இலங்கைப் பொலிசாரின் அலட்சியப் போக்கு காரணமாக , இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வந்த செல்வந்தர் ஒருவர் அநியாயமாக 14 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். இதனை இன்று வௌியான டெயிலி மிரர் பத்திரிகை செய்தியாக வௌியிட்டுள்ளது குறித்த முதலீட்டாளர் ஒரு பலஸ்தீனர் ஆகும். ஹிக்கடுவை பிரதேசத்தில் ஹோட்டல் மற்றும் ரெஸ்டோரண்ட் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் முதலீடு செய்வதற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார். இந்நிலையில் அவரது கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளது. அதுகுறித்து பொலிசில் முறைப்பாடு செய்வதற்காக சென்றவரை பொலிசார் பிடித்து உள்ளே தள்ளி பதினான்கு நாட்கள் விளக்கமறியலுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அவரது கடவுச்சீட்டு காணாமல் போனாலும் அவர் ஒரு பலஸ்தீனர் என்றும், இந்நாட்டில் முதலீடு செய்யும் நோக்குடன் வந்துள்ளவர் என்றும், செல்லுபடியான கடவுச்சீட்டு மூலமாகவே இலங்கைக்குள் அவர் உட்பிரவேசித்துள்ளார் என்றும் பலஸ்தீன தூதரகம் இலங்கையின் அதிகாரிகள் பலருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் பலனிருக்கவில்லை அதற்கு மேலதிகமாக பலஸ்தீன தூததரகம் உடனடியாக குறித்த நபரின் காணாமல்…
Author: admin
பிணை நிபந்தனைகளை மீறியமை தொடர்பில் எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் கல்வெவ சிறி தம்ம தேரருக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (05) அழைப்பாணை விடுத்துள்ளார். பிணை நிபந்தனையின் பிரகாரம் தனது பிரிவில் ஆஜராகாத சந்தேகநபருக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஆளுநரின் பணிப்புரைக்கமைய பிணையில் விடுவிக்கப்பட்ட சிறிதம்ம தேரர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவரது பிரிவில் ஆஜராக வேண்டும் என பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்திருந்த போதிலும் சந்தேகநபர் ஆஜராகவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு ட்ரோன் தொழிநுட்பத்தை பயன்படுத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தொழிற்பயிற்சி அதிகாரசபையில் ஒழுங்கு செய்யப்பட்ட ட்ரோன் பயிற்சி நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனை கூறியுள்ளார். நவீன ட்ரோன் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் நேரத்தை சேமிக்க முடியும் எனவும், விரயத்தை வரையறுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உலகின் பல நாடுகள் ட்ரொன் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வருவதாகவும், துரதிஸ்டவசமாக இலங்கையில் தற்பொழுது இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளுக்கு ட்ரோன் தொழிநுட்பத்தை வெற்றிகரகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா கணேசபுரம் பகுதியில், வர்த்தகரான பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்த சந்தேகநபர், இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை லொறியுடன் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, கணேசபுரம் பகுதியில் 648 எரிவாயு சிலிண்டர்களுடன் லொறியொன்றை திருடிய நபரொருவர் சந்தேகத்தின் பேரில், ஞாயிற்றுக்கிழமை (04) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வர்த்தகப் பெண் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த வர்த்தகப் பெண்ணின் மூத்த மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், எரிவாயு சிலிண்டர்களுடன் லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் சாரதி எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து கொண்டிருந்ததாகவும், வர்த்தகப் பெண்ணின் வீட்டில் லொறியை நிறுத்தியிருந்த போது, வீட்டுக்கு வந்த சந்தேக நபர் வீட்டின் கதவுகளை உடைத்து எரிவாயு சிலிண்டர்களை லொறியில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. . திருடப்பட்ட லொறி மற்றும் எரிவாயு சிலிண்டர்கள்…
ஆதார வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாகக் காணப்படும் அத்தியாவசிய மருந்துகளை உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு அவசியமான மருந்துகள் இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உலக வங்கி செயற்றிட்டத்தின் பணிப்பாளர், வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மருந்துகள் விரைவில் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல் வைத்திய நிலையங்களுக்கு அவசியமான மருந்துகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன் உட தியலும பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (05) பண்டாவரளை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்திய வேளை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மாலை கொஸ்லாந்த, தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு பிரவேசத்த குறித்த இளம் ஜோடி இரவில் தங்க முற்பட்டுள்ளனர். இதன்போது இளம் யுவதி காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். சம்பத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான காதலன் வழங்கிய வாக்குமூலம் முரண்பாடாக காணப்பட்டதால் பொலிஸாரால் அவர் கைது செய்யபடப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பதுளை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகத்திற்கு மிளகாய் தூள் வீசி தங்க ஆபரணங்களை கொள்ளையிடும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர்கள் ஐவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை – பன்விலஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுக்கும் குறைந்த ஐவரே இவ்வாறு கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளில் சென்று, வீதியில் செல்லும் பெண்களின் முகத்திற்கு மிளகாய் தூள் வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு செல்வதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கைதானவர்களிடம் இருந்து தங்க ஆபரணங்கள், தொலைபேசிகள், சிம் அட்டைகள், கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் , கைக்குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். சந்தேகநபர்களை களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனமானது 13 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக கடந்த மே மாதம் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனமானது இலங்கையின் பிரதிநிதியாகச் செயற்படுவதன் மூலம், கடந்த 2022 ஆம் ஆண்டில் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள கட்டுநாயக்கா, மத்தள, இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய 5 சர்வதேச விமான நிலையங்களின் செயல்பாட்டு வந்தது. இந்நிறுவனத்தின் வருடாந்த செயற்பாட்டு இலாபம் 13 பில்லியன் ரூபாவாகும். மேலும், இந்த ஆண்டு 55,03,198 பயணிகள் நம் நாட்டு விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர், இது கடந்த ஆண்டை விட 266 வீதமானம் வளர்ச்சி என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஒரு வருட காலப்பகுதியில் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனங்களின் மொத்த வருடாந்த…
உயர்தர ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஆறாயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய பாடப்பிரிவுகள் தொடர்பில் இந்த ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (04) தெரிவித்துள்ளார். சுமார் ஆயிரம் பேர் தேசிய பாடசாலைகளுக்கும் எஞ்சியவர்கள் மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்யப்படுவர். ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனியாக ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியும் எனவும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே போட்டிப் பரீட்சை நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க தலைமையில் நியமிக்கப்பட்ட குழு முதற்கட்ட இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டதுடன் அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பாடசாலைகளில் உள்ள சுமார் முப்பதாயிரம் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அபிவிருத்தி உதவியாளர்களாக பணிபுரியும் பட்டதாரிகளை பணியமர்த்துவதற்கு அமைச்சு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு…