Author: admin

இலங்கையில் நேற்று 13 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு, இலங்கையில் சில மாதங்களுக்குப் பிறகு, 10 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன், இலங்கையில் பதிவான மொத்த கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 672 207 ஆக அதிகரித்துள்ளது.

Read More

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையை விட்டு வெளியேறிய சிறுவர்கள் தொடர்பான கணக்கெடுப்பை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான பணத்தை உலக வங்கியும் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், நெருக்கடி நிலைமை காரணமாக ஆரம்பப் பிரிவில் ஒன்பதாயிரத்து இருநூற்று அறுபத்தி ஒன்பது குழந்தைகள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், மத்திய வங்கி அறிக்கை, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் மேலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர், இதனால் மாற்று மதிப்பீட்டு முறைகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக அல்லது குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக, கல்விப் பெறுபேறுகளில் ஏற்றத்தாழ்வுகள் விரிவடையும் அபாயத்தைக் குறிக்கிறது. பாடத்திட்டம், தேசிய அளவிலான தேர்வுகள், தள்ளிப்போடுதல் குறுகிய காலத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்றும் அது குறிப்பிடுகிறது.

Read More

இந்த ஆண்டில், 20 இலட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை சுமார் 530 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த வருமானம் 482.3 மில்லியனாக இருந்தது. இந்தநிலையில் 2023ஆம் ஆண்டின் இறுதியில் சுற்றுலாத்துறையில், மொத்தம் 3 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஐ.சி.சி. தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம் கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் ஐ.சி.சி.யின் ஆடவர்க்கான ஒருநாள் அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கராச்சியில் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகு, ஆண்கள் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் புதிய நம்பர்-1 அணியாக உள்ளது. இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள தொடரில் 4-0 என முன்னிலை வகிக்கும் பாகிஸ்தான் 113 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த தரவரிசையில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா முறையே 2, 3 ஆம் இடங்களை பிடித்துள்ளன. தொடரின் தொடக்கத்திற்கு முன்னர் ஒருநாள் தரவரிசையில் 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுப் பெருவிழா நேற்று மாலை (5) மிக விமர்சையாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.பைசால் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும், இக் கல்லூரியின் பழைய மாணவருமான கலாநிதி எம்.சி அலிவூட்டோ கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக சம்மாந்துறை உதவிக் கல்விப் பணிப்பாளரும் இப் பாடசாலையின் பழைய மாணவரும்மான யூ.எல்.ரியால்,ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.றஹிம்.,ஓய்வு பெற்ற ஆசிரியர் யூ.எல்.எம்.அலி. ஆசிரியர் ஏ.எல்.பஸ்மின். பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ அஸ்தர்,எம்.ஏ சலாம்,உதவி அதிபர் இ.ரினோஸ், மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு தலைவர் எஸ்.எல் ஹமீட், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி உட்பட பலரும் கலந்து கொண்டனர். பாடசாலையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேலும் இவ்வருடம் முழுவதுமாக இரத்த தான…

Read More

நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற 1083 சமுர்த்தி வங்கிகளிலும் “ பாரம்பரியத்தை பேணுவோம் சேமிப்புக்கு வழி கோலுவோம் “ எனும் தொனிப்பொருளுடன் கூடிய புத்தாண்டு விளையாட்டு விழா நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப 3.30 மணியளவில் கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் தலைமையில் கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வளாகத்தில் இந்நிகழ்வு மிகவும் கோளாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கல்முனை பிரதேச செயலாளர் J.லியாக்கத் அலி கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் விசேட அதீதிகளாக A.R.M. அஸ்மி – MOH – கல்முனை தெற்கு, M.H.M அனீசார் – அதிபர் றோயல் வித்தியாலயம் – கல்முனைக்குடி, கௌரவ அதீதிகளாக A.R.M. சாலிஹ் – தலைமைப்பீட முகாமையாளர் கல்முனை 1, A.M.S.நயீமா கருத்திட்ட முகாமையாளர் -கல்முனை முகாமைத்துவ பணிப்பாளர் – கல்முனை, S.பரீரா, A.L.M.நஜீப் சமுர்த்தி வங்கி முகாமையாளர் -…

Read More

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதற்குப் பிறகு, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். அவர் 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார். ராணியின் மறைவுக்கு பின்னர் மன்னராக சார்லஸ் அரியனை ஏறியபோதும், அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமலேயே இருந்து வந்தது. இந்த சூழலில் மே 6 ஆம் திகதி மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. கடைசியாக கடந்த 1953-ம் ஆண்டு ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு, 70 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த பாரம்பரிய விழா நடக்கிறது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று (06) இந்த விழா…

Read More

சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் டி.கே.ரஞ்சித் கூறியதாவது; மில் உரிமையாளர்கள், அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி, சம்பா விற்பனை செய்வதால், அதன் விலை, 25 முதல், 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

Read More

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேவஸ்தானத்திற்கு கார் பார்க்கிங் உள்ளது. இங்கு நேற்று இரவு முதல், ஜார்க்கண்ட் மாநிலம் பதிவு எண் கொண்ட ஆடி கார் ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து கார் பார்க்கிங்கில் மத்திய புலனாய் பிரிவு, கியூ பிரிவு பொலிஸார், எஸ்.பி. தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவை சேர்ந்த பொலிஸார் நேற்று காலை முதல் கார் பார்க்கில் மர்மமான முறையில் நிற்கும் ஆடி காரை எடுக்க யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் வெகு நேரமாகியும் காரைத் தேடி யாரும் வராததால் விரத்தி அடைந்த பொலிசார் மீட்பு வாகனத்தை வரவழைத்து ஆடி காரை அலேக்காக தூக்கி மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் அங்கு காரை உடைத்து பார்த்தபோது கார் முழுவதும் இலங்கைக்கு கடத்துவதற்காக பொதி செய்யப்பட்டு சுமார் 158 கிலோ கஞ்சாகள்…

Read More

இலங்கையில் சிறுவர்கள் உட்பட சுமார் 1 இலட்சம் பேர் தற்போது ஹெரோயின் போதை பொருளுக்குக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. ஐஸ் மற்றும் கஞ்சா பாவனைக்கு 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் அடிமையாகியுள்ளனர் என்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையால் இலங்கையில் வருடாந்தம் அனைத்து வயதுகளையும் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Read More