இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்துக்கான செஸ் தீர்வை (CESS) அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 17ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி 50 கிலோவுக்கு குறைந்த பொதிகளாக இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்து பொதி ஒன்றுக்கான செஸ் தீர்வை 5 ரூபாயில் இருந்து 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 50 ரூபாவுக்கும் அதிகமான பொதியாக அல்லது மொத்தமாக இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்துக்கான செஸ் தீர்வை, கிலோவுக்கு 3 ரூபாயில் இருந்து 5 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Author: admin
நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸாரால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வருடம் ஜூன் 18ஆம் திகதி வரை வாகன விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, கடந்த ஆறு மாதங்களில் 902 விபத்துகளில் மரணங்கள் சம்பவித்துள்ளன , 1,856 விபத்துகளில் பாரிய காயங்களும், 3,951 விபத்துகளில் சிறு காயங்களும், 2,096 விபத்துகளில் சேதங்களும் பதிவாகியுள்ளன. எனவே, இந்த விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து அரசு மற்றும் அனைத்து அரசு உதவி நிறுவனங்களும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போதைப்பொருள் பாவனையே விபத்துக்களின் முக்கிய அம்சமாகவும்,…
கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறைமையில் இருந்து 3,265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் முறைப்பாடு அளிக்க அல்லது கணினி தொடர்பான தகவல்களைப் பெற, 1962 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் உப அலுவலகங்கள் இணையவழியில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்த நபர்களின் கைரேகைகளை ஏற்றுக்கொள்ளும் பணியை இன்று ஆரம்பித்துள்ளது.
உள்நாட்டு கோதுமை மா நிறுவனங்கள் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்குமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (18) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அமைச்சர், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் விரைவில் குறைக்க வேண்டும். எவ்வாறாயினும், பேக்கரி பொருட்களுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலையை ஒப்பிடும் போது குறையாத காரணத்தினால் தமது உற்பத்திகளின் விலைகளை குறைப்பது சிக்கலாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதேவேளை, கோதுமை மா பொருட்களின் விலைகளுக்கும் கட்டுப்பாட்டு விலை தேவை என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கோதுமை மாவுக்கு மாத்திரமல்ல அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலை அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவ்வாறான…
100,000 வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைவருக்கும் வேலைகள் உறுதி செய்யப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார். இதில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள சபைக் கூட்டத்தில் உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒப்பந்தத்திற்குப் பின்னர் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை்கு மிகப்பெரிய நிதி உதவியைக் குறிக்கும் இந்த நிதி, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கை, இந்த ஆண்டு 2% பொருளாதாரச் சுருக்கத்தையும் அதைத் தொடர்ந்து வரும் ஆண்டில் வளர்ச்சிக்கு திரும்பும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட உலக வங்கி ஆதரவில், $500 மில்லியன் பட்ஜெட் உதவிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் உலக வங்கி ஆதாரத்தின்படி, தலா $250 மில்லியன் என இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு முதல் தவணை விரைவில் வெளியிடப்படும், இரண்டாவது தவணை ஒக்டோபரில்…
சந்தையில் கோழி இறைச்சியின் விலையை துரிதமாக அதிகரிக்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஒரு கிலோகிராம் கோழி இறைச்சிக்கு 1,450 முதல் 1,500 ரூபா வரை வர்த்தகர்கள் அறவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, சந்தையில் இன்னும் முட்டை தட்டுப்பாடு நிலவுகிறது வர்த்தமானி மூலம் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
விவசாய சேவை மத்திய நிலையங்களுக்கு போதியளவு யூரியா உரம் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சனசமூக நிலையங்களுக்கு மேலதிகமாக 5,100 மெற்றிக் தொன் யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 1,000 மெற்றிக் தொன் யூரியா இன்று (19) விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏதேனும் விவசாய சேவை நிலையத்தில் யூரியா உரம் கிடைக்காத பட்சத்தில், 077 551 0674 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் விற்பனை முகாமையாளரை தொடா்பு கொள்ள முடியும். அத்துடன் இலங்கை உர நிறுவனத்தின் விநியோக முகாமையாளரின் 077 444 1417 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தேசிய வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அந்த ஆய்வு கூடத்தில் பரிசோதனைகளை நிறுத்துவதன் மூலம் மாதத்திற்கு சுமார் 300 இலட்சம் ரூபா பெறுமதியான பரிசோதனைகள் தனியாரிடம் செலுத்தப்படும் என அதன் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு பரிந்துரைக்கப்படும் ஒரு பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் மூலம் 20 முதல் 30 வீதம் வரை கமிஷன் வழங்கப்படும் என மருத்துவ ஆய்வக அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் நேற்று (18) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தேசிய வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் பிரிவினால் நோயாளிகள் தினமும் சுமார் 200 சிறுநீர் கலாச்சார பரிசோதனைகளை (யூரின் கல்ச்சர்) தனியார் துறையிலிருந்து செய்து கொள்ள வேண்டும் என்றும் ரவி குமுதேஷ் கூறினார். சிறுநீர் பரிசோதனை, சளி நுண்ணுயிரியல் பரிசோதனை, ஆண்டிபயாடிக் மருந்து உணர்திறன் சோதனை,…
நுளம்புக்கடியை தடுக்க பாடசாலை நேரங்களில் குழந்தைகள் கை, கால்களை மறைக்கும் வகையில் நீண்ட ஆடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு தொடர்பான மேல் மாகாண உப குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் கல்வி அமைச்சும் கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இவ்வருடம் 44,500 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு 27 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.