இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்குள் 620 புதிய நோயாளர்கள் மற்றும் 81 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடும் இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த வருட முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 13 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மேலும், எண்ணிக்கையில் எச்ஐவி, எயிட்ஸ் தொற்றுக்கள் 4,556 இலிருந்து 5,176 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 165 புதிய நோயாளர்கள் மற்றும் 15 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனினும் 2022 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 1,520 எயிட்ஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
( கல்முனை நிருபர்) அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேச செயலக பிரிவின்,கல்முனை வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சிரேஷ்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத் வெள்ளிக்கிழமை (16)கடமையேற்றுக் கொண்டார். கல்முனை பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி முன்னிலையில் கல்முனை வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சிரேஷ்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத் கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட தலைமை சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், சிரேஷ்ட கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா,மகாசங்க சிரேஷ்ட உதவிமுகாமையாளர் எம்.எம்.எம். மன்சூர்,சமுர்த்திப் பிரிவில் கடமையாற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர்களாக பதவி வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை மீண்டும் தமது கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை என கூறும் முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தமது எம்.பி.க்களுடன் இணைந்து கட்சியை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அனுமதியை தேர்தல்கள் ஆணைக்குழுவும் வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த எம்பிக்கள் தமது கட்சியுடன் இணைந்து செயற்பட வாய்ப்பு கிடைக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்தவினால் கையொப்பமிடப்பட்டு, கடந்த 12ஆம் திகதி, அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பிரகடனத்தின்படி, இதுவரை காலமும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கீழிருந்த சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பீடத்தினுள் அடிப்படைத் தத்துவம், குணபாடம், நோய் நாடல் மற்றும் சிகிச்சை ஆகிய மூன்று கற்றல் துறைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறைமையான சித்த வைத்தியத்தை முறையாகக் கற்பித்து அங்கீகரிக்கும் முனைப்புடன் கிழக்கு மாகாண சித்த வைத்தியர்கள் சங்கத்தினால், சித்த மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கான கோரிக்கை 2004ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்திடம் முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடத்தை ஸ்தாபிப்பதற்கு கிழக்கு பல்கலைக்கழகப் பேரவை தீர்மானித்ததுடன், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக திருகோணமலை,…
பொரலஸ்கமுவ, வெரஹெர மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு முன்பாக உள்ள சாரதி பாடசாலை ஒன்றில் போலி சாரதி அனுமதிப்பத்திரம் செயலாக்க நிலையம் ஒன்று சோதனையிடப்பட்டு அதன் உரிமையாளரும் மற்றுமொருவரும் போலி சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களுடன், இரண்டு தேசிய அடையாள அட்டைகள், ஒரு கடவுச்சீட்டு, ஒன்பது தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள், நான்கு ஓட்டுநர் உரிமங்கள் (அட்டைகள்), போலி தற்காலிக ஓட்டுநர் உரிமம் அச்சிடத் தயாரிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய கணினி மற்றும் 5 250 மில்லிகிராம் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கே சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படுவதுடன், அதனை முன்னிறுத்தி மிக அதிக விலைக்கு சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் தற்காலிக அனுமதிப்பத்திரம் விற்பனை செய்யப்படுவதாக நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொரலஸ்கமுவ வெரஹெர மோட்டார் திணைக்களத்திற்கு முன்னால் உள்ள ஓட்டுநர் பாடசாலையில்.இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூளின் விற்பனை அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கோதுமை மா, உப்புத்தூள் மற்றும் வர்ண தூள்கள் என்பன மிளகாய் தூளுடன் கலக்கப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார் சந்தையில் ஒரு கிலோகிராம் மிளகாய் தூள் 1,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், 40 சதவீதம் வரையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூள் சந்தையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் சந்தையில் மிளகாய் தூளின் விலை அதிகரித்துள்ளமையினால், அதிக இலாபத்தை ஈட்டுவதற்காக வர்த்தகர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய வர்ணம் சேர்க்கப்பட்ட கோதுமை மா, மிளகாய் தூளுடன் கலக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார தெரிவித்துள்ளார்.
2023 ஆண்டு டிசம்பருக்குள் மேலும் 800 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கவனத்தில் கொண்டு இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு வழங்கிய இலக்குக்கு இணங்க கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன. இந்த கட்டுப்பாடுகளை நாங்கள் காலவரையின்றி வைத்திருக்க முடியாது என்று அந்த அதிகாரி கூறியதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 1.6 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது என்று குறிப்பிட்டார். இது ஒரு வருடத்திற்கு முன்பு வெறும் 200 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. படிப்படியான பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களை மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களால் கட்டியெழுப்பும் இலக்கை ஐஆகு இலங்கைக்கு வழங்கியுள்ளது. வாகனங்கள் மீதான இறக்குமதி தடையை…
சந்தையில் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் டொலரின் பெறுமதிக்கு அமைய கோதுமை மாவின் விலை தீர்மானிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, பெரும்பாலான வெதுப்பகங்கள் அதிக விலைக்கே தொடர்ந்தும் பொருட்களை வழங்குவதாக உணவக உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டு கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கோதுமை மா இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் செயற்பட வேண்டுமென அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார். கோதுமை மா இறக்குமதியை நிறுத்தாமல் ஒரு கிலோ மாவின் விலையை 180 முதல் 170 ரூபா வரை குறைத்திருந்தால், பாண் ஒன்றின் விலை 10 ரூபாவுக்கு மேல் குறைக்கப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த கொலைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரரின் 23 வயதுடைய சகோதரர் ஒருவர் அச்சங்குளம் கிராமத்தில் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -இதன் போது நேற்றைய தினம் சனிக்கிழமை காலை குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற 23 வயதுடைய குறித்த இளைஞனை குறித்த யுவதியின் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதன் போது காயமடைந்த குறித்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகோதரர் தாக்கப்பட்ட விடையம் குறித்து அறிந்த கொண்ட 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரான குறித்த இளைஞன் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன் போது குறித்த யுவதியின் உறவினர்களுக்கும், தாக்குதலுக்குள்ளான இளைஞனின் சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி…