சம்மாந்தறை நிந்தவூர் அட்டாளைச்சேனை ஒலுவில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு இன்று காலை வரை எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்தது. கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடிரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் விலைக்குறைப்பும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் விலைக்குறைப்பு எரிபொருள்களுக்கு ஏற்பட்ட போதிலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தவண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. தற்போது எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோல் 92 ஒக்ரெய்ன் லிட்டருக்கு ரூ.15 வால் குறைத்து ரூ.318 ஆகவும்பெற்றோல் 95 ஒக்ரெய்ன் 20 ரூபாவால் அதிகரித்து ரூ.385 ஆகவும் சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.340 ஆகவும் மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைத்து ரூ.245 ஆகவும் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. -பாறுக் ஷிஹான் –
Author: admin
லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 229 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு 114 ரூபாவாக உள்ளன. மேலும் ஒரு கிலோகிராம் சிகப்பு பருப்பின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு 314 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் 210 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரசியின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு 175 ரூபாவாகவும் உள்ளது.
#இலங்கையில் பதிவான சம்பவம் தனது 12 வயதில் தந்தையை கொலை செய்தவரை பழிதீர்ப்பதற்காக ஏழு வருடங்களாக காத்திருந்த சிறுவன் ஒருவன் ஏழு வருடங்களின் பின்னர் கொலைசெய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணைடைந்த சம்பவ மொன்று அம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அம்பாந்தோட்டை, சூச்சி கிராமத்தில் கடந்த 21 ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் 35 வயதான ஒரு பிள்ளையின் தந்தையொருவர் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். இவர் இரண்டு கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவரென பொலிஸார் தெரிவித்தனர். தனது மனைவி மற்றும் நான்கு வயது பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணம்செய்தபோது குடும்பஸ்தர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில், 19 வயதான இளைஞரொருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடந்த 29 ஆம் திகதி சரணடைந்துள்ளார். சூச்சி கிராமத்தில் குடும்பஸ்தரை தானே கொன்றதாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நீண்ட நேர…
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென முச்சக்கரவண்டி சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், டீசல் விலையில் திருத்தம் செய்யப்படாமையால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் தமது எரிபொருள் வகைகளின் விலைகளை மாற்றியமைத்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை மாற்றத்துக்கு அமைய புதிய விலைகள் நடைமுறைக்கு வரும் என அதன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் க்றிஸ் ரஞ்சன் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் உட்பட பல நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்…
மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று நள்ளிரவு (31) 12 மணி முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லிட்டருக்கு ரூ.15 வால் குறைக்கப்படும். லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபாயாகும். லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 இன் விலை 20 ரூபாய்களால் அதிகரிக்கப்படும். இதன்படி, இலங்கையின் 95 ஒக்டேன் யூரோ 4 லீற்றர் பெற்றோலின் புதிய விலை 385 ரூபாய்களாகும். லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் புதிய விலை 340 ரூபாய்களாகும். இந்தநிலையில், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 50 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 245 ரூபாயாகும். இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய்…
கண்டி தேசிய வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இருதய பரிசோதனை இயந்திரம் செயலிழந்துள்ளமையினால், சுமார் 8000 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் காணப்பட்ட இரண்டு இயந்திரங்களில் ஒன்று, கடந்த 6ம் திகதி முதல் செயலிழந்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிடுகின்றது. இதன் காரணமாக இருதய நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கும் சுமார் 8,000 நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இருதயத்தில் காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை வழங்கும் செயற்பாட்டை இந்த இயந்திரம் செய்கின்றது. அதற்காகப் பயன்படுத்தப்படும் 14 இதய வடிகுழாய் இயந்திரங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 11 வைத்தியசாலைகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன., அவற்றில் 2 கண்டி தேசிய வைத்தியசாலையில் உள்ளன. எனினும் 2006 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இயந்திரம் கடந்த 06 ஆம் திகதி முதல் முழுமையாக பழுதடைந்துள்ளது.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டில் புருனோ திவாகர கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(31) பிற்பகல் அவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் “SL Vlog” இன் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகின்றன.