங்களில் கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைவாக மூன்று நாட்களில் தமது கடவுச்சீட்டை வீட்டிற்கு கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக அமைச்சரவை குழுவொன்றையும் நியமித்துள்ளதாகவும் அவர்…
இலங்கையில் உயரம் குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டில் 5 முதல் 10 வயது வரையிலான சிறார்கள் மத்தியில் உயரம் குறைந்தவர்கள் எண்ணிக்கை 21 வீதமாக காணப்பட்டது. சிறுவர்கள் மத்தியில் மந்த போசனை எனினும், கடந்த 2022ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 26 வீதமாக உயர்வடைந்துள்ளது. மந்த போசனைக்கு உள்ளான சிறுவர் சிறுமியரே இவ்வாறு உயரம் குறைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயரம் குறைவது பொதுவாக போசாக்கின்மை பிரச்சினைகளினால் ஏற்படுவது எனவும், இதனால் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படும் எனவும் உலக உணவுத் திட்டத்தின் இணைப்புச் செயலாளர் டொக்டர் கலன பீரிஸ் தெரிவித்துள்ளார். பிள்ளையொன்றின் வளர்ச்சியில் முதல் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியமானது எனவும், அதன் அடிப்படையில் அடுத்த 7000 நாட்களில் கிரமமான வளர்ச்சி இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் நிலவி…
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தரித்த இராணுவ வீரர்களை களமிறக்குவதற்கான கட்டளையை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என சபா நாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து வரும் வரை பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று காலை நாட்டில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு புறப்பட்டார். ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ள நிலையில், அரச தலைவர் வரும் வரை பதில் அமைச்சராக பிரேமித பண்டார தென்னகோன் செயற்படுவார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து வரும் வரை பதில் நிதியமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று காலை நாட்டில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு புறப்பட்டார். ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ள நிலையில், அரச தலைவர் வரும் வரை பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய செயற்படுவார்.
இதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். 10-31-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அனுமதி அளித்தது. இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.