அடுத்த மாதம் முதல் லொத்தர் சீட்டின் விலையை 40 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் லொத்தர் விநியோகஸ்தர்களின் தரகு பணத்தினை அதிகரிப்பதற்கு இணக்கம் வௌியிடப்படவில்லை என அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. தரகு பணத்தினை அதிகரிக்காவிட்டால், எதிா்வரும் ஜூலை 7ம் திகதி முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகவுள்ளதாக அந்த சங்கத்தின் பொது செயலாளர் பி. எஸ். எஸ். மாரசிங்க தெரிவித்துள்ளாா்.
Author: admin
வீடொன்றில் இருந்த சீமெந்து தூண் சரிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மாத்தறை, நெடொல்பிட்டிய, ரன்மாலு கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் அவரது தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். பாதி கட்டப்பட்ட வீட்டின் மேல் தளத்தில் இரண்டு சீமெந்து தூண்களுக்கு இடையில் ஊஞ்சல் போன்ற தொட்டிலை தந்தையும் மகளும் தயார் செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் மேல் தளத்தில் குறித்த சீமெந்து தூண் கம்பிகளை பயன்படுத்தி முறையான வகையில் நிர்மாணிக்கப்படாமல் நான்கு ஆணிகள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(19.06.2023) மீண்டும் உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (19.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 315.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 239.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 223.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி : இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 345.72 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 324.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 404.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 380.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை வர்த்தக வங்கிகளின் தரவுகளின் படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(19.06.2023) மீண்டும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து,…
கொட்டாவை – பொரளை மற்றும் கொட்டாவை – கல்கிஸ்ஸை ஆகிய வழித்தடங்களின் தனியார் பேருந்து பணியாளா்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனா். அந்த வழித்தடங்களில் 10 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்காமல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பேருந்து பணியாளா்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்பட்டுவருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐந்து இந்திய பண்ணைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரிகள், சிறிய உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், உள்ளூர் சந்தையில் விலை உயர்வு மற்றும் முட்டை தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தலா 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் வௌிநாட்டு அமைச்சர் ரோஹித போகொல்லாமக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின்சார கட்டணச் சலுகையை மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். “நாட்டின் சிரமங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன், மின்சாரக் கட்டணம் அதிகம், எரிபொருளின் விலை அதிகம். இப்போது ஜூலையில் திருத்தத்தில் இருந்து சில தொகை குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் 0 – 30, 30 – 60, 60 – 90 யூனிட்களுக்கு 27% மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிந்துள்ளோம். மின்சாரக் கட்டணத்துக்கு மேலும் உறுதியான நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் 2024 ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று(19) நடைபெறவுள்ளது. இன்று(19) மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிறைக்குழுவின் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மிஇய்யத்துல் உலமா உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். தலைப்பிறை பார்த்த பின்னர் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் தினம் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. வசதி படைத்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்க கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இற்றைக்கு சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறை தூதர் இப்ராஹிம் நபி அவர்களின்…
முன்னதாக எரிபொருள் விலைத்திருத்தம் மாதத்தின் முதலாம் திகதி முன்னெடுக்கப்பட்டது. எனினும், கடந்த எரிபொருள் விலைத்திருத்த காலப்பகுதியில் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்டவரிசை காணப்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உரிய முறையில் எரிபொருள் கையிருப்பை பேணாமையே அதற்கான காரணமாக அமைந்தது. எரிபொருள் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யவில்லை என்பது இதற்கு பிரதான காரணமாகும்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களின் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.