Author: admin

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளனா். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தொிவித்துள்ளாா். இவற்றில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவாக பதிவாகியுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா். இது குறித்து மேலும் கருத்து தொிவித்த அவா், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் நடந்துள்ளன. குறிப்பாக 667 போ் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிாிழந்தனா். அத்துடன் மொத்தமாக 709 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,160 பாாிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் 3,201 சிறு விபத்துகள் நடந்துள்ளன. குறிப்பாக உயிாிந்தவா்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், மோட்டார் சைக்கிள் ஓட்டுனா்களே அதிகளவில் அடங்கியுள்ளனா். உயிாிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆவதுடன் 102 பேர் பயணிகள் ஆவா். அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளனா். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை மோட்டாா் சைக்கிள்களால்…

Read More

திக்வெல்ல – தெமடபிட்டிய – குமாரதுங்க மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (13) காலை 07.10 மணியளவில் காரில் வந்த சிலரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த நபர், மாத்தறை பொது வைத்தியசாலையில் hy

Read More

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் வாங்கிய முதல் விமானமான A330-200 எனும் விமானம் 23 ஆண்டுகள் சேவைக்கு பின் மீண்டும் பிரான்ஸுக்கு திருப்பி வழங்கப்படவுள்ளது. இந்த விமானத்தை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கியிருந்தது. ஏ300 – 200 பிரிவின் கீழ் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் வாங்கிய முதல் விமானம் இதுவாகும். இந்த விமானத்தில் 18 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 251 சாதாரண வகுப்பு இருக்கைகளும் உள்ளன. இந்த விமானத்தை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் லண்டன் ஹீத்ரோ, ஜேர்மனியின் பிராங்பேர்ட், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ போன்ற நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விமானம் 100,000 விமான மணிநேரத்தை நிறைவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். மேலும், புலிகளின் தாக்குதலின் போது, ​​இந்த விமானமும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 6 இலங்கை விமானங்கள்…

Read More

வரக்காப்பொல – துல்ஹிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதி எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியொன்றும் டிப்பர் வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் 40 வயதான தந்தை, 39 வயதான தாய் மற்றும் 13 வயதான மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை கருத்திற் கொண்டு இன்று(13) முதல் உடற்பயிற்சி புத்தகங்கள் மற்றும் காகித பொருட்கள் உட்பட அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையை 20% முதல் 25% வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வங்கி வட்டி குறைந்துள்ளமை காரணமாக இந்த பொருட்களின் விலை அடுத்த மாதத்தில் 35% முதல் 40% வரை குறையலாம் என சங்கத்தின் தலைவர் திரு.நிருக்ஷ குமார தெரிவித்தார்.

Read More

பொலிஸாரின் கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காலி, ஊரகஸ்மங்ஹந்திய பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை, பொலிஸாருடன் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

பொலன்னறுவையில் அமைந்துள்ள ரஜரட்டை சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையில் மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஜரட்டை சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையில் ஏராளமான நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நிலையில், நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இங்கு செயற்படும் இரத்த மாதிரிகளை தரம் பிரிக்கும் கட்டமைப்பில் முன்னர் ஒரே தடவையில் 100 பேரின் இரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடிந்த போதிலும், தற்போது 50 பேரின் இரத்த மாதிரிகள் மட்டுமே பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அரச வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படும் நோயாளிகள் இங்கு வரும் வெளிநோயாளிகளுக்கு போதுமான பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைக்கு திருப்பி அனுப்பப்படும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. அதேபோன்று உள்ளக நோயாளிகள் மாத்திரமன்றி வெளிநோயாளிகளுக்கும் போதுமான மருந்துகள் கிடைக்கப் பெறாத நிலையில் பெருந்தொகைப் பணம் செலவழித்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக…

Read More

மேல் மாகாணத்தில் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் பங்களிப்புடன் நாளை முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 2023 இல் இலங்கையில் 43,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Read More

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்காக அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் நேற்று பிற்பகல் கூடி ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்பதில்லை எனத் தீர்மானித்துள்ளனர். அதனை அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும் தெரிவித்துள்ளனர். இனிமேல் ஜனாதிபதி, அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் அழைப்பு விடுக்கும் கலந்துரையாடல்களில் பங்கேற்பதில்லை என்றும் கட்சி சார்ந்த கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் மட்டுமே கலந்து கொள்வதெனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி அல்லது அமைச்சர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் யாரை அழைப்பதாக இருந்தாலும் குறிப்பாக அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டங்களுக்கு கட்சி ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது கட்சி உறுப்பினர்களையும் தலைவர்களையும் அவ்வாறான கலந்துரையாடல்களுக்கு அழைப்பதாயின் அதுகுறித்து…

Read More

மக்களுக்கு வரிச்சலுகையை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்துரையாடி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வர்த்தகர்கள் தங்களுக்கும் இலாபத்தை வைத்து கொண்டு மக்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அது தொடர்பாக தற்போதுள்ள நடைமுறை பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நேற்று (11) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையப் புறப்படும் முனையத்தில் விமானப் பயணிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான சோ சிலோன் ஓய்வறை வசதி மற்றும் உணவகத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது: கேள்வி – இந்த நாட்டின் தற்போதைய முன்னேற்றம் எவ்வாறு உள்ளது? பதில் – ஒரு வருடத்திற்கு முன்பிருந்த நிலைமையும் 12 மாதங்கள் கடந்த பின்னரும் மக்கள் தற்போதைய நிலைமை குறித்து நேர்மறையாக சிந்திக்க முடிந்துள்ளது. அந்த…

Read More