ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு பின்னர் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத 25,157 மாணவர்களுக்கு அதிபர்கள் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர்களில் 867 மாணவர்களின் மதிப்பெண் மட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பெறப்பட்ட மேன்முறையீடுகளில் 20334 சிங்கள ஊடகங்களையும், 4823 தமிழ் ஊடக விண்ணப்பதாரர்களிடமிருந்தும் பெறப்பட்டவை. அதன்படி, இந்த 146 மாணவர்களை தேர்வு செய்யும் போது, மாவட்ட கட்-ஆஃப் மதிப்பெண் வரம்புகளை கருத்தில் கொண்டு மீண்டும் திருத்தம் நடத்தப்பட்டது. புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற 146 மாணவர்களில் குறைந்த வருமானம் பெறும் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன், அவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த உண்மைகளை வெளிப்படுத்தினார்.
Author: admin
மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆகவே போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாகவும் விழிப்பாக செயற்படுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரியுள்ளனர். வெளிநாடு செல்வதாக இருந்தால் மட்டக்களப்பு பொது சந்தை கட்டிடத்திலுள்ள அரச வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை பொதுமக்கள் நாட வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை சுமுகமாக நடத்துவதற்கு கடுமையான திட்டங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளி தரப்பினர் பரீட்சை வளாகத்திற்குள் பிரவேசிக்க முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பரீட்சைக்குச் சம்பந்தமில்லாத எந்த ஆவணங்களையும் விநியோகிப்பது பிரதானமாக தடைசெய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களும் இந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து பரீட்சை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் முற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (வளிமண்டலவியல் திணைக்களம்)
சர்வதேச நாணய நிதியத்தின் நிதிச் சபையின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கேன்ஜி ஓகமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தர உள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை வரும் கேன்ஜி ஓகமுரா நாளையும் நாளை மறுதினமும் இலங்கையில் தங்கியிருப்பார். அவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் அண்மைய கால முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்த இருக்கும் சந்தர்ப்பங்கள் மற்றும் அதற்கான தடைகள்,தாமதங்களை குறைக்கு முறைகள் தொடர்பாக சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் எனவும் ஷெயான் சேமசிங்க மேலும் கூறியுள்ளார்.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளான இரண்டு பேர் உயிரிழந்தனர். திருகோணமலை கோமரன்கடவல பிரதேசத்தில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 64 வயதுடைய பக்மீகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, மதவாச்சி பூனேவ – ஹல்மில்லேவ பகுதியில், இன்று அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார். தமது காணிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரே இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
சிசு செரிய” பாடசாலை பஸ் சேவைக்கான செலவில் 70 வீதத்தையும், எஞ்சிய கட்டணத்தில் 30 வீதத்தை பெற்றோரிடமிருந்து அறவிடுவதற்கும் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சேவைக்கான செலவை அரசால் தாங்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அநுராதபுரம், கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மானிப்பாய் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் 29 வயதான ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – வெலிகண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் 33 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். கண்டி – கம்பளை, குருகேலே சந்தியில் பஸ் மோதியதில் 60 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்ஸை விட்டு இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, அவர் விபத்திற்குள்ளாகியுள்ளார். புத்தளம் – ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் வேன் மோதியதில் 68 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் – ஸ்வஸ்திபுர பகுதியில் வேன் விபத்திற்குள்ளானதில் 76 வயதான பெண் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும்…
16 வயதுக்குட்பட்ட சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (29) காலை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியக அதிகாரிகள் சந்தேகநபரான பெண்ணை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண் ஒருவர் உலகளாவிய ரீதியில் இயங்கும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் அங்கத்தவர் என்பதுடன் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் தேசிய ஊடகப் பணிப்பாளரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி சிறுமியின் குடும்பத்தினரை அச்சுறுத்திய அவர் பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் வௌியிட்டுள்ளதாகவும் அவரது தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைது செய்த பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியக அதிகாரிகள் அவரை புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். குறித்த சிறுமி தற்போது கல்விப்…
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு நேற்று (30) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். அத்துடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை அப்பகுதி மக்களால் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு விடுதி தொடர்பில் ஏற்கனவே பல…