காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் திகதி குறித்து அறிவித்துள்ளது குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை ஜூலை 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது இதன்போது வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்படாத நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் மீது விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டுப் பயணத்தடையையும் நீக்கி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Author: admin
ராஜங்கனை சத்தாரதன தேரர் எதிா்வரும் 21 ஆம் திகதி வரை தொடா்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமா்ப்பணங்களை ஆராய்ந்ததன் பின்னா் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சூாியவெவ பிரதேச சபையின் செயலாளா் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். சூாியவெவவில் வாராந்த சந்தையை நடத்திச் சென்ற ஒருவருக்கு செலுத்தப்படவிருந்த 24 லட்சம் ரூபாய் பணத்திற்கான காசோலையை வழங்குவதற்கு குறித்த செயலாளா் 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை இலஞ்சமாக கோாியுள்ளாா். இதனையடுத்து வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இலஞ்சம் பெற முற்பட்ட வேளை, சூாியவெவ பிரதேச சபையின் செயலாளா், இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளா் தொிவித்தாா். சந்தேகநபர் இன்று(07) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது, இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 1216 வரை குறைந்துள்ளது. நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு அரசாங்க முன்னெடுத்த தீர்மானங்களால், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் அதேவேளை, அந்நிய செலாவணியை தக்கவைத்துக்கொள்ள புதிய வரி அறிமுகம், வட்டி வீதங்களை உயர்த்துதல் என்பவற்றுடன் இறக்குமதி கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக 2022 ஏப்ரல் மாதத்தில் 24.9 மில்லியன் டொலராக இருந்த வெளிநாட்டு பணவனுப்பல், இவ்வருடத்தில் 45.4 மில்லியன் டொலராக அதிகரித்தது. அத்துடன், பணவீக்கமும் 70 சதவீதத்திலிருந்து 25.5 சதவீதம் வரை குறைந்தது. ரூபாவின் பெறுமதியும் 20 சதவீதத்தினால் அதிகரித்தது. உத்தியோகபூர்வ ஒதுக்கம் 3 பில்லியன்…
க.பொ. த. சாதாரண பரீட்சை நிலையத்தில் செய்வதறியாது தவித்த மாணவி ஒருவருக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மொரகஹஹேன கோனாபொல பழனொறுவ மகா வித்தியாலயத்தின் பிரதான வாயிலின் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் (41013) ஏ. குலரத்னவே இந்த பாராட்டுக்கு உரியவராவார். குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று காலை பரீட்சை நிலைய வாயிலில் கடமையிலிருந்தபோது மாணவி ஒருவர் கண்களில் கண்ணீர் வழிய பதற்றத்தோடு வந்துள்ளார். பொலிஸ் அதிகாரி மாணவியிடம் விசாரித்த போது. எனது அட்மிஷனை (பரீட்சை அனுமதி அட்டை) கொண்டு வர மறந்துவிட்டேன். இன்னும் சில நிமிடங்களில் பரீட்சை ஆரம்பமாகிவிடும். என்னால் பரீட்சை எழுத முடியாது என கூறி அழ ஆரம்பித்துள்ளாள். பரீட்சை தொடங்க இன்னும் 8 நிமிடங்கள் மட்டுமே உள்ளதை உணர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் குலரத்ன, பாடசாலை பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ ஜீப்பில் வந்திருந்த பொலிஸ் அதிகாரியிடம் விரைந்து சென்று மாணவியின் இக்கட்டான நிலையை தெரிவித்தார்.…
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் ஆா்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரால் நீா்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆா்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த நீா்த்தாரை மற்றும் கண்ணீா்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிாிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவா்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சாா்பில் மொஹமட் நபி அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாா். பந்துவீச்சில் இலங்கை அணியின் துக்ஷ்மந்த சமீர 4 விக்கெட்டுக்களையும், வனிது ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினா். இதனையடுத்து 117 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவா்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சாா்பில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும், பெத்தும் நிஷங்க 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனா். போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடாின் ஆட்டநாயகனாகவும் துக்ஷ்மந்த சமீர தொிவு செய்யப்பட்டாா். இதற்கமைய…
இன்று கொழும்பில் நடத்தப்படவுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு மற்றும் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையங்களின் கோரிக்கைக்கு அமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் வரை நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோரை புகைப்படம் எடுத்து ‘வாட்ஸ்ஆப்’ குழுமத்தில் பதிவேற்றுவதன் மூலம், வீதி போக்குவரத்துச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சமூக செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக டீ சில்வா (வடமேற்கு) தெரிவித்தார். புத்தளம் நகரத்தில் கள மேற்பார்வையை மேற்கொண்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் இத்திட்டம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது; இதற்கமைய மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மட் அணியாமல் செல்வோர், மூன்று பேரை ஏற்றிச் செல்வோர், சட்டத்துக்கு முரணாக வாகனத்தை செலுத்துவோர் போன்றோரின் படத்தை, நாலக டி சில்வாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘வாட்ஸ்ஆப்’ குழுமத்தில் பதிவேற்றப்படும். அப்படத்தில் காணப்படும் வாகனத்துக்கு (வாகன இலக்கம் உரியமையாளருக்கு) எதிராக, பொலிஸ் வாகன போக்குவரத்துப் பிரிவால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, மக்களின் ஒத்துழைப்புடன் முறைகேடாக வாகனம் ஓட்டுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் வாகன, வீதி விபத்துகளை தவிர்த்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கண்டி – கலஹா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து சமையல் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளது எனவும், 5 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.