இலங்கையில் இந்த வருட இறுதிக்குள் நிலைமை சீராக இருந்தால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நம்பிக்கையுடன் கூற முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெலியஅத்த, சிட்டினமாலுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த வருட இறுதிக்கு முன்னர், இன்னும் ஓரிரு சந்தர்ப்பங்களில் எரிபொருளின் விலையும் குறையலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களின் விலை குறைவதையே எதிர்பார்க்கின்றனர் மாறாக அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஊழலுக்கு எதிரான சட்டமூலம் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
நாட்டில் எவ்வித எரிபொருட்களிலும் தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிவாயு நிரப்பு நிலையங்களில் 95 பெற்றோல் உட்பட வேறு எந்த பெற்றோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 95 பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக வௌியான செய்தியை தொடர்ந்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் நாளாந்த 95 பெற்றோலின் தேவை 80-100 மெட்ரிக் தொன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நிலையங்களில் போதுமான அளவு இருப்புக்கள் உள்ளதாகவும், தொடர்ச்சியாக அனைத்து ஓர்டர்களும் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், 9000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலுடன் கூடிய அடுத்த கப்பல் எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCSL) தலைவர் பதவிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பெயரொன்று முன்மொழியப்பட்டுள்ளது. உத்தேச பெயர், அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள நிலையில், உத்தேச பெயருக்கான அனுமதி கிடைக்கும் என ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரே இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும்திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.…
ஹிஜ்ரி 1444 துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை (19) மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள், வளிமண்டளவியல் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டின் எப்பிரதேசத்திலாவது துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112 432110, 0777 316415 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொள்கின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் கேட்டு திறைசேரி செயலாளரிடம் அடுத்த வாரம் மற்றுமொரு கோரிக்கையை விடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நிலை நல்ல நிலையில் இருப்பதாக அரசாங்கமே அறிக்கைகளை வெளியிடுவதால் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் கோரி தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் முன்னர் பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி காரணமாக பணத்தை வழங்க முடியாது என திறைசேரி செயலாளர் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். அதன்படி, உள்ளாட்சித் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் நாம் வினவிய போது, வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு விசேட சட்டமொன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வெறும் பிரேரணையால் இவ்வாறானதொன்றை…
தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வரும் ‘சதொச’வை மூடுவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. சதொச நிறுவனத்தை கலைத்து அதன் சொத்துக்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், சதொச மற்றும் அதன் ஊழியர்களை கலைப்பது தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் தொழிலாளர் அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாகவும் வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் இன்னும் நிறைவடையவில்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வங்கி மற்றும் நிதித்துறையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். முடிவுரை இல்லாத அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் சந்தை நம்பிக்கை வீழ்ச்சியடையக்கூடும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார். எனவே அது தொடர்பில் பொறுப்புடன் அறிக்கை வெளியிட வேண்டும் என அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சாதகமான உடன்பாட்டை எட்டுவதற்கு நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சாரம் வழங்கல், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்கள், நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைப் பணிகள் அல்லது உழைப்பு தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகும். மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கும் இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்கும் இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா அத்தியாவசியப் பொருளாக அறிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம், கோதுமை மா கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அத்தியாவசியப் பொருளாக வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சந்தையில் கோதுமை மாவின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கோதுமை மா இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, சந்தையில் கோதுமை மா விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை மா அத்தியாவசியப் பொருளாகப் பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.