ஜூலை மாதத்தில் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் டொலர்களாக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. “இது சுமார் $1.5 பில்லியன்களுக்கு சமமான சீனாவின் மக்கள் வங்கியின் இடமாற்று வசதியை உள்ளடக்கியது” என்று இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. பயன்பாட்டிற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட இடமாற்று வசதியை கழித்தால், இலங்கை தனது கையிருப்பில் $300 மில்லியன் டாலர்களை நெருங்கி உள்ளது. இன்று (18), வியாழன் இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை மதிப்பாய்வில், தொழிலாளர்களின் பணம் வரவு ஜூலை மாதம் ஈட்டியதை விட குறைவாக இருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியது. இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு இரண்டு துறைகளும் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
Author: admin
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு ஒகஸ்ட் மாத இறுதிக்குள் இலங்கைக்கு வந்து பணியாளர் மட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்யும் என்று தெரிவித்தார். CBSL இன் சமீபத்திய பணவியல் கொள்கை முடிவுகளில் இன்று (18), வியாழன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த வீரசிங்க, முன்னர் கணித்தபடி சமீபத்திய மின்சார கட்டண உயர்வை சேர்த்த பிறகும் பணவீக்கம் 65% ஐ தாண்டாது என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார். ஜூன் மாதத்திற்கான மொத்த பணவீக்கம் 58.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8 வயது சிறுவனை கால்வாயில் வீசிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்கஹவெல பிரதேசத்தில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொல்கஹவெல, உடபொல கிராம உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கால்வாய் கரையில் யானை ஒன்று நீராடிக் கொண்டிருந்ததை குறித்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்துள்ளான். குடிபோதையில் அங்கு வந்த சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் சிறுவனை தூக்கி கால்வாயில் வீசியுள்ளமை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கால்வாயில் வீசப்பட்ட சிறுவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரான 54 வயதுடைய கிராம உத்தியோகத்தர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்ற நிலையில் சிறுமிகள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்ததாவது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி வந்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர். அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார். எனினும் நேற்று முன்தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து…
நாடு கடத்தப்படவுள்ள ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த கெய்லி பிரேசர் என்ற யுவதியினை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி கெய்லி பிரேசர் செய்த விண்ணப்பத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது. குடியகல்வு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு காரணம் கூறாமல் வீசாவை நிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ உரிமை உள்ளதாகவும், உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளாலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நீதிமன்ற மேன்முறையீட்டு நீதியரசர் குறிப்பிட்டிருந்தார். சமூக ஊடகங்களில் போராட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த கெய்லி ஃப்ரேசருக்கு வழங்கப்பட்ட விசாவை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கடந்த 10ஆம் திகதி தீர்மானித்திருந்தது. அத்துடன், 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு குறித்த திணைக்களம்…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,800 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 5 கிலோ எடை கொண்ட லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 2,320 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2 கிலோகிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 928 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்திற்கான அறிக்கையின்படி, தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச மாதச் செலவு 12,444 ரூபா என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கிறது. அதற்கைமய, கொழும்பு மாவட்டத்தில் வசிப்பதற்காக ஒருவருக்கு அதிகபட்சமாக 13,421 ரூபா தேவைப்படுவதாகவும், இது இலங்கையின் மாவட்டமொன்றில் நபரொருவர் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செலவிடும் அதிகூடிய தொகை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் வாழ்க்கைச் செலவு தேசிய மதிப்பீடாக 12,444 ரூபாவை விட 977 ரூபா அதிகமாகும். எனினும், இந்த அறிக்கையின் பிரகாரம், மொனராகலை மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அங்கு வசிப்பதற்கு 11,899 ரூபா போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வதற்குத் தேவையான தொகை 1,225 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த புள்ளிவிபரங்களின்படி,…
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் முப்பெரும் திறப்பு விழா நிகழ்வு கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் தலைமையில் இன்று (17)இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூவக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக உலக வங்கியின் நிதிப்பங்களிப்புடன் வடிவமைக்கப்பட்ட AHEAD நிகழ்ச்சித்திட்டத்தினூடாக கலை, கலாசார பீடத்தில் கட்டி முடிக்கப்பட்ட மாணவர் செயற்பாட்டு மையம் உபவேந்தரினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. குறித்த AHEAD நிகழ்ச்சித்திட்டத்தினூடாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடம் 120 மில்லியன் ரூபாய் நிதியுதவியினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. சகல வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டு மையத்தில் இளம்கலை மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், தொழில் வழிகாட்டல் அலகு, சமூக நல்லிணக்க மையம், மாணவர் பிரத்தியேக நூலகம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. AHEAD நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மாணவர் மையத்திற்காக சுமார் 15 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கலை, கலாசாரபீடத்தின்…
கல்முனை அஸ் – ஸுஹறா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எச்.எம்.நிஜம் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கு அறிவுரை கூறியதோடு சிரேஷ்ட மாணவத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட எம்.ஆர்.அப்துல்லாவிற்கு பட்டி அணிவித்து சின்னங்களை சூட்டி வைத்து கௌரவித்ததுடன் ஏனைய மாணவர்களுக்கும் சின்னங்களை சூட்டினார். இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரான பொறியியலாளர் எம்.அனப் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (எஸ்.எம்.எம்.றம்ஸான்)
தெற்கு தாய்லாந்தில் இன்று ஏற்பட்ட பல குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்களால் 7 பேர் காயமடைந்துள்ளனர். இருப்பினும் அங்கு வசிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தின் பாங்கொக்கில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜினாமா செய்யுமாறு கோரி பல அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஜூலை மாதம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற அவர் ஒரு வாரத்திற்கு முன்பு தாய்லாந்திற்கு வந்தார். மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற அவர், சிங்கப்பூர் சென்று, ஒரு வாரத்துக்கு முன்பு விசிட் விசாவில் தாய்லாந்தின் பாங்காக் வந்தடைந்தார். பாங்காக் வந்தடைந்தவுடன், கோட்டாபய ராஜபக்சவை அவரது தங்குமிடத்திலேயே இருக்குமாறும், வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஒகஸ்ட்…