இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் இடையில் சரக்கு கப்பல் சேவை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது. இலங்கையில் இயங்கும் நிறுவனம் ஒன்றுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு நிறுவனங்கள் கடல் வழியாக பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிகளை கோரியுள்ளன. இதனிடையே காரைக்கால் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவையை கடந்த மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய தரப்பில் மேலும் காலஅவகாசம் கோரியதால், பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சரக்கு கப்பல் சேவை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
Author: admin
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை, சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள். நாகஞ்சசோலைப் பகுதியில் புதையல் தோண்ட முற்படுவதாக முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (05) அதிகாலை அங்கு சென்ற அதிரடிப்படையினர், புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரையும் கைதுசெய்துள்ளதுடன், தோண்டுவதற்கு பயன்படுத்திய ஸ்கேனர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளார்கள். முள்ளியவளை, கணுக்கேணி, பூதன்வயல், நொச்சியாகம, ராஜாங்கனை, சாலிய அசோகபுர, அம்பலாந்தோட்டை மற்றும் தபுத்தேகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இதில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவப் பிரிவில் பணியாற்றும் வீரர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்றுப் பொருட்களையும் சிறப்பு அதிரடிப் படையினர் முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். முள்ளியவளை பொலிஸார், மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பணப்பரிவர்த்தனையில் கணிசமான அதிகரிப்பு, சுற்றுலாப்பயணிகளின் வருகையின் வருமானம் மற்றும் இறக்குமதி குறைவினால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சீராக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அத்தியாவசியமற்ற பல பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளதால் டொலருக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தமது வருமானத்தை உத்தியோகபூர்வ வழிகளில் அனுப்புவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ள அதேவேளை, எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு முதலீடுகளுடன், நடுத்தர காலத்தில் ரூபாவின் மதிப்பு மேலும் உயரக்கூடும் என்றார். ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்,ரூபாவின் பெறுமதியை மெதுவாக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி தலையிட்டதையும் அமைச்சர் உறுதிப்படுத்தினார். இந்த வருடம் மத்திய வங்கி 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை உள்நாட்டு சந்தையில் இருந்து கொள்வனவு செய்துள்ளது. குறுகிய கால நன்மைகள் மாத்திரமன்றி, நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் நீண்டகால…
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையக்குழுவால் (NMRA) அங்கீகரிக்கப்பட்ட தோல் பராமரிப்பு கிரீம்களை மட்டுமே பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ‘குளுதாதயோன்’ ( Glutathione) ஊசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இலங்கை தோல் மருத்துவ நிபுணர்கள் சங்கம் (SLCD) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. குளுதாதயோன் ஊசி இலங்கை உட்பட எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப்படவில்லை என்று தோல் பராமரிப்பு மற்றம் அழகுசாதன ஆலோசகர் தோல் மருத்துவர் நயனி மதரசிங்க ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட்டேர் பக்கத்தில் பதிவித்துள்ளார் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வர்த்தகர்கள் மீது மத்திய சுற்றாடல் அதிகாரசபை இன்று முதல் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது. இதன்படி, ஒருமுறை பயன்படுத்தி கழிக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் கரண்டிகள், ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகள், கப் (யோகட் கப் தவிர), கரண்டி, முட்கரண்டி மற்றும் கத்திகள், பிளாஸ்டிக் மலர் மாலைகள், பிளாஸ்டிக் தயிர் கரண்டி போன்ற ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு CEA தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் பலமுறை தடை விதிக்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று பல பொருட்களுக்கான தடையும் அமலுக்கு வந்தது. இந் நிலையிலேயே மேற்கண்ட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தமது தனிப்பட்ட விபரங்களை வெளிநபர்களுக்கு வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் எச்சரித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பொது மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது தனிப்பட்ட தகவல்களை அறியாதவர்களுக்கு வழங்க வேண்டாம். குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், சாரதி அனுமதி பத்திர இலக்கம், அவற்றின் பிரதிகளுடன், வங்கி கணக்கு விபரங்களையும் வழங்க வேண்டாம். விசேடமாக வங்கி கணக்கு தொடர்பில் குறுந்தகவல் ஊடாக பெறப்படும் OPT இலக்கத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் யாருக்கும் வழங்க வேண்டாம். பல்வேறு விதமான கவர்ச்சிகரமான சலுகைகள் வரலாம், அவற்றால் ஏமாற வேண்டாம் என பொலிஸார் சார்பில் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். இவ்வாறான மோசடியாளர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக உங்களை தொடர்பு கொள்ள…
நடைமுறையிலுள்ள இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) முறைமையை எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் இதற்கமைய குறித்த வரி முறைமையை அகற்றுவதற்கு ஏற்றாற் போல் பெறுமதி சேர் வரிச்சட்டத்தின் ஏற்பாடுகளை திருத்தம் செய்வதற்கும், அதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்கமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியளிப்பு வேலைத் திட்டத்திற்கமைய, பெறுமதி சேர் வரி பற்றிய முக்கிய இரண்டு மறுசீரமைப்புக்கள் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்கீழ், அதிகளவு விடுவித்தலை நீக்கி பெறுமதி சேர் வரி (VAT) முறைமையை மறுசீரமைப்புச் செய்தல், இலகு படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) முறைமை நீக்கப்பட வேண்டியுள்ளது. தற்போதுள்ள பெறுமதி சேர் வரியை விடுவித்தல் மீண்டும் அடிப்படை விதிமுறைகளுக்கமைய…
ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைக்கு அழைக்கப்பட்ட இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக 5 பெண்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர். வெலிகம கடற்கரையில் படகொன்று சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் குழுவும், பிரதிவாதிகள் குழுவும் பொலிஸ் நிலையத்திற்குள் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ரத்கம மற்றும் தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சந்தேக நபர் ஒருவரிடம் இருந்த கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அலவத்துகொட கமநல சேவை நிலைய அதிகாரிகள் இருவர் , இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். நெற்பயிர் நிலத்திற்கு மீட்பு சான்றிதழ் வழங்க ஒரு இலட்சம் ரூபாவை பெற்றபோது இலஞ்சம் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.