நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்ட ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நீதிமன்ற வைத்திய பிரிவின் விசேட நீதிமன்ற வைத்தியர் ரொஹான் ருவன்புர மற்றும் ருஹூனு பல்கலைக்கழகத்தின் நீதிமன்ற வைத்திய பிரிவின் பேராசிரியர் விசேட நீதிமன்ற வைத்தியர் யு.சி.ஜி. பெரேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர். 5 மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சட்ட வைத்திய சபையின் பரிந்துரையின் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய வழங்கிய உத்தரவின் பிரகாரம் அண்மையில் தோண்டி எடுக்கப்பட்டது.
Author: admin
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த, இவ்வாறான சுமார் 11 இலட்சம் கனரக போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்போது பாவனையில் உள்ளதாக தெரிவித்தார். தற்சமயம் அனுமதிப்பத்திரத்தை கொண்டு அதிக வயதான சாரதிகள் அந்த அனுமதிப்பத்திரத்துடன் வாகனங்களை செலுத்துவதே சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத் தேவையில்லாத அனைத்து வகையான அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த பருவத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அட்டைகள் இல்லாத காரணத்தினால், தற்போது சுமார் 08 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. 6 மாதங்களின் பின்னர் இடம்பெறும் பரீட்சையை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மாணவர்கள் எதிர்கொள்ளவுள்ளனர். கொவிட் 19 பரவல், பொருளதார நெருக்கடிக்கு மத்தியில் மாணவர்கள் இதற்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்தனர். எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளனர். 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 3568 பரீட்சை மத்திய நிலையங்களுக்குமான வினாத்தாள்கள் விநியோகிக்கும் நடவடிக்கை, பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சிறைக் கைதிகளுக்காக பரீட்சை மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதேபோன்று, மஹரகம…
பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரிய, எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, நிதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக புத்த சாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பௌத்த மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை புத்தர் கல்வி அமைச்சின் நேரடி தலையீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த, மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடர் கோரிக்கையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய முனையத்தில் இருந்து தினமும் 30,000 முதல் 40,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என்றார்.
நாளை(29) ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்காக சிசுசெரிய பேருந்து சேவையை முன்னெடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. சிசுசெரிய சேவையில் ஈடுபடும் சகல பேருந்து பணியாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சாதாரண தரப் பரீட்சை முடியும் வரையில், இந்த பேருந்து சேவையை தொடருமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மிலான் மிரென்டா தெரிவித்துள்ளார். இதேவேளை, நாளை (29) ஆரம்பமாகவுள்ள பரீட்சைக்காக தடையின்றி பஸ்கள் இயங்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை சீருடையில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன பஸ் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
வட மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. குருணாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் இடையே தோல்கழலை நோய் பரவி வருகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் வடமேற்கு மாகாண பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 27 ஆயிரம் கோடி ரூபாய் வரியை அறவிட தவறியுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது. இதேவேளை, முறையாக வரியை செலுத்தாத பாரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் 100 பேரின், சரியான தகவல்கள் இறைவரித் திணைக்களத்திடம் இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரியளவிலான பரிவர்த்தனைகள் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ள உரிய முறைகள் எதுவும் இறைவரித் திணைக்களத்திடம் இல்லை என்பதுத் தொடர்பில், இந்த மேற்பார்வைக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அறவிடுவதற்கு தவறவிடப்பட்டுள்ள இந்தப் பணத்தை மீள பெற்றுக்கொள்வதற்கு பொறிமுறை ஒன்றைத் தயாரிக்கவும், புதிய இறைவரிச் சட்டங்களை தயாரிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை இந்த மேற்பார்வைக்குழு வழங்கும் எனவும் அதன் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.