Author: admin

மொரட்டுவை-லுனாவ பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 4ஆவது மாடியில் இருந்து கீழே தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கடந்த மே 18 ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் டின் மீன்களுக்கு அறவிடப்பட்டுவந்த 100 ரூபா விசேட பண்ட வரி 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read More

பொதுத் தேர்தலை விரைவில் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தவறாக நாட்டை நிர்வகித்த ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஸ போராட்டத்தின் விளைவாக பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்ட போது, துரதிர்ஷ்டவசமாக ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், பொதுத் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் எனவும் இதன்மூலம் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை பின்பற்றி வருகின்றார் என தாம் கருதுவதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Read More

வரவு -செலவு திட்டத்தை தோற்கடிக்க வலியுறுத்தித் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது. துறைமுகம், சுகாதாரம், வர்த்தக வலயங்கள், எரிபொருள் கூட்டுத்தாபனம், நீர்ப்பாசனம், விருந்தகம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

Read More

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பஸ் ஒன்று கிளிநொச்சி இரணைமடு பகுதியில் இன்று காலை 4.45 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பஸ்ஸில் பயணித்த 22 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு அந்த நாட்டு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது மியன்மாரில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து 100-க்கும் மேற்பட்டோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்கு மரண தண்டனையை ஒரு ஆயுதமாக மியன்மார் இராணுவம் பயன்படுத்துவதாக ஐ.நா. குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு அந்த நாட்டு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. வங்கியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம்சாட்டி அவர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயமான விசாரணையின் அடிப்படை கோட்பாடுகளை மீறியும், சுதந்திரம் மற்றும் பாரபட்சமின்மைக்கான முக்கிய நீதித்துறை உத்தரவாதங்களுக்கு முரணான வகையிலும் இராணுவம் இரகசிய கோர்ட்டுகள் நடவடிக்கைகளை தொடர்கிறது. மாணவர்களுக்கு மரண தண்டனை…

Read More

(அப்துல்லாஹ்) கல்முனை சாஹிபு வீதியில் அமைந்திருக்கும் ஹுஸைனியா ஹிட்ஸ் பாலர் பாடசாலையின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கழிவுப் பொருட்களை கொண்டு பாலர்காலும் பெற்றோர்களாலும் உருவாக்கப்பட்ட ஆக்கங்களின் கண்காட்சி இன்று பாடசாலை அதிபர் ஏ.எல்.நஸ்ரின் தலைமையில் சித்திரப் பாட ஆசிரியரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.எம்.றம்ஸானின் வழிகாட்டலில் நடைபெற்றது இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் நஸ்மியா சனூஸ் பிரதம அதிதியாகவும் முன்பள்ளி பாலர் பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றஸின் கௌரவ அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர் சித்தி ரஹ்மா, குடும்ப நல உத்தியோகத்தர்களான த.கயல்விழி , திருமதி எஸ்.கணேசமூர்த்தி, தொழிலதிபர் ஏ.ஏ.பிர்தௌஸ் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்களும் பிள்ளைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப் பாடசாலையில் கல்வி கற்கும் 75 மாணவர்களுக்கும் இலவசமாக உணவு சமூர்த்தி மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது…

Read More

சுற்றுலா விசாவில் இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தவறிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்றத்தில் இன்று (03) தெரிவித்தார். மேலும், டொலரை உண்டியல் மூலம் பெற்றுக்கொண்டு உரியவர்களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Read More

ஜப்பானைச் சேர்ந்த இஸ்ஸெய் சகாவா என்பவர், 1981ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வசித்து படித்து வந்துள்ளார். அப்போது அவருடன் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு அழைத்து வந்து, அந்த மாணவி கழுத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தொடர்ந்து, அந்த பெண் உயிரிழந்த பின்னரும் அவரை வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, பல நாள்களாக அந்த பெண்ணின் உடலை வைத்து, பல்வேறு பாகங்களை ஒவ்வொரு நாளாக நர மாமிசமாக சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, மிஞ்சிய உடல் பாகங்களை மட்டும் அருகில் இருக்கும் பார்க்கில் புதைத்துள்ளார். சில நாட்களில் பொலிஸார் அவரை கைது செய்தனர். பொலிஸாரிடம் சகாவா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அவரை விசாரணை செய்ததில் தகுதியற்ற மனநலம் குன்றிய நபராக பிரான்ஸ் மருத்துவ வல்லுநர்கள் சான்றிதழ் அளித்தனர். தொடர்ந்து, அவர் 1994ஆம் ஆண்டு ஜப்பான் திரும்பினார். இருப்பினும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பம் ஜப்பானில், சகாவா மீது…

Read More