இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு வலியுறுத்துகின்றார். தற்போது காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய பல நோய்கள் பரவி வருவதால், 02 நாட்களுக்குப் பின்னரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் உயிருக்கு தாமதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சில நோயாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக வைத்தியரைப் பார்க்காமல் தமது சொந்த அல்லது தமது குடும்ப உறுப்பினர்களின் கருத்திற்கு அமைய இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதைப் புறக்கணிப்பதாக சுட்டிக்காட்டும் வைத்தியர், மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றார்.
Author: admin
சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட் அலி சப்ரி எம்.பி., அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார் நேற்றைய தினம் சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டில் இருந்து தங்கம் மற்றும் பெருந்தொகையான மொபைல் போன்களை எடுத்து வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் அவரிடம் இருந்து 7 கோடியே 40 லட்சத்து 96 ஆயிரம் ரூபா பெறுமதியான மூன்றரைக் கிலோ தங்கம் மற்றும் 42 லட்சம் ரூபா பெறுமதியான மொபைல் 91 போன்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து அவருக்கு 7.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு, அபராதத் தொகை செலுத்தப்பட்டவுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் பல வகையான மரக்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக பொருளாதார மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கத்தரிக்காய், கரட், முள்ளங்கி, தக்காளி ஆகியவற்றின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மரக்கறிகளின் மொத்த விலையில் சிறிது குறைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சில்லரை விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர் மழை குறைந்துள்ளதால் சந்தைக்கான மரக்கறிகள் மீண்டும் அறுவடை செய்யப்பட்டுள்ளதால் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மைய அதிகாரிகள் கூறுகின்றனர். அனைத்து வகை மரக்கறி விதைகளும் விலை கட்டுப்பாட்டின்றி நாடு முழுவதும் விநியோகிக்கப்படுவதால், மலையக மரக்கறிகளின் விலை படிப்படியாக அதிகரித்து வருவதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
பல்வேறு பகுதிகளில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் உண்மை இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். நாட்டில் எங்கும் இவ்வாறான சிறுவர் கடத்தல் அல்லது காணாமல் போதல் இடம்பெறவில்லை என இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். “குறிப்பாக இத்தினங்களில் சமூக வலைத்தளங்களில் நாடளாவிய ரீதியில் சிறுவர் கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதாக பரவி வருகின்றது. மேலும், நாட்டின் சில பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக மன்னார், தலை மன்னார், திருகோணமலை, கிளிநொச்சி என பல்வேறு முறைப்பாடுகள் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக கிடைத்துள்ளன. ஆனால் இது தொடர்பான விசாரணைகளில் இதுவரை சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை, மேலும் விசாரணையின் போது சில சந்தேகத்திற்குரிய விடயங்கள் தெரியவந்துள்ளன. உண்மையில் வேன்களில் வந்து குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து எங்கும் பதிவாகவில்லை. ஆனால் சில இடங்களில் பதற்றமான…
சுமார் 3.5 கிலோ கிராம் தங்கம் (ரூ. 7.4 கோடி) பெறுமதியான தங்கம் மட்டுமன்றி 91 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளும் (பெறுமதி ரூ. 42 இலட்சம்) சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயற்சித்துள்ளதாக சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது இதன் காரணமாக இன்று நண்பகல் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த தங்கத்தையும் கையடக்க தொலைபேசிகளையும் இங்கு காணலாம்.
பண்டாரவளை பிரதேசத்தில் இரு பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் 05 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 5 பாடசாலை மாணவர்களும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை 9 மற்றும் 12 க்கு இடையில் பண்டாரவளை பொலிஸில் ஆஜராகுமாறு பண்டாரவளை பதில் நீதவான் கெனத் டி சில்வா உத்தரவிட்டார். இரு மாணவர்களை கொடூரமாக தாக்கி கூரிய ஆயுதத்தால் காயப்படுத்த முயன்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
இரண்டு கடவுச்சீட்டுக்களுடன் இலங்கைக்கு வந்த சீன பிரஜையை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு விடுத்துள்ளார். இரண்டு கடவுச்சீட்டுகளுடன் இலங்கை வந்த குறித்த சீன பிரஜை கட்டுநாயக்க விமான தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச பொசன் விழாவிற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் அனுராதபுரம் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார். அதற்காக அரசாங்கம் 31 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவின் வினவலின் போது தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், அரச பொசன் விழாவுக்கு அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்காதது தொடர்பில் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பீடாதிபதி வலஹங்குணவெவே தம்மரதன தேரர் அண்மையில் கண்டனம் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை – 2022 ஆம் ஆண்டுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றார். தற்போது அனைத்து 63 பாடங்களுக்கும் விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடிவடைந்துள்ளதாகவும், பன்னிரண்டு பாடங்களின் விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணியை முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும், க.பொ.த (சா/த) பரீட்சையை திட்டமிட்டபடி ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.